Header Ads



அமெரிக்க வரலாற்றில் மோசமான துப்பாக்கிச் சூடு - ஒமர் மடீன் குறித்து அவனது தந்தை, மனைவியின் கருத்துக்கள்

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில், ஒரு பாலுறவுக்காரர்கள் கேளிக்கையகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தி 50 பேரை கொன்ற ஒமர் மடீனின் தந்தை, தன்னுடைய மகனுடைய இதயத்தில் இவ்வளவு வெறுப்பு இருந்தது தனக்கு தெரியாது என்று கூறியுள்ளார்.

நவீன அமெரிக்க வரலாற்றில், இப்படி ஒரு மோசமான துப்பாக்கிச்சூட்டை நடத்த ஒமர் மடீனை எது தூண்டியது என்பது குறித்து தன்னால் இன்னும் புரிந்துகொள்ள முடியவில்லை என ஆப்கனில் பிறந்த ஒமர் மடீனின் தந்தை மிர் சித்திக் தெரிவித்துள்ளார்.

மேலும், ஆப்கன் மக்களுக்கு சித்திக் அனுப்பிய வீடியோ செய்தியொன்றில், அமெரிக்க பிரஜையான தனது மகன் ஒமர் திருமணம் முடித்து குழந்தை பெற்றெடுத்தற்கு முன் நல்ல பிள்ளையாக இருந்தாகக் கூறியுள்ளார்.

ஒமர் மடீன் நிலையற்ற மனநிலைகாரர், வன்முறையில் ஈடுபடக்கூடியவர் என்றும் ஆனால் அவர் மதத் தீவிரவாதி என்பது குறித்து தான் அறிந்திருக்கவில்லை என்றும் மடீனின் முன்னாள் மனைவி வர்ணித்துள்ளார்.

2

 ஒமர் மடீன், 2013ம் ஆண்டில், தனக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாகக் கூறியதாக வந்த செய்திகளை அடுத்தும், அவர் தெரிவித்த சில வன்முறையைத் தூண்டக்கூடிய கருத்துக்காலை அடுத்தும்தான், அவரைப் பற்றி தங்களுக்குத் தெரிய வந்ததாக எப்.பி.ஐ ஒப்புக்கொண்டிருக்கிறது.

அந்த வழக்கில் மார்டின் முழுவதுமாக விசாரிக்கப்பட்டார் எனவும் பின் அந்த வழக்கு கைவிடப்பட்டது எனவும் மத்திய புலனாய்வு துறை தெரிவித்துள்ளது.

அந்த நபர் அமெரிக்க குடிமகன் என்றும் அவரின் பெயர் ஒமர் மடீன் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

பல உயிர்களை பலிவாங்கிய இந்நிகழ்வு, அமெரிக்க வரலாற்றின் மிக கொடிய துப்பாக்கிச் சூடாக கருதப்படுகிறது.

ஓர்லாண்டோவில் உள்ள ஒரு பாலுறவுக்காரர்களுக்கான இரவு கேளிக்கையகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தி, ஐம்பது பேரை கொன்ற நபர், இஸ்லாமிய அரசு என்று தம்மை அழைத்துக்கொள்ளும் அமைப்புக்கு விசுவாசம் செய்து கொண்டவர் என்று அமெரிக்காவின் மத்திய புலனாய்வு துறை கூறுகிறது.


No comments

Powered by Blogger.