Header Ads



"நல்லாட்சி என்பதன் அர்த்தம், உதயகம்மன்பில போன்ற திருடர்களுக்கு தண்டனைப் பெற்றுக்கொடுப்பதே"

நல்லாட்சி என்பதன் அர்த்தம் உதயகம்மன்பில போன்ற திருடர்களுக்கு தண்டனைப் பெற்றுக்கொடுப்பதே என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பிலவின் கைதுக்கு அமைச்சர் பாட்டலி சம்பிக்கவே காரணம் என கூட்டு எதிர்கட்சியினர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் பதிலளித்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

எனக்கும், இந்த வழக்கிற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.

ஏன் எனில் அது தனிப்பட்ட வழக்கு என்றும், கூட்டு எதிர்கட்சியினர் செய்த தவறுகளுக்கு முகங்கொடுக்க முடியாத பட்சத்தில் அதை அரசியல் பழிவாங்கல் எனக் கூறுவது அவர்களின் வழமையான வேலை என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.