வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் செய்த, பிரதியமைச்சரின் போராட்டம் முடிந்தது
ஹொரணை - புளத்சிங்ஹல வீதியை மறித்து பிரதியமைச்சர் பாலித்த தெவரபெரும முன்னெடுத்த ஆர்ப்பாட்டம், நீதிமன்ற உத்தரவையடுத்து, 3.30 மணித்தியாலங்களின் பின்னர் முடிவுக்கு வந்தது.பிரதியமைச்சர் பாலித்த தெவரபெரும மற்றும் மாணவர்களின் பெற்றோர் ஆகியோர் இணைத்து, ஹொரணை வலய கல்விப் பணிமனையின் முன்னால் இன்று (06)காலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அடிமட்டம் மற்றும் பென்சிலால் மாணவர்களை தண்டித்த ஆசிரியர் மற்றும் அரசியல் தலையீட்டால் நியமனம் பெற்ற அதிகாரியை மாற்றுமாறு கோரி இந்த ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக ஹொரணை - புளத்சிங்ஹல வீதியில் கடும் வாகனநெரிசல் ஏற்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டக்காரர்களை அங்கிருந்த அகற்றமுற்பட்டபோது, பொலிஸாருக்கும் பிரதேச மக்களுக்கும் இடையில் முரண்பாடு தோன்றியதாக தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment