Header Ads



இராணுவ முகாம் வெடிப்பு, திட்டமிட்ட சதியா...?

அவிசாவளை, கொஸ்கம - சலாவ இராணுவ முகாமில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தால் முகாம் தரைமட்டமாகியுள்ளது. தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள போதும் குறித்த பகுதியில் இன்னமும் சிறு சிறு வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராணுவ முகாம் அமைந்துள்ள பகுதி இலங்கையின் இறுதி யுத்தம் நடைபெற்ற பகுதியான கிளிநொச்சி போன்று காட்சி தருகின்றது. அந்தளவுக்கு முகாம் தரைமட்டமாகியுள்ளது.

இரண்டு ஆயுதக் கிடங்குகளும் முற்றாக நாசமடைந்துள்ளமை வேண்டுமென்றே செய்யப்பட்ட சூழச்சியாக இருக்கலாம் என சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்கா தெரிவித்துள்ளார்.

இந்த வெடிப்பு நன்கு திட்டமிட்டு செய்யப்பட்ட ஒன்றென கூறப்படுகின்றமை மற்றும் நேரில் பார்த்தவர்களின் கருத்தினை அடிப்படையாக கொண்டு நாம் இது பற்றிய ஒரு ஆய்வை செய்துள்ளோம். அதன்மூலம் கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி,

ஆயுதக் கிடங்கின் பொறுப்பாளர்

இலங்கையைப் பொறுத்த மட்டில் சகல படைகளின் முகாம்களுக்கும் “ஆர்மரி” என்கின்ற ஆயுதக் கிடங்கு என்று ஒன்று இருக்கும். அந்தக் கிடங்கிற்கு பொறுப்பாக ஒரு அதிகாரி இருப்பார். அந்த அதிகாரி என்பவர் கொஞ்சம் சேவை மூப்பு கொண்ட இராணுவ சார்ஜன்ட் தரத்தில் உள்ளவர்கள் வந்தால்கூட, அந்த அதிகாரிக்கு தெரியாமல் எந்தவொரு ஆயுதமும் வெளியே கொண்டு செல்லவும் முடியாது உள்ளே எடுத்து வரவும் முடியாது.

அடுத்து அந்த முகாமின் பொறுப்பாளர் என்பவர் இருப்பார். இலங்கை இராணுவ முகாம்களைப் பொறுத்த மட்டில் லப்டினன்ட் மற்றும் இரண்டாம் லப்டினன்ட் தரத்தில் உள்ளவர்களே ஒரு இராணுவ முகாமின் பொறுப்பாளர்களாக இருந்து வருகின்றார்கள். ஆக ஒரு முகாமின் ஆயுதக் கிடங்கு பற்றிய முழுத் தகவலும் இந்த இரண்டு நபர்களுக்கு மட்டுமே தெரிந்திருக்கும். இப்போது இந்த இராணுவ முகாமில் ஒரு இராணுவ வீரர் மட்டுமே மரணமடைந்துள்ளதாக செய்தி வந்துள்ளது.

அப்படி மரணமடைந்த இராணுவ அதிகாரி என்பவர் இந்த ஆர்மரியின் பொறுப்பாளராக இருக்கலாம். அவர் வேறு ஒரு துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் நிறையவே உள்ளது. அதாவது இந்தக் கிடங்கு எரிந்தது பற்றிய விசாரணை ஒன்று வரும் போது அந்த இறந்து போனவர் தலையில் சகல சதிகளையும் கட்டி விடலாம் என்ற ஒரு தந்திரத்தில்தான் இந்த ஒரேயொரு இராணுவ அதிகாரி கொல்லப்பட்டிருக்கலாம். முகாமை அளிக்க திட்டமிட்டவர்கள் கிடங்கின் பொறுப்பாளரை திட்டமிட்டு சுட்டுக் கொலை செய்திருக்கலாம்.

ஏன் என்றால் ஆயுதக் கிடங்கின் அருகில் இராணுவ அறைகள் இருப்பதில்லை. சற்று தூரத்தில்தான் அமைந்திருக்கும். அப்படியிருக்க அதிகாலை 5 மணிக்கு பிந்தியே வெடிப்பு நடந்துள்ளது. முகாமுக்கு உள்ளே வெளி நபர்கள் செல்ல வாய்ப்பில்லை. அதனால் உள்ளே உள்ளவர்கள் மூலம் நன்கு திட்டமிட்டு எந்தவொரு தடயமும் இல்லாது செய்யப்பட்டுள்ளது. அதாவது ஒரு சிறிய தடயமும் இல்லாமல் முகாம் முற்றாக எரிந்துள்ளது. எந்த பக்கத்தில் இருந்தும் தடயங்கள் கிடைக்க வாய்ப்பில்லை எனலாம். அதனால் சம்பவம் நடந்த அன்று அதற்கு முதல் விடுமுறையில் சென்ற முகாம் சிப்பாய்கள் மற்றும் முகாமில் உள்ள சகல தரப்பினரிடமும் தகுந்த விசாரணை முன்னடுக்கும் போது விடயம் வெளியே வர அதிக வாய்ப்புள்ளது. ஆயுதக் கிடங்கு பொறுப்பாளருக்கு தெரியாமலே இந்த சதி நடந்திருக்கலாம்.

