Header Ads



ஆன்மாவுக்கும், உடலுக்குமிடையே சமநிலைத்தன்மையை வலியுறுத்தும் ரமழான்

-TM முபாரிஸ் ரஷாதி-

உடம்பை வருத்திக் கொண்டு ஆன்மாவிற்கு எவ்வித பெறுமானமுமின்றி செய்யப்படும் நோன்பு கால வணக்க வழிபாடுகளால் இறைவன் எதிர் பார்க்கின்ற பயன்கள் கிடைக்கப் பெறாது போய்விடுகின்ற அதே நேரம் ஆன்மாவிற்கு பயிற்சி என்று சொல்லிக் கொண்டு எவ்வித உடலியல் சிரமமுமின்றி சொகுசாக செய்யப்படுகின்ற வணக்கங்களாலும் இறைவன் எதிர் பார்க்கின்ற அடைவுகளை பெற்றுக் கொள்ள முடியாது போய்விடுகிறது

முதலாவதாக நோன்பின் மூலமாக இறைவன் தக்வா என்ற ஆன்மாவின் அழுக்குகளை அகற்றும் ஒரு பிரதான மூலப் பொருளை  ஒவ்வொரு ஆன்மாவும் அடைந்து கொள்வதை எதிர்பார்க்கிறான்

அம்ராழுல் குலூப் உள நோய்கள் என இமாம் கஸ்ஸாலி அவர்கள் இஹ்யாவில் பட்டியலிடுவது போன்று
பெருமை , பொறாமை , வஞ்சகம் , இயலாமை , சோர்வு , ஏமாற்று , களவு , புறம் , பகைமை , குரோதம் , கஞ்சத்தனம் , அறியாமை , மூட நம்பிக்கை , விதண்டாவாதம் , குதர்க்கம், போன்ற ஆன்மாக்காளை அழுக்காக்கி வைத்திருக்கும் இந்த விஷக்கிருமிகளை தக்வா என்ற யதார்த்தப் பொருளால் இல்லாமல் செய்வதினூடாக பரிசுத்தப்படுத்தப்பட்ட ஆன்மாவாக மாற்றி இறையருளை இவ்வுலகிலும் மறு உலகிலும் பெறுவதே ரமழானின் பிரதான இலக்குகளில் முதன்மையானதாகும்

இரண்டாவது நபியவர்கள் நோன்பு வையுங்கள் சுகம் பெறுவீர்கள் என்று கூறிய செய்தி

(அறிவிப்பாளர் வரிசையில் பலவீனம் காணப்பட்டாலும்) நோன்பு உடலாரோக்கியத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் வழங்கியிருக்கிறது என்பதை உணர்த்துகிறது.

உடலாரோக்கியமின்றி இறைவழிபாடுகளை திருப்திகராமாக மேற்கொள்ள முடியாது போய் விடும் என்பதனால் நோன்பு என்ற வணக்கம் உடலாரோக்கியத்தையும் தனது பிரதான இலக்குகளில் ஒன்றாகவே கணிக்கின்றது.

நோன்பு மனித உடல் வருடம் முழுக்க  தேவையற்ற உணவுப் பழக்க வழக்கங்களால் சீரற்றுப் போயிருப்பின் அதை சுத்தப்படுத்துகின்ற பாரிய ஒரு இலக்கையும் தன்னகத்தே கொண்டுள்ளது என்பதையும் நம்மால் அவதானிக்க முடிகிறது

நோன்பு என்ற வணக்கம் ஆன்மா உடல் என்ற இரண்டு மூலக்கூறுகளுக்குமிடையேவ ஒரு சம நிலைத் தன்மை பேணப்பட்டு விதியாக்கப்பட்டிருப்பது இஸ்லாத்தின்  தனிப்பண்புகளில் அத் தவாஸுன் எனப்படுகின்ற சம நிலைத்தன்மை கொண்ட மார்க்கம் என்பதை மிகத்துல்லியமாக படம் பிடித்துக் காட்டுகிறது.

No comments

Powered by Blogger.