Header Ads



"இவ்வளவு அரசியல் சூழ்ச்சிகள், மேற்கொள்ளப்படுவதன் மர்மம் புரியவில்லை" - தினேஸ்

அரசியல்வாதிகளை சிறையில் அடைப்பதன் மூலம் நாட்டின் அரசியலை மாற்றிவிட முடியாது என கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பிலவை பார்வையிடச்சென்று திரும்பிய போது ஊடகவியலாளர்களிடம் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்…

ஆளும் கட்சிக்கு எதிராக செயற்படும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பின்னணியில் இவ்வளவு அரசியல் சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்படுவதன் மர்மம் புரியவில்லை.

உதய கம்மன்பில அவரது கட்சி அலுவலகத்தில் கடந்த 18ம் திகதி கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் அன்றே நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினராகவும், சட்டத்தரணியாகவும் உதய கம்மன்பில கடமையாற்றுகின்றார். அவ்வாறான ஓர் நபர் எப்போதும் ஒளிந்து திரிவதில்லை.

அவ்வாறான ஓர் பின்னணியில் அரசாங்கம் அவசரமாக உதய கம்மன்பிலவை கைது செய்து சிறையில் அடைத்தமை ஏனென்று புரியவில்லை என தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

3 comments:

  1. Unakku purinthum puriyaamal irukkalam...but engalukku nanraaga purinhinrathu....MP
    You were one of the respected MP earlier but now your under arrest by Mahinda & Co and you do jocking always about your profession

    ReplyDelete
  2. We have one real opposition of which Mr Sampanthan is the
    leader and there's another JOKER'S OPPOSITION to which
    men like GUM N PILLA belongs . Nothing serious has happened.
    Mr Gum N Pilla is an official guest at Welikada and will be
    enjoying two week's special meal , may be more meals could
    be provided at the end of two weeks treat if unhappy .

    ReplyDelete
  3. தினேஸ் என்பவர் பயங்கர அரசியல் செய்பவன் என்பது அவருடைய கருத்தில் இருந்து புலனாகிறது. அவுஸ்ரேலிய நாட்டு பிரஜை ஒருவரின் பணத்தை போலி ஆவணங்கள் செய்து களவாடியமை நிரூபிக்கப்பட்டபின்பு பொலிஸ் அவரைக் கைது செய்தது. இந்த உண்மையை மறைக்க இந்த தினேஷ் என்னும் அரசியல்வாதி பணியாரம் பொறித்த எண்ணெயில் ஐஸ்கிறீம் செய்ய தயாராகின்றான். வெட்கம் கெட்ட அரசியல் போலிகள்.

    ReplyDelete

Powered by Blogger.