Header Ads



மகாராணி தனது கை உறையை கழற்றிவிட்டு ஜனாதிபதி மைத்திரிக்கு கை கொடுத்தாலும்


பிரித்தானியா மகாராணி எலிசபெத் தனது கை உறையை கழற்றி விட்டு, கைலாகு கொடுத்ததன் சுகத்தை ஜனாதிபதி உணர்ந்து கொண்டாலும் அந்த சுகத்தை நாடு உணரவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

உலகத்தை வென்று விட்டதாக கூறினாலும் எமது தலைவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று மகிழ்ச்சியாக இருந்து விட்டு வருவதும், அந்த நாடுகளின் தலைவர்கள் எமது நாட்டுக்கு வந்து மகிழ்ச்சியாக இருந்து விட்டுச் செல்வதுமே இறுதியில் நடந்துள்ளது.

ஜனாதிபதியும் பிரதமரும் போட்டி போட்டு வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்கின்றனர்.

பிரதமர் உலக பொருளாதார மாநாட்டுக்கு செல்லும் போது ஜனதிபதி, ஜீ.7 நாடுகளின் மாநாட்டுக்கு செல்கிறார்.

உலக தலைவர்கள் வரிசையாக இலங்கைக்கு வந்திருந்தாலும் அவர்களின் வருகையால் நாட்டுக்கு பிரயோசனமும் இல்லை.

அரசாங்கம் வெளியிட்டுள்ள 2015ஆம் ஆண்டுக்கான மத்திய வங்கியின் அறிக்கையை நோக்கும் போது, இந்த நிலைமை உறுதியாகியுள்ளது.

2013ஆம் ஆண்டு 10 ஆயிரத்து 394 மில்லியன் டொலர்களாக இருந்த ஏற்றுமதி வருமானம் 2014ஆம் ஆண்டில் 11 ஆயிரத்து 130 மில்லியன் டொலர்களாக அதிகரித்தது.

இந்த வருமானமானது 2015ஆம் ஆண்டு 10 ஆயிரத்து 505 மில்லியன் டொலர்களாக வீழ்ச்சியடைந்துள்ளது எனவும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.