அரசாங்கத்தை தோற்கடிக்க புதிய, அரசியல் சக்தி உருவாக்கப்படும் - அனுரகுமார
அரசாங்கத்தை தோற்கடிப்பதற்கு புதிய அரசியல் சக்தியொன்று உருவாக்கப்படும் என ஜே.வி.பி கட்சி தெரிவித்துள்ளது.
வெகு விரைவில் தற்போதைய அரசாங்கத்தை தோற்கடிக்கக் கூடிய ஓர் புதிய அரசியல் சக்தியொன்று உருவாக்கப்படும் என கட்சியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடு 5000 பில்லியன் கடன் பொறியில் சிக்கியுள்ளதாகவும் இதனால், நாட்டு மக்கள் மக்கள் மீது தேவையற்ற வரிச் சுமை திணிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் இரண்டு அரசியல் சக்திகள் காணப்படும் எனவும் ஒன்று மைத்திரி-ரணில் தரப்பு எனவும் மற்றையது ஜே.வி.பி. தலைமையிலானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ரணில் - மைத்திரி அரசாங்கம் நிரந்தரமானதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தை தோற்கடிக்கும் நோக்கிலேயே மக்கள் மைத்திரி தரப்பிற்கு வாக்களித்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் கடன் சுமை பெருமளவில் அதிகரிப்பதற்கு சுதந்திரத்தின் பின்னர் ஆட்சி செய்த அரசாங்கங்கள் பொறுப்பு சொல்ல வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
நிதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து ஜே.வி.பி இன்னமும் தீர்மானிக்கவில்லை:-
நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து ஜே.வி.பி கட்சி இன்னமும் தீர்மானிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் 8ம் திகதி நம்பிக்கையில்லா தீர்மானம் பாராளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
கூட்டு எதிர்க்கட்சியினரால் கடந்த மார்ச் மாதம் 24ம் திகதி ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் ஒப்படைத்திருந்தனர்.
நாட்டின் தற்போதைய பொருளாதார பின்னடைவிற்கு நிதி அமைச்சரே பொறுப்பு ஏற்க வேண்டுமென கூட்டு எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

Post a Comment