அமைச்சர்களுக்கு எதிராக, ஒழுக்காற்று நடவடிக்கை
அரசாங்கத்தை விமர்சனம் செய்யும் அமைச்சர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
ஆளும் கட்சியைச் சேர்ந்த அமைச்சுப் பதவிகளை வகித்து வருவோர் அரசாங்கத்தின் கொள்கைகளை பகிரங்கமாக விமர்சனம் செய்தால் அது தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் தீர்மானித்துள்ளனர்.
இத்தகவலை அரசாங்கத்தின் சிரேஸ்ட பேச்சாளர் ஒருவர் சிங்கள வார இறுதி பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அரசாங்கத்தை விமர்சனம் செய்த ஐக்கிய தேசியக் கட்சியின் மூன்று பேருக்கு எதிராக கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளது.
எதிர்வரும் காலங்களில் அரசாங்கத்தை நெருக்கடியில் ஆழ்த்தும் வகையில் கருத்துக்களை வெளியிடும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யார் என்பது குறித்து ஆராயப்படவுள்ளது.
அரசாங்கத்தின் இருப்பிற்கு பங்கம் ஏற்படும் வகையில் கருத்து வெளியிடும் அமைச்சர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு கட்சி மட்டத்தில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அந்தப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment