தேசிய செஸ் சம்பியனாக, செய்னப் சவுமி
இலங்கை செஸ் சம்மேளனம் 2016ம் ஆண்டுக்காக ஒழுங்கு செய்திருந்த செஸ் போட்டியில் கண்டி உயர் பெண்கள் கல்லூரி மாணவி செய்னப் சவுமி தேசிய செம்பியனாக வாகை சூடினார்.
கொழும்பு சர்வதேச ஹொக்கி விளையாட்டு கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இப் போட்டியில் நாடளாவிய ரீதியல் திறமைவாய்ந்த செஸ் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்குபற்றினர். இரண்டு முறை செம்பியனான தசுனி மென்டிசை மூன்றாம்; முறை செம்யியனாக முடியாதவாறு தடுத்து செய்னப் சவுமி செம்பியனாக வாகை சூடிக்கொண்டார்.
கல்லூர் மட்டப் போட்டிகளில் பல பதக்கங்களை வென்றுள்ள 16வயதுடைய செய்னப் இவ்வாண்டு மொங்கோலியா, உலான்பாத்தாரில் நடைபெற்ற ஆசிய இளைஞர் செஸ் செம்பியன்ஷிப் போட்டியிலும் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் அக்குறணை ஹம்பத்தனையைச் சேர்ந்த முஹம்மத் சவுமி - ஷாமிலா தம்பதியரின் புதல்வியாவார்.
(தகவல் : நூருல் அயின் நஜ்முல் ஹுசைன்)

Congratulations....
ReplyDeleteMasah Allah. Congratulations to Our national champion
ReplyDelete