Header Ads



இலங்கையில் அநீதியான ஆட்சி, அதனால்தான் அனர்த்தம் ஏற்பட்டது - ஜப்பான் பௌத்த தேரர்


இலங்கையில் அநீதியான ஆட்சி நடைபெறுகிறது என்றும் மஹிந்த போன்ற நன்னெறியான தலைவர்களே தேவை எனவும் ஜப்பானின் குபோ விகாரையின் விகாராதிபதி நாஹிம்பாகேனா தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத்தை தோற்கடித்து உலகின் சிறந்த தலைவரான மஹிந்த ராஜபக்ஸவிற்கு பாதுகாப்பளிப்பது ஜப்பானின் கடமை என்றும் விகாராதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஸ ஜப்பானின் குபோ விகாரையில் நேற்று -15- இடம்பெற்ற மத அனுஸ்டானங்களில் கலந்து கொண்ட போதே விகாராதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் அநீதியான ஆட்சி நடக்கும் போது வெள்ளம், மண்சரிவு போன்ற அனர்த்தங்கள் ஏற்படும் என பௌத்த மதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று இலங்கையில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தங்களுக்கு இதுவே காரணம் எனவும் விகாராதிபதி தெரிவித்துள்ளார்.

எனவே இலங்கையில் மீண்டும் நன்னெறி ஆட்சி நடக்க வேண்டுமெனவும், அதற்காக மஹிந்த மீண்டும் ஜனாதிபதியாக வர வேண்டும் அதற்கு ஜப்பான் மக்கள் பூரண ஆதரவு வழங்குவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

3 comments:

  1. அப்படியானால் அண்மையில் ஜப்பானில் நடந்த கடத்கொவும் (சுனாமி) யும் ஜப்பானில் நடக்கும் மிக மோசமான ஆட்சியால்தான் ஏற்பட்டது என்று கொள்ளலாமா ?

    ReplyDelete
  2. அப்படியானால் அண்மையில் ஜப்பானில் நடந்த கடத்கொவும் (சுனாமி) யும் ஜப்பானில் நடக்கும் மிக மோசமான ஆட்சியால்தான் ஏற்பட்டது என்று கொள்ளலாமா ?

    ReplyDelete
  3. We must ask this made in Japan thero, why the Japan meet disaster (earth quack) every year?

    ReplyDelete

Powered by Blogger.