Header Ads



தயிர் விற்பனை செய்வது போன்று, போதைப் பொருள் விற்பனை செய்தவர் கைது

(எம்.இஸட்.ஷாஜஹான்)

தயிர் விற்பனை செய்வது போன்று நடித்து போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட  நபர்  ஒருவரை  3 கிராம் 60 மில்லி கிராம் போதைப் பொருளுடன் அளுத்பொல பிரதேசத்தில் வைத்து திவுலபிட்டிய பொலிஸர் கைது செய்துள்ளனர்.

நீர்கொழும்பு தாகொன்ன வீதியைச் சேர்ந்த  22 வயது நபரே கைது செய்யப்பட்டவராவார்.

லீஸிங் முறையில் சிறிய ரக லொறியொன்றை பெற்று தயிர் தயாரித்து  பல்வேறு கிராமங்களில் விற்பனை செய்துவந்த சந்தேக நபர், பணத்தேவை காரணமாக சில இடங்களில்   தனது வாடிக்கையாளர்களுக்கு போதைப் பொருளை விற்பனை  செய்து வந்துள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸார் மினுவாங்கொட பிரதான நீதவான் தம்மிக்கா இலங்ககோன் முன்னிலையில் ஆஜர் செய்தபோது சந்தேக நபரை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

No comments

Powered by Blogger.