Header Ads



சவுதி அரேபியாவில் 14 பேருக்கு மரண தண்டனை

சவுதி அரேபியாவில் பல்வேறு தீவிரவாத தாக்குதல் சம்பவங்களில் தொடர்புடைய 14 பேருக்கு மரண தண்டனை விதித்து அந்த நாட்டின் நீதிமன்றம் நேற்று -01- தீர்ப்பு அளித்தது.

உலகமெங்கும் நடந்து வருகிற வன்செயல்கள், சவுதி அரேபியாவையும் விட்டு வைக்கவில்லை. அங்கு 2011-13 காலகட்டத்தில் போராட்டங்கள் நடத்தி, அதில் வன்முறையை கட்டவிழ்த்து விட்டு, துப்பாக்கியால் சுட்டும், பெட்ரோல் குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தி, பல போலீசாரின் உயிரைப்பறித்த ஷியா பிரிவினருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 

மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் முக்கியமானவர், ஷியா பிரிவு தலைவர் நிமர் அல் நிமர் ஆவார். இந்த நிமர் அல் நிமர் உள்பட 47 தீவிரவாதிகளுக்கு கடந்த ஜனவரி மாதம் ஒரே நாளில் மரண தண்டனையை நிறைவேற்றி, சவுதி அரேபியா அதிரடி நடவடிக்கை எடுத்தது.

அதை சவுதி கிராண்ட் முப்தி ஷேக் அப்துல் அஜிஸ் அல் ஷேக், டெலிவிஷனில் தோன்றிப் பேசி நியாயப்படுத்தினார்.

இந்த நிலையில் சவுதி அரேபியாவில் ஷியா பிரிவினர் சிறுபான்மையினராக உள்ள காதிப் பகுதியில் நடந்த பல்வேறு தீவிரவாத தாக்குதல் சம்பவங்களில் தொடர்புடைய 14 பேருக்கு மரண தண்டனை விதித்து அந்த நாட்டின் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்தது. மேலும் 9 பேருக்கு பல்வேறு கால அளவில் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. 

No comments

Powered by Blogger.