ஜனாதிபதியை அச்சுறுத்தும் அதிகாரிகள், கீரியும் - நாகமும் நடாத்துகிற நல்லாட்சி
-நஜீப் பின் கபூர்-
கொஸ்கம சாலாவை இராணுவ ஆயுதக் களஞ்சியத்தில் நிகழ்ந்த வெடிப்பும் அங்கிருந்த மக்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு சிதறி ஓடிய காட்சிகளும் அழிந்து போன கட்டிடங்களும் 2009 க்கு முன்னர் வடக்கு கிழக்கு மக்கள் அனுபவித்த துன்பங்களை ஒரு முறை ஞாபகமூட்டி இருக்கின்றது.
மறுபுறத்தில் மைத்திரி ஆட்சி பீடம் ஏறியது முதல் சற்று அடங்கிப்போன இனவாதிகள் மீண்டும் முஸ்லிம்களுக்கு எதிரான தமது வன்முறைகளைத் துவங்கி இருப்பதையும் அவதானிக்க முடிகின்றது.
நிதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை மிகப் பெரும் வாக்குகள் வித்தியாசத்தில் மண்கவ்வச் செய்து நல்லாட்சி அரசாங்கம் தனது பலத்தை மீண்டும் உறுதி செய்திருக்கின்றது.
இந்த சமகால நாட்டு நடப்புக்களுக்கு மத்தியில் ஜனாதிபதியை அச்சுறுத்தும் அதிகாரிகள் பற்றியும், கீரியும் - நாகமும் போல் நின்று நகர்கின்ற நல்லாட்சி பற்றிய சில தகவல்களை நமது வாசகர்களுடன் பர்கிந்து கொள்ளலாம் என்று எதிர்பார்க்கின்றோம்.
ஜனாதிபதியை அச்சுறுத்தும் அதிகாரிகள்!
சில தினங்களுக்கு முன்னர் 128 உயர் மட்ட அதிகாரிகள் ஒன்று சேர்ந்து ஜனதிபதிக்கு ஒரு கடிதத்தை அனுப்பி வைத்திருக்கின்றார்கள். அந்தக் கடிதத்தில் தாங்கள் கடந்த காலங்களில் செய்த சட்டவிரோதமான நடவடிக்கைகளுக்கு எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்கக் கூடாது என்று அவர்கள் அந்தக் கடிதத்தில் கேட்டிருக்கின்றார்கள். இதனையும் மீறி எம் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படுமாயின் நாம் ஒத்துழையாமை நடவடிக்கைகளில் இறங்குவோம் என்றும் அதில் எச்சரிக்கை செய்யப்பட்டிருக்கின்றது என்;று தெரிகின்றது.
நாம் அறிந்த வகையில் உலகில் சட்டவிரோதமான நடவடிக்கைகளுக்கு காரணம் கேடகக் கூடாது என்று அரச உயர் மட்ட அதிகாரிகள் ஒரு நாட்டுத் தலைவருக்கு எச்சரிக்கைக் கடிதம் அனுப்பி வைத்திருப்பது வரலாற்றில் இது முதல் முறையாக இருக்கும் என்று கருதுகின்றோம்.
இது என்ன கதை என்று இப்போது பார்ப்போம். கடந்த மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் அரச சுற்று நிருபனங்களுக்கு முற்றிலும் முரண்பட்ட விதத்தில் அரச பணமும் வளங்களும் கையாளப்பட்டிருக்கின்றது. இப்படி அவற்றைக் கையாண்டதால் நாட்டுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய்கள் நஷ்டமும் ஏற்பட்டிருக்கின்றது.
கடந்த அரசின் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு நாம் பதவிக்கு வந்தால் நடவடிக்கை எடுப்போம் என்ற முக்கிய கோஷத்தை முன்னிருத்தியே இன்றைய அரசாங்கம் பதவிக்கு வந்தது. இன்று சிவில் சமூகம் மற்றும் ஜேவிபி போன்ற அமைப்புக்கள் இது பற்றிக் கொடுக்கின்ற அழுத்தங்கள் காரணமாக தற்போதய அரசாங்கம் இது விடயத்தில் நடவடிக்கைகளில் இறங்கியது.
அதிகாரிகளும் இந்த நடவடிக்கைகளை ஆமை வேகத்திலேயே நகர்த்திக் கொண்டிருந்தனர். அரசினதும் நீதித் துறையினதும் இந்த மந்த நடவடிக்கைகளைக் கண்ட சிவில் சமூகங்கள் இது விடயத்தில் தமது அதிருப்தியை ஜனாதிபதிக்கு கடுமையாக வெளிக்காட்ட, இந்த விடயங்களில் துரிதமாக சட்ட நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரி தனது நிலைப்பாட்டைத் தெரிவித்தது, மட்டுமல்லாமல் இந்த விடயத்தில் மேற் கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகள் தனக்கும் திருத்தியற்ற விதத்திலே நடந்து வருகின்றது என்று அவரும் அங்கு குறிப்பிட்டிருக்கின்றார்.
