Header Ads



சிறைக்குச் சென்ற மகிந்த ராஜபக்ச, தாஜூடீன் கொலை சந்தேகநபரை சந்தித்தார்


றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூடீன் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்கவை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று  -06- திங்கட்கிழமை சந்தித்துள்ளார்.

வெலிகடை விளக்கமறியல் சிறைக்கு சென்ற முன்னாள் ஜனாதிபதி, அங்கு சிறையில் வைக்கப்பட்டுள்ள அனுர சேனாநாயக்கவை சந்தித்து, அவரது நலன் குறித்து விசாரித்துள்ளதாக தெரியவருகிறது.

வசீம் தாஜூடீனின் கொலையை விபத்தாக சித்தரிப்பதற்காக, சாட்சியங்களையும் தடயங்களையும் அழித்ததாக முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தாஜூடீன் கொலையில், முன்னாள் ஜனாதிபதியின் புதல்வர் ஒருவருக்கும் தொடர்பிருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. Anura :என்ன சேர் உங்களுக்காகச் செய்யப்போய் இப்பிடியாகும்படி செஞ்சுட்டீங்களே..?

    MR: சரி, கவலை வேணாம். இன்னுங் கொஞ்ச நாளில இந்த ஆட்சி கவிழ்ந்திடும். அதுக்குப்பொறகு மொத்தமா எல்லாரும் வெளிய வந்திடலாம்!

    A: (சலிப்புடன்) ஆ...மா! நீங்கதான் இப்பிடியே சொல்லிட்டிருக்கிறீங்க.. சனங்க ஒங்கள மறந்திட்டேயிருக்கிறாங்க..

    MR: சே..! இந்த விமல், உதய, தினேஷ் கூட்டத்தை நம்பினதைவிட நான் பேசாம மெதமுலயில வீட்லயே இருந்திருக்கலாம்.. எங்க ஆளைக் காணவில்லை என்ட அனுதாபத்திலயாவது சனம் மரியாதை தந்திருக்கும்..!

    ReplyDelete

Powered by Blogger.