செவிடன் காதில் ஊதிய சங்குபோல "இப்தார்கள்"
-Mohamed Naushad-
அண்மையில் கொலன்னாவ தேர்தல் தொகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பெரும்பான்மையான முஸ்லிம்கள் தமது வீடு வாசல்களையும் வர்த்தக நிலையங்களையும் இழந்து நிர்க்கதி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இன்னமும் சரியான நிவாரணங்கள் பலருக்கு வழங்கப்படவில்லை. பள்ளி வாசல்கள் முழுமையாக பழைய நிலைக்கு திரும்பவில்லை.
அண்மையில் கொலன்னாவ தேர்தல் தொகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பெரும்பான்மையான முஸ்லிம்கள் தமது வீடு வாசல்களையும் வர்த்தக நிலையங்களையும் இழந்து நிர்க்கதி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இன்னமும் சரியான நிவாரணங்கள் பலருக்கு வழங்கப்படவில்லை. பள்ளி வாசல்கள் முழுமையாக பழைய நிலைக்கு திரும்பவில்லை.
மக்கள் மீண்டும் வந்து வாழக்கூடிய சூழல் சரியாக முழுமையாக ஏற்படுத்தப்படவில்லை. புனித றமழான் மாத விஷேட கடமைகளை கூட மகிழ்வாக நிறைவேற்றிக் கொள்ள முடியாத நிலைக்கு இந்தப் பிரதேச மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் இவ்வருட ஆடம்பர மற்றும் ஐந்து நட்சத்திர இப்தார் நிகழ்வுகளைக் கைவிட்டும் றமழான் மாத உம்றா பயணங்களை தவிர்த்தும் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு உதவிக்கரம் நீட்டுமாறு உலமாக்கள் மிம்பர்களிலும் ஊடகங்களிலும் தொடர்ந்து முழங்கி வருகின்றனர்.
ஆனால் சிலருக்கு அது செவிடன் காதில் ஊதிய சங்கு போல் ஆகியுள்ளது. ஐந்து நட்சத்திர இப்தார்கள் இவ்வருடமும் நடைபெற தொடங்கியுள்ளன. அந்த நிகழ்வுகளுக்கு சாப்பிட வழியில்லாத கோட் ஷூட் போட்ட ஏழைகள் பலர் செல்வதையும் காணக்கூடியதாக உள்ளது. கொழும்பில் றமழான் மாதத்தில் எப்படி கடை வீதிகளில் கையேந்த ஒரு கூட்டம் கிளம்பி விடுமோ அதேபோல் இப்தாருக்கும் ஒரு கூட்டம் கொரவமாக கிளம்பி விடும். இது இந்த சமூகத்தின் அவலம்.

No unity between us...
ReplyDeleteBro
ReplyDeleteThis picture is where I work , how did you get it be careful may violation
Sevidan kaathil oothia iptar may be in southern part of Sri lanka,not in the rest part of Sri Lanka.
ReplyDeleteஇப்தார் ஏற்பாடு செய்வதென்றால் பள்ளிவாயல் அல்லது வீட்டில் ஏற்பாடு செய்யலாமே! ஏன் வீணாக செலவழித்து ஹோட்டல்களில் ஏற்பாடு செய்கிறீர்கள். வீண்விரயத்தை அல்லாஹ் விரும்புவதில்லை. இதற்கு அல்லாஹ்விடத்தில் இவர்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும்.
ReplyDelete