அல்லது இந்தக் கிடங்கின் முன்னாள் பொறுப்பாளராக இருந்து இடமாற்றம் பெற்றுச் சென்ற வேறு ஒருவரால் இந்த முகாமில் கடமையாற்றும் ஒருவர் இருவரால் இந்த சதி நிறைவேற்றி இருக்கலாம். அதனால் இந்த முகாம் பொறுப்பாளர் மற்றும் கிடங்கு பொறுப்பாளருக்கு தெரியாமல் அரசுக்கு விரோதமான அணியால் செய்யப்பட்டிருக்கலாம். இது நன்கு திட்டமிட்டு செய்யப்பட்டுள்ளது

ஆயுதக் கிடங்கை வெடிக்க வைக்கும் தந்திரம்

உலகின் எந்தவொரு ஆயுதக் கிடங்குகளிலும் பாதுகாப்பின் நிமித்தம் இறுதியில் அதனை வெடிக்க செய்யும் வழமையான முறை ஒன்று உள்ளது.

போராட்டம் ஒன்றின் போது ஆயுதக்கிடங்கு எதிரியின் கைக்கு செல்லும் நிலை ஏற்ப்பட்டால், தப்பி செல்வதற்கு முன்னர் அது எதிரியின் கைக்கு செல்வதற்கு இடமளிக்காமல் அனைத்தையும் வெடிக்க வைக்க அவ்வாறான முறை கையாளப்படுவது வழமை. இப்படியாக கடந்த காலங்களில் வடகிழக்கில் புலிகளுக்கும் இராணுவத்திற்கும் உக்கிரமான சண்டை நடைபெற்ற போது இரண்டு தரப்பாலும் இப்படியாக முகாம்கள் அளிக்கப்பட்டும் ஆயுதக் கிடங்குகள் வெடிக்கப்பட்டும் உள்ளன.

இவ்வாறான நடைமுறைகள் கொஸ்கம - சலாவ இராணுவ முகாமில் செயற்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறன முறையினை “பாதுகாக்க முடியவில்லை என்றால் அழிப்பதே சிறந்தது” என்ற சூழ்நிலைக்கமைய மேற்கொள்ளப்படும்.

கொஸ்கம ஆயுதக்கிடங்கு இந்த முறையில்தான் தீ பிடித்து அழிந்துள்ளது என்ற அடிப்படையில், எதிரியின் கையில் கிடைப்பதற்கு பதிலாக அழிக்கும் முறையில் செயற்படுத்தப்பட்டுள்ளதென சந்தேகம் எழுந்துள்ளது.

நேரில் பார்த்தவர்கள் பாரிய சத்தத்துடன் சிறிய ஆயுதக்கிடங்கில் இருந்து தீ ஏற்பட்டதாகவும், பின்னர் அது பாரிய ஆயுத கிடங்கு வரை பரவி சென்றதாக குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வாறான ஒன்று தானாகவே ஏற்பட முடியாது. அப்படியென்றால் வெடிக்கச் செய்வதற்கு சதி ஒன்று நடந்திருக்க வேண்டும்.

நீண்ட காலமாக முழுமையான பாதுகாப்புடன் இருந்து ஆயுதக்கிடங்கு நேற்று மாலை வெடித்துள்ளமை முழுமையான சூழ்ச்சிக்கமைய மேற்கொள்ளப்பட்டதென்பது நன்கு திட்டமிட்டு செய்யப்பட்டுள்ளதாகவே பெருத்த சந்தேகம் எழுந்துள்ளது.

காரணம் சிறிய ஆயுத கிடங்கு அறையிலிருந்து பெரிய ஆயுதக் கிடங்கு அறை வரையில் வெடிப்பு பரவியுள்ளது. தற்செயலாக நடந்துள்ள விபத்தாக இருந்தால் இரண்டு கிடங்கும் வெடிக்க வாய்ப்பில்லை எனலாம்.

பெரிய அளவிலான ஆயுதக் கிடங்குகள் நிலத்துக்கடியிலேயே உள்ளன. ஆயுதக் கிடங்கில் இறுதி பாதுகாப்பிற்காக பொருத்தப்பட்டுள்ள கருவி ஒன்று வெடித்தால் மாத்திரமே இவ்வாறான பாரிய வெடிப்பு நிகழலாம்.

அரசுக்கு சங்கடத்தை ஏற்படுத்த செய்யபட்டதா?

இந்த அரசின் மீது மக்கள் அதிருப்தி ஒன்றை உருவாக்கி இந்த அரசின் ஆட்சி மக்களுக்கு நல்லதல்ல என்ற மாயையை உருவாக்கி இந்த ஆட்சி மீது ஒரு அபகீர்த்தியை உருவாக்கி ஆட்சி மாற்றம் ஒன்றை நோக்கி இந்த சதி வேலையை செய்திருக்கலாம் என்று பார்க்கப்படுகின்றது. இந்த விடயம் தற்போது குற்றத் தடுப்பு பொலிஸ் தரிப்பிடம் கொடுக்கப்பட்டுள்ளது.

நீதி நேர்மையான பொலிஸ்மா அதிபர் உள்ளதால் இந்த முகாம் சதியில் உள்ளோர் மிக விரைவில் சிக்குவதற்கு மிக அதிக வாய்ப்புள்ளது. அதிபர் மற்றும் பிரதமர் உடன் விசாரணை செய்யுமாறு உத்தரவு இட்டுள்ளார்கள். அனால் சதிகாரர்கள் நன்கு திட்டமிட்டு செய்துள்ளதால் நாடு விட்டு தப்பி சென்றிருக்கலாம். இந்த சதியின் பின்னால் ஒரு பெரிய சக்தி இருக்கலாம்...

-M.M.Nilamdeen-

1 comment:

  1. Speculation is not journalism. Why do you worst your time to imagine a your false story? Please leave this matter to authorities to investigate and you publish only officially confirmed news. Do not publish your speculations as news.

    ReplyDelete

Powered by Blogger.