Header Ads



இராணுவ முகாமில் வெடிப்புச் சம்பவ, காரணத்தை கண்டுபிடிக்க வேண்டும் - மஹிந்த

தன்னுடைய ஆட்சி காலத்தின் போது கொஸ்கமவிலுள்ள சலாவ இராணுவ முகாமை அப்பகுதியிலிருந்து அகற்றுவதற்கான ஆயத்தங்களை தான் மேற்கொண்டிருந்ததாக முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

குறித்த இராணுவ முகாமில் நேற்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இராணுவ முகாமில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பத்தின் காரணத்தை கண்டுபிடித்து அதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டுமெனவும் அது அவர்களின் கடமையெனவும் அவர் மேலும் தெரிவித்தார். 

1 comment:

Powered by Blogger.