யுத்தவீரர்களை பயன்படுத்தி, நாய்களை குளிப்பாட்டிய பசில் ராஜபக்ச
-Ravaya : Aruna Jayavardana 12.06.2016
Tamil : ARM INAS-
பசில் ராஜபக்ச அவர்கள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக இருந்த காலத்தில் அவரின் பெறுமதிமிக்க இரண்டு நாய்களை பராமாரிக்க கடற்படையி ன் 6 படைவீரர்கள் நியமிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
“நாய்பராமரிக்கும்” பிரிவு என அழைக்கப்பட்ட இந்தப் பிரிவு இந்த நாய்களை பாராமரித்தல்,குளிப்பாட்டுதல், உடம்பை வாரிவிடுதல், அவற்றுக்கு மருந்து கொடுத்தல், உணவுகொடுத்தல்,நாயை பழக்குதல் போன்ற பணிவிடைகளை செய்ய நியமிக்கப்பட்டிருந்தது.
கோல்டன் ரிட்ரிவர் வர்க்க இரண்டு நாய்கள் இவ்வாறு வளர்க்கப்பட்டுள்ளன . அவ்விரு நாய்களில் அமெரிக்காவில் இருந்து கொண்டுவரப்பட்ட நாயின் பெறுமதி 7 லட்சம். இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட அடுத்த நாயின் பெறுமதி 2 லட்சம்.
இந்த இரண்டு நாய்களும் குளிர்காலநிலைக்கு பழக்கப்பட்டிருந்த நாய்கள் என்பதால் அந்த நாய்கள் முழுமையாக குளிரூட்டப்பட்ட அறையில் வைத்தே பராமரிக்கப்பட்டன. பொதுவாக உயர்ரக பெறுமதி கூடிய நாய்கள் இருப்பது பொலிஸ் திணக்களம் மற்றும் வான்படையினரிடம் மாத்திரமே ஆனால் பசில் ராஜபக்சவிடம் காணப்பட்ட நாய்களின் பெறுமதி இதனை விட பல மடங்கு பெறுமதி வாய்ந்தது என கணிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் தனது குடும்பத்தினருக்கு பணிவிடைகள் செய்ய பராமரிக்க கடற்படையின் 64 ஆண்,பெண் படையினரை பசில் ராஜபக்ச அவர்கள் நியமித்திருந்தார். போக்குவரத்து வசதிகளுக்கு 12 உதவியாளர்களும், உணவு சமைக்க பரிமாற 11 உதவியாளர்களும் , வீட்டுபராமரிப்புக்கு 26 உதவியாளர்களும், நாய்பராமரிப்புக்கு 6 உதவியாளர்களும் , மருத்துவ உதவிக்காக 4 உதவியாளர்களும் , உடற்பயிற்சி பயிற்றுவிப்புக்கு 2 உதவியாளர்களும் பசில் ராஜபக்சவின் மனைவி புஷ்பா ராஜபக்சவுக்கு பணிவிடை செய்ய 3 பெண் கடற்படையினரும் நியமிக்கப்பட்டிருந்தனர்.
அரச நியமன ஆவணங்களின்படி ஒரு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரின் பாதுகாப்புக்கு நியமிக்கப்படும் அதிகாரிகளின் எண்ணிக்கை 7 ஆகும். ஆனால் பசில் ராஜபக்ச அவர்கள் 01.01.2015 இல் 20 கடற்படையினரையும், பாதூகாப்பு படையின் 72 பேரையும் அவரின் பாதுகாப்பு கடமைகளுக்காக வைத்திருந்துள்ளார்.
2010.01.10 இலிருந்து 2015.01.10 வரை பாதுகாப்பு படையினரின் 84 உத்தியோகத்தர்கள், 7 பொலிஸ் உத்தியோகத்தர்கள் 7, கடற்படையின் 64 உத்தியோகத்தர்கள் இவரின் பணிவிடைகளுக்காக நியமிக்கப்பட்டிருந்தனர்.