எனவே கடந்த ஆட்சியில் நடந்த சட்ட விரோத நடவடிக்கைகள் விடயத்தில் நீத்ததுறை நடவடிக்கைகளில் இனியும் சாக்குப் போக்கு கூற முடியாது என்ற இக்கட்டான நிலையில் ஏதாவது நடவடிக்கை என்று இறங்க வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டது.! இந்த நிலையில்தான் தற்போது மஹிநத காலத்தில் முக்கிய அதிகார பதவிகளில் இருந்த அதிகாரிகள் தமது நிலைப்பாடு தொடர்பாக ஜனாதிபதிக்குத்ரெட் நோடீஸ் அனுப்பி வைத்திருக்கின்றார்கள். இவர்களின் இந்த நடவடிக்கை தற்போது சிவில் சமூகத்தினர் மத்தியில் கடும் கோபத்திற்கு இலக்காகி இருக்கின்றது.
இவ்வாறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட அதிகாரிகள் 128 பேரில் ஆறுபேர் பிரதமர் காரியலயத்திலும் தற்போது உயர் பதவிகளில் இருந்து வருகின்றார்கள். இவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கை களை மேற் கொள்ள நீதித்துறை முயன்றது. அப்போது இவர்கள் பிரதமரை நாடி மஹிந்த காலத்தின் தமக்கிருந்த அழுத்தங்கள் காரணமாகவே நாம் இப்படித் தவறான-பிழையான நடவடிக்கைகளில் இறங்க வேண்டி ஏற்பட்டது எனவே சட்ட மா அதிபர் எங்கள் மீதான நடவடிக்கைகளைக் கைவிடுவதற்கு உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கின்றார்களள்.
இது பற்றி சட்ட மா அதிபரிடமும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டிருக்கின்றது. எனவேதான் ஜேவிபி தலைவர் அணுரகுமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் பிரதமரிடம் கேட்ட கேள்விக்கு சட்ட மா அதிபரின் பதில் வரும் வரை இவர்கள் விடயத்தில் நீதித்துறை நடவடிக்கைகளை மேற் கொள்ளாதிருக்கின்றது என்று பிரதமர் அன்று பாராளுமன்றத்தில் வரும் கொடுத்திருக்கின்றார்.
இது விடயத்தில் நாம் கேட்க்கின்ற கேள்வி என்னவென்றால் அரச பணத்தில் படித்து அதிகார பதவியில் அமர்கின்றவர்கள் காவல் நாய்களைப்போல் அரச பணத்தையும் வளங்களையும் பாதுகாப்பதற்கு சட்டரீதியாகவும் அரச விதி முறைகளின் கீழும் கடமைப்பட்டிருக்கின்றார்கள்.
எனவே இது தங்களுக்குத் தெரியாமல் நடந்த விடயம் அல்லது அழுத்தம் காரணமாக நாம் சட்ட முரணான நடவடிக்கைகைகளில் அவர்களுக்கு ஒத்துழைக்க வேண்டி இருந்தது என்று சாட்டுச் சொல்லும் போது இதற்கு சட்டம் தனது பதிலை எப்படி வழங்க முடியும் எனவேதான் சட்ட விரோத நடவடிகைகளுக்கு சட்ட அங்கிகாரம் கோரி ஜனாதிபதியை அதிகாரிகள் அச்சுறுத்துகின்ற உலகில் முதல் நாடு நமது தேசம் என்று இதனை நாம் குறிப்பிடுகின்றோம்.
இந்த அதிகாரிகள் காலம் பூராவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவே அதிகாரத்தில் இருப்பார் என்று எண்ணிக் கொண்டிருந்தவர்கள் என்று தான் நாம் கருதுகின்றோம். இவர்கள் ஒரு போதும் தமக்கு இப்படி ஒரு நெருக்கடி நிலை வரும் என்று எதிர் பார்த்திருக்க மாட்டார்கள்.
இதுவிடயத்தில் அன்று கட்டளை யிட்ட முன்னாள் ஜனாதிபதியும் அவரின் அரசியல் நெறியாளர் பசில், மற்றும் அரசியல் அதிகாரிகளும்; இந்த விடயத்தில் அவ்வாறு தவறு நடந்திருந்தால்நஅந்த அதிகாரிகளிடம்தான் கேள்வி கேட்க வேண்டுமே அல்லாமல் இது பற்றி எம்மிடம் எந்தக் கேள்வியும் எழுப்பக்கூடாது என்று தான் அவர்கள் தற்போது பகிரங்கமாக் கூறி வருகின்றார்கள்.
எனவே இக்கட்டில் மாட்டிக் கொண்டிருக்கின்ற அதிகாரிகளுக்கு வக்காளத்து வாங்கப் போகின்ற விடயத்தில் தற்போதய பிரதமர் ரணிலுக்கும் இதனால் நெருக்கடி நிலை வந்திருக்கின்றது. நாம் அறிந்த வரையில் இப்படித் தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்ட அதிகாரிகளும் மஹிந்த காலத்தின் நிறையவே சட்டத்திற்கு முரணாக நிதியை வருமானமாகப் பெற்று வந்திருக்கின்றார்கள் அல்லது சலுகைகளை அனுபவித்திருக்கின்றார்கள். என்று தெரிக்கின்றது.
