உயரத்தில் குறைவாகவேனும் மினாராவை நிர்மாணிப்போம் - கண்டி பள்ளிவாசல்கள் சம்மேளனம்
-ARA.Fareel-
கண்டி நகர லைன் பள்ளிவாசலின் மினாரா நிர்மாணப் பணிகள் கண்டி மாநகர ஆணையாளரின் உத்தரவின்படி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் கண்டி மாநகர சபை என்பனவற்றுடன் கலந்துரையாடி தற்போதைய திட்டமிடப்பட்டுள்ள உயரத்திலும் குறைவானதாக மினாராவை பூர்த்தி செய்ய தீர்மானித்திருப்பதாகவும் கண்டி நகர பள்ளிவாசல் சம்ளேனம் தெரிவித்துள்ளது.
கண்டி நகர பள்ளிவாசல் சம்மேளனத்தின் நிர்வாகியொருவர் இத்தகவலை விடிவெள்ளிக்குத் தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;
தற்போதுள்ள பள்ளிவாசலின் புதிய கட்டடம் 2000 ஆம் ஆண்டிலேயே திறந்து வைக்கப்பட்டது. பள்ளிவாசலின் மினாரா நிர்மாணத்திற்கு தனியாக வரை படத்துடன் அனுமதி கோரப்பட்டிருந்தது.
முன்னாள் கண்டி மாநகர முதல்வர் கண்டி நகர் திட்டத்தினை முன்னெடுத்து செயற்படுத்தினார். மினரா நிர்மாணத்திற்கான அனுமதி வழங்கப்பட்டிருக்காவிடினும் முன்னாள் மேயர் ஒரு தடவை பள்ளிவாசலுக்கு விஜயம் செய்து மினாரா நிர்மாணப் பணியினை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு கூறினார். அதற்கினங்கவே பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
இந்தப் பள்ளிவாசலுக்கான காணி 1905 ஆம் ஆண்டு ஆங்கிலேயரினால் மீள எவருக்கும் கையளிக்க முடியாத அடிப்படையில் வழங்கப்பட்டதாகும். ஆங்கிலேயரினால் அழைத்து வரப்பட்ட'மலே' இன முஸ்லிம்களின் தொழுகைக்காகவே இந்தக் காணி வழங்கப்பட்டு ஆரம்பத்தில் நிறுவப்பட்டது. தற்போதைய 3 மாடிகளைக் கொண்ட கட்டடம் 1980 ஆம் ஆண்டு அனுமதி பெறப்பட்டு கட்டப்பட்டது. நிர்மாணப் பணிகள் 20 வருடங்களின் பின்பே பூர்த்தி செய்யப்பட்டன.
மினாரா நிர்மாணம் தலதா மாளிகையை விடவும் உயரமாக திட்டமிடப்படவில்லை. தற்போதைய சிட்டி சென்டர் கட்டடத்தை விடவும் 15 அடிகள் குறைவாகவே திட்டமிடப்பட்டுள்ளது.
பள்ளிவாசல் நிர்வாகமும் அமைச்சர் ஹலீமும் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்தோம். மினாரா வரைபடத்தையும் அவர்களிடம் காட்டினோம்.
நிர்மாணப் பணிகளை இடை நிறுத்தி வைத்துள்ளோம். கண்டி மாநகர ஆணையாளர் நிர்மாணப் பணிகளை நிறுத்தும்படி கோரியுள்ளார்.
திட்டமிட்டப்பட்டுள்ள உயரத்திலும் குறைவாகவேனும் மினாராவை நிர்மாணித்துக் கொள்ளத் தீர்மானித்துள்ளோம். இது தொடர்பாக நகர அபிவிருத்தி அதிகார சபை கண்டி மாநகர சபை என்பனவற்றுடன் கலந்துரையாடவுள்ளோம் என்றார்.

What is use full of minnarah.The minnarath does not used to bring u to the Jannath.We shoud coorprate with orther religents.Pure muslim never miss the prayer so dont try to built the minnarath,try spred dawah.
ReplyDelete👍
DeleteBithath muslims allways like that no mianra days of rasool sal.
ReplyDeleteஇலங்கையில் எங்களுக்கு தரப்பட்ட சுதந்திரம் வேரு நாடுகளில் வலங்கப்படுவது இல்லை
ReplyDeleteஇஸ்லாம் பிற சமூகத்துக்கு மத்தியில் நிதானமாகவே நடக்க கட்டளையிட்டு உள்ளது
மனோரா அவசிய அற்றது
சமூக நல் இணக்கம் அவசியமானது
மனோரா அவசியம் அற்றது
ReplyDeleteசமூகம் நல்லிணக்க அவசியம் ஆனது
இதுவே இஸ்லாமிய சலாமத்