Header Ads



ரவிக்கு எதிரான, நம்பிக்கையில்லா தீர்மானம் - சுதந்திரக் கட்சிக்கு பரீட்சை


நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு பரீட்சையாக அமையும் என கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

கூட்டு எதிர்க்கட்சியினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியை தோற்கடிப்பதற்கே கூட்டு எதிர்க்கட்சியின் நோக்கமாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கொள்கைகளுக்கு அமைவாக செயற்படுகின்றதா அல்லது ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கின்றதா என்பது இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் அம்பலமாகிவிடும் என சுட்டிக்காட்டியுள்ளது.

எதிர்வரும் புதன்கிழமை நம்பிக்கையில்லா தீர்மானம் விவாத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக சுதந்திரக் கட்சி வாக்களிக்கும் என எதிர்பார்ப்பதாக கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.