Header Ads



ரணிலின் பெயருக்கு களங்கம் - மைத்திரி கவலை


மத்திய வங்கியின் தலைவர் அர்ஜுண் மகேந்திரனால் பிரதமர் ரணில் வி்ககிரமசிங்கவின் பெயருக்கு களங்கம் ஏற்பட்டு விடுமோ என தான் அஞ்சுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைச்சர்களுடன் நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் மத்திய வங்கியின் தலைவர் விடயத்தில் சிறிந்த முடிவு எடுக்கப்படாதபட்சத்தில் எதிர்வரும் அரசியல் நடவடிக்கைகளின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிபல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் எனவும் ஜனாதிபதிகுறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தனக்கும் இந்த விடயத்தில் பல சந்தேகங்கள் உள்ளது.

நான் கூடிய விரைவில்மத்திய வங்கியின் தலைவரை அழைத்து கலந்துரையாடவுள்ளதாகவும் இதன்போது தற்போதைய நிலைமைகளை அவருக்கு புரிய வைப்பதோடு, பிரதமரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டாம் எனவும் கோரவுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

No comments

Powered by Blogger.