Header Ads



பள்ளிவாசல் மீது பிக்குகளும், பொலிஸாரும் விதித்துள்ள தடையை நீக்கு..!

-விடிவெள்ளி ஏ.ஆர்.ஏ.பரீல்-

 பாத்யா மாவத்­தை­ பள்­ளி­வா­சலின் சட்ட அனு­மதி பெற்ற விஸ்­த­ரிப்­புக்கு  பௌத்த பிக்­கு­களின் எதிர்ப்­பி­னை­ய­டுத்து பொலிஸார் விதித்­துள்ள தடையை நீக்­கு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கும்­படி பள்­ளி­வாசல் நிர்­வாகம் ஜனா­தி­பதி , பிர­தமர்  ஆகி­யோ­ரிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்­துள்­ளது.

மேலும் சட்­ட­ரீ­தி­யான அனு­மதி பெற்று மேற்­கொள்­ளப்­படும் விஸ்­த­ரிப்பு பணி­க­ளுக்கு எதிர்ப்பு தெரி­விப்­பதும் தடை­வி­திப்­பதும் மனித உரி­மை­களை மீறும் செய­லாகும் எனவே பாத்யா மாவத்த பள்­ளி­வாசல் விஸ்­த­ரிப்பு தடை விவ­காரம் தொடர்­பாக விசா­ரணை யொன்­றினை நடாத்தி நீதி­பெற்றுத் தரு­மாறு மனித உரிமை ஆணைக்­கு­ழு­வி­டமும் கோரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

பாத்யா மாவத்தை பள்­ளி­வாசல் விஸ்­த­ரிப்­புக்கு எதி­ராக கடந்த 23 ஆம் திகதி இரவு ஆனந்­த­சா­கர தேரர் தலை­மை­யி­லான குழு­வினர் கடும் எதிர்ப்பு தெரி­வித்­த­துடன் தெஹி­வளை பொலிஸ் நிலை­யத்­திலும் முறைப்­பாடு செய்­தனர். தேரர்­களின் முறைப்­பாட்­டி­னை­ய­டுத்து தெஹி­வளைப் பொலிஸார் கடந்த 24 ஆம் திகதி இரு­த­ரப்­பி­ன­ரையும் அழைத்து விசா­ர­ணை­யொன்­றினை நடாத்­தினர்.

பொலிஸ் நிலை­யத்தில் பள்­ளி­வாசல் விஸ்­த­ரிப்பு பணி­யினை தொடர்­வ­தற்கு அனு­ம­திக்­க­மு­டி­யாது. இதற்கு ஒரு போதும் அனு­ம­திக்க மாட்டோம் என தேரர்கள் தெரி­வித்­தனர். பள்­ளி­வாசல் நிர்­வா­கி­களும் R.R.T அமைப்பின் சட்­டத்­த­ர­ணி­களும் பள்­ளி­வாசல் விஸ்­த­ரிப்பு பணி­யினை நிறுத்த முடி­யா­தெ­னவும் சட்ட ரீதி­யாக அனு­ம­தி­பெற்றே விஸ்­த­ரிப்பு பணிகள் நடை­பெ­று­வ­தா­கவும் தெரி­வித்­தனர்.

கடந்த 25 ஆம் திகதி மாலை கட்­டட நிர்­மாணப் பொருட்கள் பள்­ளி­வா­ச­லுக்­க­ருகில் இறக்கிக் கொண்­டி­ருந்த சந்­தர்ப்­பத்தில் பொலிஸார் அங்கு வந்து அதற்குத் தடை­வி­தித்­தனர். இத­னை­ய­டுத்து கடந்த 26 ஆம் திகதி பள்­ளி­வாசல் விஸ்­த­ரிப்பு பணி­களை நிறுத்­தும்­படி பொலிஸார் அறி­வித்தல் அனுப்பி வைத்­தனர்.

பிரதி பொலிஸ் அத்­தி­யட்­சகர் நிர்­மா­ணப்­ப­ணி­களை நிறுத்­தும்­படி கோரியும் நிர்­மா­ணப்­ப­ணிகள் நிறுத்­தப்­ப­ட­வில்லை. நீதி­மன்றம் உத்­த­ர­விட்டால் மாத்­தி­ரமே நிர்­மாணப் பணி­களை நிறுத்த முடியும் என பள்­ளி­வாசல் நிர்­வாகம் தெரி­வித்­தது. இதே­வேளை தெஹி­வளை கல்­கிசை மாந­கர சபை முதல்­வரும் வேலை­களை நிறுத்­தும்­படி அறி­வித்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

அப்­பி­ர­தேச தேரர்கள் பள்­ளி­வா­ச­லுக்கு தொடர்ந்தும் அச்­சு­றுத்தல் விடுப்­ப­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இந்­நி­லை­யிலே இது தொடர்­பாக பள்­ளி­வாசல் நிர்­வாகம் ஜனா­தி­பதி, பிர­தமர் மற்றும் மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் என்­போ­ருக்கு முறைப்­பாடு செய்­துள்­ளது.

இப்­பள்­ளி­வாசல் 2001 ஆம் ஆண்டு முதல் இயங்­கி­வ­ரு­கி­றது. 2016 ஆம் ஆண்டில் பள்­ளி­வா­ச­லாக வக்பு சபையில் பதிவு செய்­யப்­பட்­டுள்­ள­மையும் குறிப்­பி­டத்­தக்­கது.

R.R.T அமைப்பின் தலைவர் சட்­டத்­த­ரணி சிராஸ் நூர்தீன் தலை­மை­யி­லான சட்­டத்­த­ர­ணிகள் குழு­வொன்று பள்­ளி­வாசல் விஸ்­த­ரிப்­பினை முன்­னெ­டுப்­ப­தற்கும் முஸ்­லிம்­களின் உரி­மை­க­ளைப்­பா­து­காப்­ப­தற்­கு­மான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.

இதேவேளை அண்மையில் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையின் தலைமைக் காரியாலயத்துக்கு மேற்கொண்ட நல்லெண்ண விஜயத்தின் போது உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி பாத்யா மாவத்தை பள்ளிவாசல் பிரச்சினை தொடர்பாக பொலிஸ் மா அதிபரிடம் கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கதாகும்.

4 comments:

  1. Why do not you go to court? My3 & Ranil will do nothing because the elections are over....

    ReplyDelete
  2. The monks are taking law and order in the good governance government.

    The GG government is seeing as a scene

    ReplyDelete
  3. Ranil is a Wolf in Sheep clothing. This so-called good governance is good only on paper.

    ReplyDelete
  4. Don't give up our rights.That was our biggest mistake in DAMBULLA

    ReplyDelete

Powered by Blogger.