Header Ads



இலங்கை அரசு, முஸ்­லிம்கள் விட­யத்தில் அக்­க­றை­ - மகிழ்ச்­சி­ய­டை­கிறதாம் ஈரான்


ஈரான் இஸ்­லா­மிய குடி­ய­ரசினால் இலங்­கைக்கு 5 டொன் பேரீத்தம் பழம் அன்­ப­ளிப்பு செய்­யப்­பட்­டுள்­ளது. 

அதனை உத்­தி­யோக பூர்­வ­மாக கைய­ளிக்கும் நிகழ்வு நேற்று தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சில் இடம்­பெற்­றது. 

இதன்­போது கருத்து தெரி­வித்த இலங்­கைக்­கான ஈரான் குடி­ய­ரசின் மேல­திக தூதுவர் நவீத் மொஹந்தர், 

இலங்கை அரசு முஸ்­லிம்கள் விட­யத்தில் அக்­க­றை­யுடன் செயற்­ப­டு­வ­தை­யிட்டு நாம் மகிழ்ச்­சி­ய­டை­கிறோம். அத்­துடன், எதிர்­வரும் காலங்­களில் இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு ரமழான் மாதத்தில் நோன்பு துறப்­ப­தற்­காக அதி­க­மாக பேரீத்தம் பழம் அன்­ப­ளிப்பு செய்ய எண்ணியுள்­ள­தாக தெரி­வித்தார். 

இந்­நி­கழ்வில் உரை­யாற்­றிய தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம், இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு பேரீத்தம் பழம் அன்­ப­ளிப்பு செய்­த­மைக்­காக ஈரான் இஸ்­லா­மிய குடி­ய­ர­சுக்கு நன்­றி­களை தெரி­விக்­கிறோம். ஏற்­க­னவே சவூதி அரசு 200 டொன் ஈத்தம் பழம் அன்­ப­ளிப்பு செய்­தி­ருந்­தது.

வழ­மை­யாக சவூ­தி­யினால் கிடைக்­கப்­பெறும் ஈத்­தப்­ப­ழத்தின் தொகையில் இது குறை­வா­ன­தாகும். இதனால் இம்­முறை முஸ்­லிம்­க­ளுக்கு பகிர்ந்­த­ளிப்­ப­தற்கு பேரீத்தம் பழம் போதாமல் போனது.

எனவே தற்­போது ஈரான் அரசு அன்­ப­ளிப்பு செய்­தி­ருக்கும் பேரீத்தம் பழம் விரைவில் பகிர்ந்­த­ளிக்­கப்­ப­ட­வுள்­ளது.

முக்­கி­ய­மாக அரபுக் கலா­சா­லைகள் மற்றும் அரச நிறுவ­னங்­களின் இப்தார் ஏற்­பா­டு­க­ளுக்கும் இந்த அன்­ப­ளிப்­பி­லி­ருந்து வழங்க எண்ணியி­ருக்­கிறோம்.  

இலங்கை ஈரா­னுக்­கி­டையே நீண்டதொரு வர­லாற்று உறவு நில­வு­கின்­றது. இலங்­கைக்கு தொடர்ந்தும் உதவும் நாடாக ஈரான் விளங்­கு­கின்­றது என்றார். 

அத்­துடன் ஈரான் அர­சாங்­கத்­தினால் அன்­ப­ளிப்பு செய்­யப்­பட்ட பேரீத்தம் பழத்­திற்­கான இறக்கு மதி வரிகள் உள்­ளிட்ட அனைத்து செல­வு­க­ளையும் அந்­நாடு பொறுப்­பேற்­றுள்­ளது. 

இதே­வேளை, சவூதி அர­சினால் இலங்­கைக்கு அன்­ப­ளிப்புச் செய்­யப்­பட்ட பேரீத்தம் பழத்­திற்­கான இறக்­கு­மதி வரி விலக்­க­ளித்­தி­ருந்­தது.

இருந்­த­போ­திலும் குறித்த பேரீத்தம் பழங்களை பேணிப்பாதுகாப்பதற்காக குளிரூட்டிகளை பயன்படுத்தவேண்டிய நிலை ஏற்பட்டமையால் மேலதிகமாக 1.5 பில்லியன் வரி அறவிடவேண்டிய தேவை ஏற்பட்டது.

அதனையும் அரசாங்கமே பெறுப்பேற்றது என்றார். 

4 comments:

  1. What is the meaning of that they had to pay additional 1.5 Billion mean 150 crore for 200 MT dates mean one ton cost 75 lacks. So 1 kg dates tax only cost RS 7500? So as a responsible website you must be very careful when you publish these type of news. This is not a first time the big error when reporting about the amount of money. First must know the deference of Million and Billion.

    ReplyDelete
  2. enakkum 37 vayathaaginrathu... colombo vil pirandhu angeye vasikkum emakko andai veettarko idhuvarai intha Arabia naadugalin ilavasa dates valangappaduvathillai... appadiyenraal intha dates Ellaam ennavaaginrathu..? ithilum ilaabam thedum arasiyal vaathigal enge. ... Alhamdulillah engalukku illavittaalum variya kudumbangalukkaavathu uriya murayil pagirndhalikkappadugiranava enbathum kaelvikkuriyaagave ullathu....

    ReplyDelete
  3. I ask Iran stop killing our brothers
    First please stop killing children women and elder in sriya and iraq we can give what you want even money but let you free our Muslim brothers please

    ReplyDelete
  4. எமது அரசியல்வாதிகள் இலங்கை முஸ்லிம்களை 200 ரூபா கொடுத்து ஒரு கிலோ ஈத்தம் பழம் வாங்க வக்கில்லாதவர்கள் என்று நினைத்துக் கொண்டார்களோ...?
    அவர்களாக விரும்பிக் கொடுத்தால், அன்பளிப்பு; இவர்களாக கேட்டு வாங்கினால், பிச்சை.

    ReplyDelete

Powered by Blogger.