Header Ads



சிரேஷ்ட மாணவர்கள் வெறிதனமான பகிடிவதை - 3 புதிய மாணவர்கள் காயம்

நில்வள தேசிய கல்விக் கலாச்சாலையில் கல்வி கற்கும் விஞ்ஞான பீட சிரேஷ்டஆசிரியர் பயிற்சி மாணவர்கள் மூவரை அக்குரஸ்ஸ பொலிஸார் இன்று கைதுசெய்துள்ளனர்.

இவர்கள் விஞ்ஞானப் பீடத்திற்காக கல்வி கற்க வந்திருக்கும் கனிஷ்டஆசிரியர்கள் இருவரை பகிடிவதைக்கு உட்படுத்தியதன் காரணமாகவே இவர்கள் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மாணவர்கள், கம்புருப்பிட்டிய மற்றும் கொடக்காவல பிரதேசத்தைசேர்ந்தவர்கள் என்றும், சிறிய காயங்களுக்கு மத்தியில் தற்போது அக்குரஸ்ஸவைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார்தெரிவித்துள்ளனர்.

சிரேஷ்ட மாணவர்களின் தாக்குதலின் பின் தலைச்சுற்று, மயக்க நிலை ஏற்பட்டதாகபாதிக்கப்பட்ட மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் விஞ்ஞானப் பீடத்தின் தலைவர் சுனில் செதர செனரத் பதிவு செய்தமுறைப்பாட்டிற்கமைய மூவரையும் கைது செய்துள்ளதாக அக்குரஸ்ஸ பொலிஸார்குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் அக்குரஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்துவருகின்றனர்.

1 comment:

  1. பொது மக்களின் வரிப்பணத்தால் வடியும் கொழுப்பு

    ReplyDelete

Powered by Blogger.