Header Ads



தெஹி­வளை பள்­ளி­வாசல், சிறிய விஸ்­த­ரிப்பு பணி­க­ளுக்கு அனு­மதி


 -விடிவெள்ளிARA.Fareel-


​சட்­ட­ரீ­தி­யான ஆவ­ணங்கள் பெற்­றுக்­கொள்­ளப்­பட்டு மேற்­கொள்­ளப்­பட்டு வரும் தெஹி­வளை பாத்யா மாவத்தை பள்­ளி­வாசல் விஸ்­த­ரிப்பு பணிகள் பொலி­ஸா­ரினால் தடுத்து நிறுத்­தப்­ப­டு­கின்­றமை தொடர்­பாக பொலிஸ் உயர் அதி­கா­ரி­க­ளிடம் முறை­யிட்­ட­த­னை­ய­டுத்து கொழும்பு பிரதி பொலிஸ் மா அதிபர் நோன்பு காலத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு அவ­சியம் தேவைப்­படும் சில விஸ்­த­ரிப்பு பணி­களை 7 நாட்­க­ளுக்குள் பூர்த்தி செய்து கொள்­ளும்­படி அனு­மதி வழங்­கி­யுள்ளார்.

பள்­ளி­வாசல் யன்­னல்­க­ளுக்­கான கண்­ணா­டிகள் மற்றும் படிகள் நிர்­மாணம் உட்­பட சிறிய விஸ்­த­ரிப்பு பணி­க­ளுக்கு அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது. தெஹி­வளை பாத்யா மாவத்தை பள்­ளி­வாசல் விஸ்­த­ரிப்பு விவ­கா­ரத்­துக்கு தீர்­வு­காணும் வகையில் சந்­திப்­பொன்று பொலிஸ் உயர் அதி­கா­ரிகள், முஸ்லிம் அமைச்­சர்கள், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ள­னத்தின் அங்கம் பெறும் பள்­ளி­வா­சல்­களின் தலை­வர்கள், அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபை பிர­தி­நி­திகள் என பலரின் பங்­கு­பற்­று­த­லுடன் நேற்று திங்­கட்­கி­ழமை காலை தெஹி­வளை பெரிய பள்­ளி­வா­சலில் நடை­பெற்­றது.

இச்­சந்­திப்பில் அமைச்­சர்கள் ரிசாத் பதி­யுதீன், ஏ.எச்.எம்.பௌசி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் முஜிபுர் ரஹ்மான், எம்.எஸ். மரிக்கார் மற்றும் அசாத்­சாலி உட்­பட பலர் கலந்து கொண்­டனர்.

கொழும்பு பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ள­னத்தின் செய­லா­ளரும் R.R.T. அமைப்பின் தலை­வ­ரு­மான சட்­டத்­த­ரணி சிராஸ் நூர்தீன் பாத்யா மாவத்தை பள்­ளி­வாசல் தொடர்­பான பிரச்­சி­னை­களை முன்­வைத்தார்.

அவர் பொலிஸ் உயர் அதி­கா­ரி­க­ளிடம் விளக்­க­ம­ளிக்­கையில் பாத்யா மாவத்தை பள்­ளி­வாசல் மாந­கர சபை­யி­ட­மி­ருந்து சட்­ட­ரீ­தி­யான அனு­மதி பெறப்­பட்டே விஸ்­த­ரிப்பு செய்­யப்­ப­டு­கின்­றது. இந்த விஸ்­த­ரிப்­புப்­பணி எதிர்ப்பு நட­வ­டிக்­கை­களில் பௌத்த தேரர்கள் சிலர் ஈடு­பட்­டுள்­ளனர். பொலிஸார் இந்த விஸ்­த­ரிப்பு பணி­களை நிறுத்தி வரு­கின்­றனர்.

கடந்த சனிக்­கி­ழமை மாலை 4 மணிக்கு அங்கு வந்த கொஹு­வளை பொலிஸார் விஸ்­த­ரிப்பு பணி­களை நிறுத்­தி­ய­துடன் விஸ்­த­ரிப்பு பணி­களில் ஈடு­பட்­டி­ருந்த மேசன்­மா­ரையும் தடுத்­த­துடன் தொடர்ந்தும் பள்­ளி­வாசல் விஸ்­த­ரிப்பு பணியில் ஈடு­ப­டு­வ­தென்றால் பொலிஸில் அனு­மதி பெற­வேண்­டு­மெ­னவும் அறி­வு­றுத்­தி­யுள்­ளனர்.

பொலி­ஸா­ரினால் இவ்­வாறு தடை­செய்ய முடி­யாது. பொலிஸார் பய­மு­றுத்தி வரு­கி­றார்கள். நீதி மன்றம் தடை­யுத்­த­ர­வொன்றைப் பிறப்­பித்­தாலே விஸ்­த­ரிப்பு பணி­களை நிறுத்த முடியும்.

