Header Ads



இராணுவ முகாம் ஆயுதங்கிடங்கு வெடிப்பும் - உலாவரும் சில அபிப்பிராயங்களும்..!

 - எம்.ரிஷான் ஷெரீப்-

நேற்றும், இன்றும் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து உள்ளூர வருத்தங்கள் இருக்கின்றன. ஆனால் இலங்கை இராணுவ ஆயுதக் கிடங்கு தீப்பற்றி எரிந்து முற்றாக அழிந்ததில் எனக்கு மகிழ்ச்சியே மீதமிருக்கிறது.

அந்த ஆயுதங்கள் எவையும் சேமித்து வைத்துப் பூஜிக்கக் கொண்டு வரப்பட்டவையல்ல. எப்படியும், எக் காலத்திலாவது எம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கும் சக மனிதனை அழிக்கப் பயன்படும் என்பதற்காகவே சேமித்து வைக்கப்பட்டிருந்தவை அவை.

போர் ஓய்ந்து போயிற்று. அடுத்த ஆக்கிரமிப்பு எவையுமே வேண்டாம். இப்படியே நிம்மதியாக வாழ்ந்து விட்டுப் போய்விடலாம். இலங்கை எனும் தேசத்தின் அடுத்த தலைமுறைகளுக்காவது ஆயுதங்கள் எவையும் வேண்டாம். வலியவையான அவை கொடியவை. அழிந்தொழிந்தே போகட்டும்.

-Mohamed Naushad-

அமெரிக்கா தனது பழைய ஆயுத கையிருப்பை குறைத்து புதிய ஆயுதங்களை களஞ்சியப்படுத்த முடிவு செய்தால் மத்திய கிழக்கில் எங்காவது ஒரு நாட்டில் புதிதாக ஒரு பிரச்சினையை கிளப்பி படை எடுப்பை நடத்தி பழைய ஆயுதங்களின் கணக்கை தீர்த்துக் கொள்ளும். அமெரிக்காவுக்கு பின்னால் பிரிட்டன் பிரான்ஸ் இத்தாலி ஜெர்மனி என பல நாடுகள் இணைந்து தமது பங்கிற்கு கணக்குகளை தீர்த்துக் கொள்ளும். புதிய ஆயுதங்களை இவர்கள் உற்பத்தி செய்வது போக மீதியை இஸ்ரேல் சார்பு நிறுவனங்கள் தாராளமாக விநியோகித்து கோடிக்கணக்கில் டொலர்களை குவித்துக் கொள்ளும். ஆனால் இந்தியா இலங்கை போன்ற நாடுகள் பக்கத்தில் யார் மீதும் படை எடுக்க முடியாது. ஆயுத கணக்கை சமப்படுத்த ஏதோ ஒரு வகையில் சுய அழிப்பு முறையை தான் பின்பற்ற வேண்டும். இந்தியாவில் சுமார் ஒரு வாரத்துக்கு முன் பாரிய இராணுவ ஆயுத கிடங்கு வெடித்துச் சிதறியமை இங்கே நினைவூட்டத்தக்கது. ஆயுதங்களை களஞ்சியப்படுத்தும் சர்வதேச தரத்தின் கீழ் சுய அழிப்பு முறையும் உள்ளதாக கேள்வி பட்டுள்ளேன். ஆக மொத்தத்தில் கூட்டிக் கழித்துப் பார்க்கின்ற போது கொஸ்வத்தை கணக்கும் எங்கோ இடிக்கின்றது. புதிய ஆயுதங்களை கொள்வனவு செய்யும் போது நற்பு நாடுகளுக்கு கிடைப்பதை போல் வருமானமும் உள்ளூர் தலைவர்களுக்கு கிடைப்பது போல் தரகும் வேறு எதிலும் கிடைப்பதும் இல்லை. இஸ்ரேலுடனான நெருக்கம் தரப் போகும் பலன்கள் ஏராளம்.....

No comments

Powered by Blogger.