Header Ads



"அதிக தாக்குதலுக்கு இலக்காகும் ஜனாதிபதியும் 3 அமைச்சர்களும்"

இணையத்தளங்கள் மூலம் ஜனாதிபதிக்கும் தனக்குமே அதிகமான தாக்குதல்கள் தொடுக்கப்படுவதாக அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அடுத்ததாக அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் சம்பிக்க ரணவக்க ஆகியோருக்கு எதிராக தாக்குதல் தொடுக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இணையத்தளம் ஒன்று அமைச்சர் சம்பந்தமாக வெளியிட்டுள்ள செய்தி தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் அமைச்சரிடம் இன்று கேள்வி எழுப்பிய போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,அரசாங்கத்தை மாற்றியமைத்தவர்கள் மீது ஒவ்வொரு குற்றச்சாட்டை சுமத்தி வருகின்றனர்.

முதலில் என்னை திருடன் என்று தாக்குதல் தொடுத்தனர்.

எனினும் நான் திருடன் அல்ல என்பதை நாட்டு மக்கள் அறிவார்கள். இதனையடுத்து பெண்களை வைத்து தாக்குதல் தொடுத்தனர்.ஒருவர் என்னிடம் பணம் கேட்டார்.

கடந்த காலங்களில் அவருக்கு பணம் கொடுத்ததாக கூறினார். துறைமுகத்தில் இருந்து ஐந்து சதத்தையும் தர மாட்டேன் என்று நான் கூறினேன்.

கடந்த காலத்தில் துறைமுக அதிகார சபையில் இருந்து ஊடகவியலாளர்களுக்கு சம்பளம் கொடுக்கப்பட்டிருப்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அவற்றை நாங்கள் நிறுத்தி விட்டோம்.

சாதாரண ஊடகவியலாள் ஒருவர் சம்பாதிப்பதை விட 40 ஆயிரம் 50 ஆயிரம் கிடைப்பது நிறுத்தப்பட்டால் கோபம் வரும். இதனால், அவர்கள் இவ்வாறு செய்து வருகின்றனர் எனவும் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.