அத்துடன் 2010 ஜனவரி 10 இலிருந்து, 2015 ஜனவரி 10 வரையான காலத்துக்குள் பசில் ராஜபக்ச தனது உள்நாட்டு வான்வழி போக்குவரத்துக்கு மட்டும் 155,451,612 ரூபா (1554 லட்சம்) செலவழிததுள்ளார். இதற்கான பணத்தை “கமநகும” திட்டத்திலிருந்து பெற்றுக்கொண்டுள்ளார்.
இப்படியான பொது வேலைத்திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணத்தினை இப்படி தனிப்பட்ட செலவுகளுக்கு பயன்படுத்துவது சட்டவிரோதமானது. மேற்குறிப்பிட்ட தொகை பணத்தில் பெருமளவு தொகை பணம் அவரின் தனிப்பட்ட அலுவல்களுக்கே செலவழிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
2014 மார்ச் மாதம் ஆரம்பத்தில் காலி லைட் ஹவுஸ் ஹோட்டலில் விடுமுறை ஒன்றை கழிக்க இவரது குடும்பத்தார் அனைவரும் அங்கு சென்றிருப்பது ஹெலிகள் மூலம்.
2014 ஆகஸ்ட் 29, செப்டெம்பர் 2 திகதிகளில் பதுள்ளைக்கு ஹெலியில் சென்றுள்ளதுடன் இப்பயணம் அரசின் எந்த அபவிருத்தி திட்டத்துடனும் தொடர்புபட்டதல்ல என்பதும் தெரியவந்துள்ளது.
2014 ஒக்டோபர் 26 ஆம் திகதி பசில்ராஜபக்ச பதுள்ள கந்தகடியவுக்கு ஒரு தனிப்பட்ட விஜயத்துக்காக ஹெலிக்கு செலுத்திய பணம் 553,219 ரூபா. இந்த தொகை கூட “கமநகும” திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட பணத்திலிருந்தே செலுத்தியுள்ளார்.
இப்படியான தனது தனிப்பட்ட விடயங்களுக்காக பசில் ராஜபக்ச அவர்கள் அரசின் பணத்தின் மூலம் செலவழித்த பணத்தின் ஆரம்ப தொகை 419,822,413 ரூபாய்.
ஒரு அமைச்சர் என்ற வகையில் பசில் அவர்களுக்கு உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டிருந்து 3 வாகனங்களுக்கு மேலதிகமாக இன்னும் அதி சொகுசு வாய்ந்த மற்றும் குண்டு துளைக்காத 14 வாகனங்களை இவர் பயன்படுத்தியுள்ளார்.
WPGD 7054 (BMW High Security Car)
WPGD 7009 (BMW High Security Car)
WPKC 8510 (RenRover High Security Car)
இந்த வாகனங்கள் தான் இவருக்கு உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்ட வாகனங்கள்.
இதற்கு மேலதிகமாக
A385178 (BENZ High Security Car)
WPKH 4184 (High Security Defender).
WPKY 5541 (NISSANRIANA)
WPLW 0962 (Toyota Ambulance),
WPKL 0336 (Rexton High Security),
WPPA 7089 (Belro Cab),
WPKC 2271 (Defender)
WPKH 1128 (Defender)
WPLC 6632 (TAT Single Cab) வாகனங்களை பயன்படுத்தியுள்ளார்.
இந்த விடயங்களை அடிப்படையாக வைத்து அரசின் பணம் மற்றும் சொத்துக்களை,அவருக்கு வழங்கப்பட்ட வரப்பிரதாசங்களை தவறாக பயன்படுத்தியது தொடர்பில் ஊழல்களை விசாரிப்பதற்கான ஜனாதிபதி கமிசன் விசாரணைகளை நடாத்தி வருகிறது. மேலும் இதற்கான அனுமதியினை வழங்கிய நிதி அமைச்சின் முன்னால் செயலாளர் பீபீ ஜயசுந்தர வும் ஜனாதிபதி கொமிசனுக்கு விசாரணைக்காக அழைக்ப்பட்டுள்ளர்.

இதுவெல்லாம் வெறும் புஸ்வானம் என்பதையும் கருத்திற்கொள்ளவும்
ReplyDelete