நல்லாட்சி அரசாங்கம் மீது, முஸ்லிம்களின் பகிரங்க குற்றச்சாட்டு
-விடிவெள்ளி SNM.Suhail-
அத்துடன் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்மீதான தாக்குதல்களை தமது சுயநல அரசியலுக்காக மாத்திரம் பயன்படுத்தினர் என குற்றம் சுமத்திய துடன், கடந்த அரசாங்கத்திலும் இந்த அரசாங்கத்திலும் பதவிகளை பெற்றுள்ளனரே தவிர எமக்கு எவ்விதமான நீதியையும் பெற்றுத்தர இதுவரைக்கும் முயற்சி செய்யவில்லை என்றும் குறிப்பிட்டனர்.
அளுத்கம, தர்கா நகர், பேருவளை பகுதிகளில் முஸ்லிம்களை இலக்குவைத்து கடந்த 2014 ஆம் ஆண்டு இடம்பெற்ற தாக்குதல்களால் பெரும் அழிவுகள் ஏற்பட்டு இரண்டு வருடங்கள் கடந்துள்ள நிலையில் இதுவரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்விதமான நஷ்டயீடும் அரசாங்கத்தினால் வழங்கப்படவில்லை என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
கடந்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் இந்த தாக்குதல் சம்பவங்கள் குறித்து பக்கச்சார்பாக நடந்தமையால் அவர்களை தோற்கடிக்கச்செய்து புதிய அரசாங்கமொன்றை அமைத்தபோதிலும் இந்த நல்லாட்சி அரசாங்கமும் தம்மை ஏமாற்றிவிட்டதாக அவர்கள் குற்றம் சுமத்தினர்.
அளுத்கம நகரிலுள்ள அழகுசாதன பொருட்கள் விற்பனை நிலையமொன்றில் தொழில் செய்பவர் சிறுவர் ஒருவர் மீது பாலியல் சேஷ்டை செய்ததாக குற்றம் சுமத்திய கடும் போக்காளர்கள் பிரச்சினைகளை ஏற்படுத்தினர். இந்நிலையில் குறித்த கடை 2014 ஆம் ஆண்டு மே மாதம் 8 ஆம் திகதி எரியூட்டப்பட்டு நாசமாக்கப்பட்டது.
அத்துடன் சில தினங்களுக்கு பின்னர் தர்கா நகரில் வாகனமொன்றை பின்நகர்த்தும் போது ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பில் நிறைவடைந்தது. இவ்வாறு சில சம்பவங்கள் ஏற்பட்டிருந்த நிலையில் பொது பல சேனா அமைப்பினர் 2014 ஜூன் மாதம் 15 ஆம் திகதி பொசன் போயா தினத்தன்று அளுத்கம நகரில் கூட்டமொன்றை நடத்தி முஸ்லிம்களுக்கு எதிரான விஷமக் கருத்துக்களை பிரச்சாரம் செய்தனர்.
இக்கூட்டத்தில் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலாகொட அத்தே ஞானசார தேரர் முஸ்லிம்களுக்கு எதிராக சாதாரண பௌத்த மக்களை தூண்டும் விதத்திலான உரையொன்றை நிகழ்த்தினார்.
அன்றைய தினம் பி.ப. 5 மணியளவில் பொதுபலசேனா தலைமையிலானோர் ஊர்வலமாக தர்கா நகரை நோக்கி சென்றவேளை முஸ்லிம் தரப்பினருடன் முறுகல் நிலை ஏற்பட்டது.
இதனையடுத்தே அளுத்கம, தர்கா நகர், பேருவளை பகுதிகளில் பல கடைகள் எரியூட்டப்பட்டன. அத்துடன் முஸ்லிம்களுக்கு சொந்தமான 500 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமாக்கப்பட்டன.
அத்துடன் பல வீடுகளில் பணம், நகை, இலத்திரனியல் உபகரணங்கள் மற்றும் பெறுமதிமிக்க பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன.
