Header Ads



தாஜுத்தீன் கொலை சந்தேக நபருக்கு, மகிந்த அனுப்பிய இரகசிய தகவல்


தாஜூடீன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்க விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நி்லையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தனது வழக்கறிஞர் ஊடாக, சேனநாயக்கவுக்கு தகவல் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாக சிறைச்சாலை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அந்த தகவலில், அநுர சோநாயக்கவை பார்ப்பதற்கு தான் சிறைச்சாலைக்கு வந்தால் குற்றப் புலனாய்வு பிரிவினரின் குற்றச்சாட்டு மேலும் உறுதியாகும் வாய்ப்புகள் உள்ளது. ஆகையால் அவரை பார்ப்பதற்கு தான் வரவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

அநுர சேனாநாயக்கவை சந்தித்து மஹிந்தவின் வழக்கறிஞர், அநுரவின் வழக்கிற்காக ஒரு கோடி ரூபாய் என்றாலும் செலவிடுவதற்கு முன்னாள் ஜனாதிபதி தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஆட்சியில் இடம்பெற்ற மோசடிகள் மற்றும் கொலைகள் குறித்து தகவல் வெளியிடாமல், பொறுமையாக இருக்குமாறும் கேட்டுள்ளார்.

சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள அநுரவுக்கு தேவையான அனைத்து வசதிகளை செய்து தர மஹிந்த ஆயத்தமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

எனினும் மஹிந்தவினால் முன்வைத்த கோரிக்கைக்கு அநுர சேனாநாயக்க சாதகமான பதிலை வழங்கவில்லை என சிறைச்சாலை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆனால் மஹிந்தவின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளும்படி வழக்கறிஞர்கள் மன்றாடியதாக தெரிய வருகிறது.

கடந்த காலங்களில் மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர்களால் மேற்கொள்ளப்பட்ட பாரிய மோசடிகள் மற்றும் கொலைகளுக்கு உறுதுணையாக முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்க செயற்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அநுர சேனநாயக்கவினால் உண்மைகள் வெளிப்படுத்தப்படும் பட்சத்தில் மஹிந்த குடும்பத்தினர் பலர் கைது செய்து சிறையில் அடைக்கப்படும் நிலை ஏற்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

3 comments:

  1. அட போங்கடா

    ReplyDelete
  2. சும்மா நாடகமாடி மக்களை ஏமாத்தாம!

    ReplyDelete
  3. This is a time pass mega serial drama

    ReplyDelete

Powered by Blogger.