கீரியும் - நாகமும் நடாத்துகிற நல்லாட்சி!
சட்டவிரோத நடவடிக்கைளுக்கு சட்ட அங்கிகாரம் கோருகின்ற அந்த கதை அப்படி இருக்க கீரியும் - நாகமும் நடாத்துகிற நல்லாட்சி! கதை பற்றி இப்போது பார்ப்போம். ஆளும் தரப்பிலுள்ள சுதந்திரக் கட்சி காரர்கள் பிரதமர் ரணில் தலைமையில் நடக்கின்ற கூட்டங்களைப் பகிஷ்கரித்து வருவது தெரிந்த விடயமே. எனவே அண்மையில் ஜனாதிபதி மைத்திரி தலைமையில் இரு தரப்பும் இணைந்த ஒரு சந்திப்பு நிகழ்ந்ததால் அனைவரும் போல் ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்குப் போய் இருக்கின்றார்கள்.
அங்கு கடந்த எட்டு, ஒன்பதாம் திகதி நடந்த நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கை இல்லாப் பிரேரணை தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றிப் பேசப்பட்டிருக்கின்றது. அப்போது பிரதி அமைச்சர் லசந்த அழகியவன்ன இந்த நிதி அமைச்சர் நடவடிக்கைகள் விடயத்தில் எங்களுக்கு நிறையவே முரண்பாடுகள் இருக்கின்றது.
அத்துடன் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன மஹேந்திரன் விடயத்திலும் பிரச்சினைகள் இருக்கின்றது. எங்களுடைய அரசங்கம் பற்றிய நல்லெண்ணத்தை இவரும் இருவருடைய மருமகனும் முதலிலேயே களங்கப்படுத்தி விட்டார்கள் எனவே இவர்கள் பற்றிப் பேசுவதற்கு ஜனாதிபதியான நீங்களும் பிரதமரும் எங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் தர வேண்டும் என்று கேட்டு தனது வலியை அங்கு கொட்டி இருக்கின்றார் அழகு!
இவரது கோரிக்கைகளுக்கு அங்கு சாதகமான பதில் கிடைத்திருக்கின்றது அந்த சந்திப்பை உடனடியகச் செய்வதற்கும் ஜனாதிபதியும் பிரதமரும் இணங்கி இருக்கின்றார்கள். இந்த ஜனாதிபதி தலைமையில் நடை பெற்ற கூட்டத்தில் பேசிய சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தன ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் வரலாற்றில் முதல் முறையாக ஒன்றிணைந்து அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்தி இருக்கின்றது. இதுவரை கீரியும் நாகமுமாக நின்றவர்கள் தான் இப்போது ஒன்றிணைந்திருக்கின்றோம்.
எனக்கும் நிதி அமைச்சர் மற்றும் அர்ஜூன மஹேந்திர விடயத்தில் பிரச்சினைகள் இருக்கின்றது. என்றாலும் இந்த நெருக்கடியான நேரத்தில் நாங்கள் நிதி அமைச்சர் ரவிக்கு விரும்பியோ விரும்பாமலோ ஒத்துழைத்து சதிகாரர்களின் இந்த நம்பிக்கை இல்லாப் பிரரேரணை யைத் தோற்கடிக்க வேண்டி இருக்கின்றது. இந்த அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு நாம் ஒரு போதும் உடந்தையாக இருக்க முடியாது.
நாம் இந்த விடயத்தில் ஐக்கியத்தைக் கடைப்பிடிக்க வேண்டி இருக்கின்றது. நிதி அமைச்சர் மற்றும் அர்ஜூன மஹேந்திரன் போன்றவர்களின் நடவடிக்கைகளை பற்றி நாம் பின்னர் பார்த்துக் கொள்வோம் என தனது நிலைப்பாட்டை கூறிய போது அமைச்சர் சரத் அமுனுகம மத்திய வங்கி ஆளுநருக்கு அங்கு வக்காளத்து வாங்கப் போய் அமைச்சர் டிலான் பெரேராவிடத்தில் நன்றாக வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டி ஏற்பட்டது. எமக்குக் கிடைக்கின்ற பிந்திய தகவல்களின் படி ஆளுநரின் பதவிக் காலம் நீடிக்கப்பட வாய்ப்புக்கள் கிடையாது என்று தெரிகின்றது.

எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். ஒருவரைவிட ஒருவர் உயர்ந்தவர் இல்லை வேலியே பயிரை மேய்கின்றது என்பதே உண்மை
ReplyDeleteYahapalanaya is good for nothing.
ReplyDeleteBetter.govt not stable is good for our community.otherwise yahapalana also dominate us.will start to oppress
ReplyDeleteஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எந்தக் காரணம் கொண்டும் தயவு தாட்சண்ணியம் காட்டக் கூடாது. சிவில் சமூகமும், இவற்றுக்கு எதிராக இருக்கும் அரசியல் வாதிகளும், மக்களும் வீதியில் இறங்கி இந்த நல்லாட்சி அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

ReplyDelete