பல வீடுகள் முழுமையாக எரியூட்டப்பட்டன. பலரது வாகணங்களும் எரியூட்டி நாசப்படுத்தப்பட்டன.
ஆடைத்தொழிற்சாலை மற்றும் பண்ணைகளுக்கும் எரியூட்டப்பட்டன. பிற்பகல் 5 மணி தொடக்கம் மறுநாள் அதிகாலை வரை முஸ்லிம்கள் மீது தாக்குதல்களும் மேற்கொள்ளப்பட்டன.
வாள், கத்தி, தடி, துப்பாக்கி, பெற்றோல் வெடி குண்டு போன்றன பயன்படுத்தப்பட்டே முஸ்லிம்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டனர். இச்சம்பவத்தால் வெலிப்பன்னை மற்றும் துந்துவ பகுதிகளிலும் அச்ச நிலை ஏற்பட்டது.
இச்சம்பவத்தில் சிக்குண்டு முஹம்மட் சிராஸ் என்ற 2 பிள்ளைகளின் தந்தையும் மொஹமட் சஹ்ரான் எனும் 3 பெண் பிள்ளைகளின் தந்தையும் உயிரிழந்தனர். அத்துடன், 11 பேர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி காயமுற்றனர்.
22 வயதுடைய அப்கர் மற்றும் 18 வயதுடைய அஸ்ஜத் ஆகிய இரு இளைஞர்கள் தனது காலை இழந்துள்ளனர். மேலும் 80 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
சம்பவத்தின்போது பிரதேசத்தில் தொலைபேசி வலையமைப்புகள் செயலிழக்கப்பட்டிருந்ததுடன் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. அத்துடன் ஒருவார காலம் அரசாங்கம் ஊரடங்கு சட்டத்தையும் பிறப்பித்திருந்தது. இதனால் முஸ்லிம்கள் பல நாட்களாக வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தனர். ஆனால், அங்குள்ள பெரும்பான்மையினர் சுதந்திரமாக வெளியில் நடமாடினர்.
இது இவ்வாறிருக்க, இச்சம்பவத்துடன் தொடர்புடைய 41 பேர் அளுத்கம பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட போதிலும் அன்றைய தினமே 16பேருக்கு பிணை வழங்கப்பட்டது. ஏனையோர் குறுகிய காலத்திற்குள் விடுவிக்கப்பட்டனர்.
இச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகள் களுத்துறை நீதிவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றுவருகின்றன.
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் நீதி பெற்றுக்கொடுக்கப்படவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்த இருவரின் குடும்பங்களுக்கும் தலா ஒரு இலட்சம் ரூபா வீதமே அரசாங்கத்தினால் வழங்கப்பட்டன.
பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் கடைகள் என்பன படையினரால் திருத்திக்கொடுக்கப்பட்டுள்ளன.
எனினும் மக்களின் இழப்புக்கேற்ற நஷ்டயீடுகள் வழங்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் அங்கலாய்கின்றனர்.
அத்துடன், படையினரால் திருத்தப்பட்ட பாதிக்கப்பட்ட வீடுகள் தமக்கு திருப்திகரமாக அமையவில்லை என்றும் மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
இதனிடையே, அளுத்கம நகரில் எரியூட்டப்பட்ட கடைகளுக்கோ, காயமடைந்தோருக்கோ, கால்களை இழந்தோருக்கோ முன்னைய அரசாங்கத்தினால் எவ்விதமான நஷ்டயீடும் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்த மக்கள் எம்மீது கடும்போக்காளர்கள் தாக்குதல் நடத்தியபோது வேடிக்கை பார்த்த அரசாங்கத்தை நாம் தோற்கடித்து புதிய நல்லாட்சி அரசாங்கத்தை ஆதரித்தோம்.
