ஹம்பாந்தோட்டையில் ஜனாதிபதி மைத்திரி, பங்கேற்ற நிகழ்வில் தீ விபத்து
ஹம்பாந்தோட்டையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்ற ஹோட்டல் அங்குரார்ப்பண நிகழ்வில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டை மிரிஜ்ஜவில ஷங்கரிலா ஹோட்டல் இன்று -01- அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
ஜனாதிபதி உள்ளிட்ட முக்கிய பிரபுக்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.
இந்த ஹோட்டலில் இன்றிரவு நடைபெற்ற வான வெடிக்கை நிகழ்வின் போது, அருகாமையில் வைக்கோல்களினால் அமைக்கப்பட்ட காட்சிக் கூடமொன்றின் கூரை தீப்பற்றிக் கொண்டது. இதனால் குறித்த காட்சிக்கூடம் தீக்கிரையாகியுள்ளது.
எனினும் ஹோட்டலுக்கு எந்தவித சேதங்கள் ஏற்படவில்லை எனவும், எவருக்கும் காயங்களோ உயிர்ச் சேதமோ ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment