Header Ads



அல்லாமா ஸாலிஹ் அல் உதைமீன் ரஹ் அவர்களின் வாழ்விலிருந்து...!

-TM முபாரிஸ் ரஷாதி-

அல்லாமா ஸாலிஹ் அல் உதைமீன் ரஹ் அவர்கள் ஒரு நாள் ஒரு பயணம் சென்று கொண்டிருக்கையில் அவரது வாகனத்தை செலுத்திய சாரதி அனுமதிக்கப்பட்ட வேகத்தை விடவும் கூடுதலாக வண்டியை ஓட்டிச் சென்றார்.

அல்லாமா ஸாலிஹ் அல் உதைமீன் ரஹ் அவர்களுக்கு வேகத்தின் அளவு சரியாக புரியவில்லை. இடையில் பொலிஸார் அந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி கடுமையாக சாரதிக்கு திட்டிவிட்டு வாகனத்தின் உள்ளே எட்டிப் பார்த்ததும்
சஊதியின் முப்தி அல்லாமா ஸாலிஹ் அல் உதைமீன் ரஹ் அவர்கள் உள்ளே இருப்பதைக் கண்டனர்.

பொலிஸார் செய்வதறியாது  அல்லாமா ஸாலிஹ் அல் உதைமீன் ரஹ் அவர்களே! நீங்கள் தான் உள்ளே இருக்கிறீர்கள் என எமக்குத் தெரியாது, நடந்த தவறுக்காக எங்களை மன்னித்துக் கொள்ளுங்கள் என கெஞ்சலாயினர்.

அல்லாமா ஸாலிஹ் அல் உதைமீன் ரஹ் அவர்கள் சிரித்தவர்களாக வெளியே வந்து எனது சாரதி நாட்டுச் சட்ட ஒழுங்கை மீறியமைக்காக முதலில் அவருக்கு தகுந்த  நடவடிக்கை எடுங்கள்
என்றார். பொலிஸார் அந்த கோரிக்கையை மறுத்து விட்டு , நீங்கள் உங்கள் பயணத்தை தொடருங்கள் என்று கெஞ்சிக் கேட்டனர்.

அதற்கு அல்லாமா ஸாலிஹ் அல் உதைமீன் ரஹ் அவர்கள் என் மீதுள்ள உங்கள் மரியாதை ஒரு புறமிருக்கட்டும். நாட்டுச் சட்டத்தை மீறியமைக்காக நடவடிக்கையெடுங்கள் இல்லையேல் நாம் இங்கிருந்து நகரப்போவதில்லை என்றதும் பொலிஸார் நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் சாரதிக் கெதிராக நடவடிக்கையை மேற்கொண்டனர்.
அதன் பின்பே அல்லாமா ஸாலிஹ் அல் உதைமீன் ரஹ் அவர்கள் அங்கிருந்து நகர்ந்தார்கள்.

சஊதியின் அன்றைய முப்தி அல்லாமா ஸாலிஹ் அல் உதைமீன் ரஹ் அவர்களின் வாழ்க்கையில் இது போன்ற ஏரளமான நிகழ்வுகள் உண்டு .
தமக்கிருக்கின்ற மதிப்பையும் செல்வாக்கையும் தவறாக பிரயோகிக்கின்ற மனிதர்களிடையே சட்டத்தின் முன் யாவரும் சமமே என்ற அல்லாமா அவர்களின் நடைமுறை சார் வாழ்வியல் குறிப்பு பாராட்டத்தக்கது மட்டுமல்ல படிப்பினைக்குரியதும்
பகிர்ந்து கொள்ளப்பட வேண்டியதுமே.

No comments

Powered by Blogger.