Header Ads



கோத்தபாயவை அரசிற்குள் உள்வாங்க, மேற்கொண்ட சதி முயற்சியே இராணுவ முகாம் வெடிப்பு

கோத்தபாய ராஜபக்சவை அதிகாரத்தில் அமர்த்தும் நோக்கில் கூட்டு எதிர்க்கட்சியினர் மேற்கொண்ட சதி முயற்சியே கொஸ்கம இராணுவ முகாம் ஆயுதக்களஞ்சியசாலை வெடி சம்பவமென நவ சமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

இன்று -09- வியாழக்கிழமை கொழும்பில் அமைந்துள்ள கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் ஏனைய சம்பவங்களை மூடி மறைப்பதற்கு இந்த விடயத்தை பயன்படுத்துவவதாக கூட்டு எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோத்தபாய அதிகாரத்தில் இருந்திருந்தால் இந்த சம்பவம் நடைபெற்றிருக்காது என கூட்டு எதிர்க்கட்சி தெரிவிப்பதாகவும், இந்த தகவலில் இருந்து இந்த சம்பவத்துடன் யார் தொடர்புபட்டிருக்கிறார்கள் என்பது தெளிவாவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கோத்தபாய ராஜபக்சவை, அரசாங்கத்திற்குள் உள்வாங்கி பாதுகாப்புச் செயலாளராக நியமிப்பதற்கான பணிகளை கூட்டு எதிர்க்கட்சியினர் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோத்தபாய, முன்னர் தான் அரசியலில் பிரதான இடத்தை வகித்ததையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பை வகிக்க வேண்டும் என மக்கள் விரும்புவதாகவும் தெரிவித்திருந்த விடயத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

No comments

Powered by Blogger.