Header Ads



கொஸ்கம இராணுவ முகாமில், பாரிய வெடிப்புச் சத்தத்துடன் தீ - வீதிகள் மூடல்


கொஸ்கம , சாலாவ இராணுவ முகாமில் பாரிய வெடிப்புச் சத்தத்துடன் தீ ஏற்பட்டுள்ளது.

குறித்த இராணுவ முகாமின் ஆயுதக் கிடங்கிலேயே குறித்த தீ ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வெடிப்புச் சத்தம் கேட்டவுடன், பிரதேசவாசிகள் அங்கிருந்து அகன்றதாகவும் அச்சத்தம் பல கிலோ மீற்றர் தூரம் வரை கேட்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளதோடு, குறித்த சம்பவம் காரணமாக ஏற்பட்ட சேதம் தொடர்பில் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பொதுமக்களின் பாதுகாப்புக் கருதி களுஅக்கல வரை அவிஸ்ஸாவளை - களுஅக்கல வீதி மூடப்பட்டுள்ளதோடு, அவிஸ்ஸாவளை - கொழும்பு வீதி அவிஸ்ஸாவளையில் மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.