இந்த நல்லாட்சி அரசாங்கம் அதிகாரத்தை கைப்பற்றி ஒன்றரை வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் எமக்கு எவ்விதமான நீதியும் கிடைக்கவில்லை. ஒரு சதமேனும் நஷ்டயீட்டுத் தொகையும் புதிய அரசாங்கத்தினால் தரப்படவில்லை என தெரிவித்தனர்.
அத்துடன் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்மீதான தாக்குதல்களை தமது சுயநல அரசியலுக்காக மாத்திரம் பயன்படுத்தினர் என குற்றம் சுமத்திய துடன், கடந்த அரசாங்கத்திலும் இந்த அரசாங்கத்திலும் பதவிகளை பெற்றுள்ளனரே தவிர எமக்கு எவ்விதமான நீதியையும் பெற்றுத்தர இதுவரைக்கும் முயற்சி செய்யவில்லை என்றும் குறிப்பிட்டனர்.
Muslims in Sri Lanka do NOT have a voice - a POLITICAL VOICE for that purpose. The SLMC is dead. The ACMC is busy making money, the Muslim politicians stooging the UNP are ONLY interested in their personal benefits. The ungrateful Muslim politicians who benefited the most from Mahinda Rajapaksa, Basil Rajapaksa and Gotabaya Rajapaksa are now stooging the Yahapalana government and enjoying their best with their kith and kin and henchaiyas, by selling the VOTE BANK of the Muslims who have been deceived lock-stock-and-barrel. The Muslim Civil Society and Muslim Media organizations in Sri Lanka land their leaders will stage dramas by releasing "press statements" because all of them have been well taken care by the Yahapalana government and the foreign interests who are giving them large amounts of funding to keep their mouth shut. Like what happened in Aluthgama and Beruwela, Maharagama and Dambulla, they all will COVER up the TRUTH and the Muslims will be told a "LONG STORY. The ungrateful Muslim politicians who benefited the most from Mahinda Rajapaksa, Basil Rajapaksa and Gotabaya Rajapaksa are now stooging the Yahapalana government and enjoying their best with their kith and kin and henchaiyas, by selling the VOTE BANK of the Muslims who have been deceived lock-stock-and-barrel. The Muslim Civil Society and Muslim Media organizations (excluding www.jaffanamuslim.com) in Sri Lanka and their leaders HAVE stage dramas by releasing "press statements" because all of them have DECEIVED THE MUSLIM COMMUNITY for their personal benefits. Like what happened in Aluthgama and Beruwela, Maharagama and Dambulla, they HAVE ALL COVERED UP THE TRUTH ON BEHALF OF THE YAHAPALANA GOVERNMENT TILL NOW. “The Muslim Voice” WARNED the Muslim Community of this and now the above article in Vedivelli (Tamil newspaper) has proved that “THE MUSLIM VOICE” was correct – Alhamdulillah. So now all the TRUTH has been COVERED up and the Muslims have been told a "LONG STORY. WHY HAS NOT THIS unscrupulous UNDEMOCRATICALLY SELF ACCLAIMED SLMC LEADER NOT CALLED FOR A PRESIDENTIAL COMMISSION OR A HIGH LEVEL INQUIRY BY THE YAHAPALAN GOVERNMENT ON THE ALUTHGAMA and BERUWELA VIOLENCES/INCIDENCES UP TO NOW? It is time up that a NEW POLITICAL FORCE that will be honest and sincere that will produce "CLEAN" and diligent Muslim Politicians to stand up and defend the Muslim Community politically and otherwise, especially from among the YOUTH, has to emerge from within the Sri Lanka Muslim Community to face any new election in the coming future, Insha Allah. It is time up that a NEW POLITICAL FORCE that will be honest and sincere that will produce "CLEAN" and diligent Muslim Politicians to stand up and defend the Muslim Community politically and otherwise, especially from among the YOUTH, has to emerge from within the Sri Lanka Muslim Community to face any new election in the coming future, Insha Allah.
ReplyDeleteNoor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener - The Muslim Voice.