இலங்கை அரசு, முஸ்லிம்கள் விடயத்தில் அக்கறை - மகிழ்ச்சியடைகிறதாம் ஈரான்
ஈரான் இஸ்லாமிய குடியரசினால் இலங்கைக்கு 5 டொன் பேரீத்தம் பழம் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
அதனை உத்தியோக பூர்வமாக கையளிக்கும் நிகழ்வு நேற்று தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சில் இடம்பெற்றது.
இதன்போது கருத்து தெரிவித்த இலங்கைக்கான ஈரான் குடியரசின் மேலதிக தூதுவர் நவீத் மொஹந்தர்,
இலங்கை அரசு முஸ்லிம்கள் விடயத்தில் அக்கறையுடன் செயற்படுவதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம். அத்துடன், எதிர்வரும் காலங்களில் இலங்கை முஸ்லிம்களுக்கு ரமழான் மாதத்தில் நோன்பு துறப்பதற்காக அதிகமாக பேரீத்தம் பழம் அன்பளிப்பு செய்ய எண்ணியுள்ளதாக தெரிவித்தார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம், இலங்கை முஸ்லிம்களுக்கு பேரீத்தம் பழம் அன்பளிப்பு செய்தமைக்காக ஈரான் இஸ்லாமிய குடியரசுக்கு நன்றிகளை தெரிவிக்கிறோம். ஏற்கனவே சவூதி அரசு 200 டொன் ஈத்தம் பழம் அன்பளிப்பு செய்திருந்தது.
வழமையாக சவூதியினால் கிடைக்கப்பெறும் ஈத்தப்பழத்தின் தொகையில் இது குறைவானதாகும். இதனால் இம்முறை முஸ்லிம்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கு பேரீத்தம் பழம் போதாமல் போனது.
எனவே தற்போது ஈரான் அரசு அன்பளிப்பு செய்திருக்கும் பேரீத்தம் பழம் விரைவில் பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.
முக்கியமாக அரபுக் கலாசாலைகள் மற்றும் அரச நிறுவனங்களின் இப்தார் ஏற்பாடுகளுக்கும் இந்த அன்பளிப்பிலிருந்து வழங்க எண்ணியிருக்கிறோம்.
இலங்கை ஈரானுக்கிடையே நீண்டதொரு வரலாற்று உறவு நிலவுகின்றது. இலங்கைக்கு தொடர்ந்தும் உதவும் நாடாக ஈரான் விளங்குகின்றது என்றார்.
அத்துடன் ஈரான் அரசாங்கத்தினால் அன்பளிப்பு செய்யப்பட்ட பேரீத்தம் பழத்திற்கான இறக்கு மதி வரிகள் உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் அந்நாடு பொறுப்பேற்றுள்ளது.
இதேவேளை, சவூதி அரசினால் இலங்கைக்கு அன்பளிப்புச் செய்யப்பட்ட பேரீத்தம் பழத்திற்கான இறக்குமதி வரி விலக்களித்திருந்தது.
இருந்தபோதிலும் குறித்த பேரீத்தம் பழங்களை பேணிப்பாதுகாப்பதற்காக குளிரூட்டிகளை பயன்படுத்தவேண்டிய நிலை ஏற்பட்டமையால் மேலதிகமாக 1.5 பில்லியன் வரி அறவிடவேண்டிய தேவை ஏற்பட்டது.
அதனையும் அரசாங்கமே பெறுப்பேற்றது என்றார்.

What is the meaning of that they had to pay additional 1.5 Billion mean 150 crore for 200 MT dates mean one ton cost 75 lacks. So 1 kg dates tax only cost RS 7500? So as a responsible website you must be very careful when you publish these type of news. This is not a first time the big error when reporting about the amount of money. First must know the deference of Million and Billion.
ReplyDeleteenakkum 37 vayathaaginrathu... colombo vil pirandhu angeye vasikkum emakko andai veettarko idhuvarai intha Arabia naadugalin ilavasa dates valangappaduvathillai... appadiyenraal intha dates Ellaam ennavaaginrathu..? ithilum ilaabam thedum arasiyal vaathigal enge. ... Alhamdulillah engalukku illavittaalum variya kudumbangalukkaavathu uriya murayil pagirndhalikkappadugiranava enbathum kaelvikkuriyaagave ullathu....
ReplyDeleteI ask Iran stop killing our brothers
ReplyDeleteFirst please stop killing children women and elder in sriya and iraq we can give what you want even money but let you free our Muslim brothers please
எமது அரசியல்வாதிகள் இலங்கை முஸ்லிம்களை 200 ரூபா கொடுத்து ஒரு கிலோ ஈத்தம் பழம் வாங்க வக்கில்லாதவர்கள் என்று நினைத்துக் கொண்டார்களோ...?
ReplyDeleteஅவர்களாக விரும்பிக் கொடுத்தால், அன்பளிப்பு; இவர்களாக கேட்டு வாங்கினால், பிச்சை.