"உலகின் மொத்த விஞ்ஞானத்தின், அடித்தளம் அல்குர்ஆன்"
-ரஹமத் ராஜகுமாரன்-
6 ஆம் நூற்றாண்டின் இறுதியில் அதாவது கிபி 570 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்தார்கள். இஸ்லாம் மார்க்கத்தை மக்களிடையே பரப்பினார்கள குர்ஆன் மக்களிடையே மனப்பாடமாகவும் அதே நேரம் ஆய்வுக் குரிய வேதமாகவும் இருந்தது.
கிபி 630 ல் அவர்கள் மறைவதற்கு முன்னரே ஒரு அறிவியல் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கினார்கள். அந்த மாபெரும் சாம்ராஜ்ஜியம் உலகெங்கும் இஸ்லாத்தை எடுத்துச் செனறதோடு உலகாயத அறிவுக்கும் வளம் சேர்த்து அறிவுஜீவிகளை உலகுக்கு தன் அன்பளிப்பாக குர்ஆன் வழங்கியது.
அந்த அறிவுஜீவிகளால் அறிவியலின் பல துறைகள் உருவானது. மருத்துவம் பொறியியல் வானியல் வரலாற்றியல் சமூகவியல் தாவரவியல் விலங்கியல் இசையியல் இலக்கியம் பொருளாதாரம் மானிடவியல்... இன்று வளர்ந்து வந்திருக்கும் அறிவியல் துறை 186 துறைகளுக்கும் குர்ஆன் அடித்தளமாக இருந்திருக்கிறது.
குர்ஆனில் சட்ட திட்டங்கள் மற்றும் வாழ்வியல் முறைகள் குறித்து வசனங்கள் சுமார் 280 வசனங்கள்தான் உள்ளது. அதே சமயம் விஞ்ஞானம் குறித்த வசனங்கள் 700 நேரடியான அறிவியலையும் சுமார் 500 க்கும் மேற்பட்ட வசனங்கள் மறைமுக விஞ்ஞானத்தையும் போதிக்கிறது.
தற்போது வளர்ச்சியடைந்து வரும் விஞ்ஞானத்தில் குர்ஆன் வசனங்கள் 6666 ம் விஞ்ஞானமாகவே விஞ்ஞானிகளுக்குத் தென்படுகிறது.
வாழ்வியல் வசனங்கள் 280 யை அடிப்படையாகக் கொண்டு உலகில் உள்ள மதரஸாக்களில் பாட திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
இந்த 280 வசனங்களில் மன இச்சையை புகுத்தி தங்களின் கொள்கைக்கு தக்கவாறு குர்ஆனின் வசனங்களைப் பயன்படுத்தி குழப்பத்தை மக்களிடையே புகுத்திய நவீனத்துவ கொள்கைககாரர்கள்.
ஆக விஞ்ஞானத்தின் சுமார் 1200 க்கும் மேற்பட்ட வசனங்கள் ஒரு சிலரால் ஆய்வு செய்யப்பட்டு விஞ்ஞானத்தின் பலதுறைகள் உருவாகின.
அந்த ஒரு சிலரின் கண்டுபிடிப்புகள் மேலும் இஸ்லாமியர்களின் குர்ஆன் விஞ்ஞான ஆய்வை மொழிபெயர்ப்பு செய்து யூதர்கள் கிருஸ்துவர்கள் தங்களின் கண்டுபிடிப்புகளை உலகுக்கு அளித்தனர்.
ஆக உலகின் மொத்த விஞ்ஞானத்தின் அடித்தளம் குர்ஆனாக இருந்திருக்கிறது என்பதை முஸ்லிம்களாலே விளங்கிக் கொள்ள முடியவில்லை என்பதுதான் வருத்தப்பட வேண்டிய சேதி.
- Rahmath Rajakumaran

Your email comment subscription (address asmeermsm@gmail.com) has been cancelled for this post.
ReplyDeleteKuraanukkaga wingnaanum illai !
ReplyDeleteWingnaanattukkaga kuranum illai !
Azu arulapattazu manizan manizanaga waala.
Oru walikaatiyaga !
Azarku kandupidippukal thewai atrazu !
Kadaulukku ibadath saiyya,wananga !
Adanal thaan 'science' warum munnar manidargal azan adippadayil waldu kaattinargal !
Quran is not a science book but it is Allah commands, don't compare Quran with men written script.......
ReplyDelete