முஸ்­லிம்கள் ஆட்­சி­மாற்­றத்­திற்கு பெரிதும் ஒத்­து­ழைத்­தார்கள் என்­றாலும் இன்று பள்­ளி­வாசல் நிர்­மா­ணங்­களும் விஸ்­த­ரிப்­பு­களும் பொலி­ஸா­ரி­னாலும் தேரர்­க­ளாலும் தடுக்­கப்­ப­டு­கின்­றன.

இவை சட்­டத்­துக்கும் நீதிக்கும் புறம்­பான செயற்­பா­டு­க­ளாகும் என்­பதை எடுத்து விளக்­கினார்.

இதனை­ய­டுத்து ஒரு வார காலத்­துக்குள் பள்­ளி­வா­சலின் சிறிய விஸ்­த­ரிப்பு பணி­களை மாத்­திரம் பூர்த்தி செய்து கொள்­வ­தற்கு பிரதி பொலிஸ்மா அதிபர் அனு­மதி வழங்­கி­யுள்ளார். ஏனைய விஸ்­த­ரிப்பு நட­வ­டிக்­கைகள் தொடர்பில் உரிய நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­படும் என்றார்.

நடை­பெற்ற சந்­திப்பில் கொஹு­வளை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி, சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர், உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் ஆகியோர் கலந்து கொண்­டி­ருந்­தனர்.

இதே­வேளை, தெஹி­வளை, கல்­கிசை மாந­கர சபை முதல்வர் ஏ.எம்.டீ.எச்.தன­சிறி அம­ர­துங்க கடந்த மே மாதம் 30 ஆம் திகதி பள்­ளி­வாசல் விஸ்­த­ரிப்பு பணி­களை தற்­கா­லி­க­மாக நிறுத்­தும்­படி பள்­ளி­வாசல் நிர்­வா­கத்­துக்கு கடிதம் ஒன்­றினை அனுப்பி வைத்­துள்ளார்.

அந்தக் கடி­தத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது தெஹி­வளை, களு­போ­வில, ஸ்ரீமா விகாரை வீதி, இலக்கம் 84 இல் கல்வி நட­வ­டிக்­கை­க­ளுக்­காக கட்­டடம் ஒன்று நிர்­மா­ணிப்­ப­தற்கு KBB/ 143/2015 இலக்க அனு­ம­திப்­பத்­திரம் வழங்­கப்­பட்­டுள்­ளது.

என்­றாலும் இப்­பி­ர­தேச மக்கள் இந்த கட்­டட நிர்­மா­ணத்­துக்கு எதிர்ப்பு தெரி­விப்­பதால் இது தொடர்­பான விசா­ர­ணை­யொன்று நடத்தி தீர்­மானம் ஒன்று மேற்­கொள்ளும் வரை கட்­டட நிர்­மாண பணி­களை தற்­கா­லி­க­மாக நிறுத்­தும்­படி வேண்டிக் கொள்­கிறேன் எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

கடி­தத்தின் பிர­திகள் களு­போ­வில பாதியா மாவத்தை சார­னந்த தம்ம பன்­ச­லையைச் சேர்ந்த என­மல்­தெ­னியே சார­னந்த தேரர் களு­போ­வில களுபோவில ஹத்போதி ரஜமகா விகாரையைச் சேர்ந்த கரவனெல்லே காசியப்ப தேரர் மற்றும் கொஹுவலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

1 comment:

  1. இப்ப பொல்லு குடுத்து அடிவாங்கிற கதையாப் போச்சி முஸ்லிம்களுக்கு. முன்னர் தனிக்கட்சி ஆட்சியில் நடந்த அனியாயம் ஓர் அளவு. இப்ப இரண்டு பெரும்பான்மை கட்சியும் சேர்ந்த ஆட்சியில் பெரிய அநியாயம் நடக்குது. முஸ்லிம்கள்மீது பேரினவாதிகள் நடத்தும் பிரச்சினைகள் ஒன்றா இரண்டா முழுநாட்டிலும் பிரச்சினை. ஏன் இவ்வாறு செய்கிரார்கள், முஸ்லிம்கள் இலங்கையின் உயரச்சிக்காக பல்வேறு துறைகளிலும் எல்லாக்கால கட்டங்களிலும் உதவி செய்திருக்கின்றார்கள் என்பதற்காகவா?, தனிநாடு கேட்டு நாட்டை சீரழிக்கவில்லை என்பதற்காகவா ?அல்லது முஸ்லிம்கள் கோழைகள் என்று நினைத்து விட்டார்களா? இந்த மாதம் பொறுமையாகவும் நிதானமாகவும் இருப்போம்.

    ReplyDelete

Powered by Blogger.