Header Ads



இலங்கை எம்.பி.க்களுக்கு சொகுசு வாகனங்களை வழங்க எதிர்ப்பு - நீதிமன்றத்தில வழக்கு

நாடாளுமன்ற உறுப்பினர்கள் சொகுசு வாகனங்களை பெற்றுக்கொள்வதற்கு சுங்க வரி நீக்கப்பட்ட வாகன அனுமதி பத்திரங்களை வழங்குவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தை இரத்து செய்ய கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள்ளது.

வழக்கறிஞர் நாகானந்த கொடிதுவக்க இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

மனுவில் பிரதிவாதிகளாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உட்பட அரசு அதிகாரிகள் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 225 உறுப்பினர்களுக்கு சொகுசு வாகனங்களை வாங்குவதற்கு சுங்க வரி நீக்கப்பட்ட அனுமதி பத்திரங்களை பெற்றுக்கொடுப்பதன் முலம் நாட்டுக்கு சுமார் ரூ.ஆயிரம் மில்லியனுக்கும் மேல் நஷ்டம் ஏற்படுவதாக மனுதாரர் தெரிவித்துள்ளார்.

நாடு பாரிய பொருளாதார இக்கட்டை சந்தித்துள்ள நிலையில் இவ்வாரான திட்டங்களை அமல் படுத்துவதை அனுமதிக்க முடியாதென்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

எனவே இந்த வாகன அனுமதி பத்திரங்களை பெற்றுக்கொடுக்கும் தீர்மானத்தை இரத்து செய்ய உத்தரவை பிறப்பிக்குமாறு மனு மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும், சிலர் தங்களின் குற்றங்களை மறைப்பதற்காக இவ்வாறன கருத்துக்ளை வெளியிடுவதாகவும் அவ்வாறன நபர்களின் முகத்துக்கு நேராகவே நான் கூற விரும்புகின்றேன் என ஆக்கிரோசமாக பேசிய போது, இவரின் பேச்சை சபாநாயகர் இடை நிறுத்தியுள்ளா

1 comment:

Powered by Blogger.