Header Ads



"அல்லாஹ்வுக்கே சொந்தமான மார்க்கத்தில், மனித தலையீட்டிற்கு அறவே அனுமதி இல்லை"

-Readislam-

மார்க்க அறிஞர்களே! இறைத்தூதர்கள் அல்லாஹ்வுக்கு எவ்வாறு அஞ்சி உண்மையை மறைக்காமல் மக்களிடம் அல்லாஹ்வின் கட்டளையை எடுத்துரைத்தார்களோ அவ்வாறு உண்மை மார்க்கத்தை மார்க்க அறிஞர்கள் சத்தியத்தை எடுத்துரைக்க முன்வரவேண்டும்.

இஸ்லாமிய மார்க்கம் முழுக்க முழுக்க அல்லாஹ்வின் மார்க்கம். அல்லாஹ்வுக்கே சொந்தமான மார்க்கம். அல்லாஹ்வின் அதிகாரத்திலுள்ள மார்க்கம். அதில் மனித தலையீட்டிற்கு அறவே அனுமதி இல்லை. (அல்குர்ஆன் 39:3, 5:3, 3:19, 3:85, 42:21, 49:16, 9:31, 7:3, 33:66-68, 30:32, 6:159, 22:78, 4:33, 18:102-106)

இன்னும் இவை போன்ற எண்ணற்ற திருக்குர்ஆன் வசனங்கள் இதை உண்மைப்படுத்தும். ஆயிரம் விளக்கங்கள் கூறினாலும் அதை மனித அறிவு ஏற்றுக்கொண்டாலும் அதைக்கொண்டு அல்லாஹ்வின் ஒரேயொரு கட்டளையைப் புறக்கணித்தாலும் உதாசீனப்படுத்தினாலும் அது இறை நிராகரிப்பில் கொண்டு சேர்க்கும் என்பதில் உண்மை விசுவாசிகளுக்கு சிறிதும் சந்தேகமில்லை. இறைத்தூதர்கள் இந்த விஷயத்தில் மிக மிக எச்சரிக்கையாக நடந்து கொண்டார்கள்.

தங்களின் சுய அறிவை சிறிதும் மார்க்கத்தில் நுழைக்காமல் அல்லாஹ்வின் கட்டளையை அப்படியே மக்கள் மன்றத்தில் எடுத்து வைத்தார்கள். அதனால் அவர்கள் மக்கள் மன்றத்தில் புறக்கனிக்கப்பட்டாலும், மக்கள் எண்ணற்ற துன்பங்களைத் தந்தாலும் பொறுமையுடன் சகித்துக்கொண்டார்களே அல்லாமல் சத்தியத்தில் எதையும் அது சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் மக்களிடமிருந்து மறைக்கத் துணியவில்லை.

وَمَا عَلَيْنَا إِلاَّ الْبَلاَغُ الْمُبِينُ

இன்னும் எங்கள் கடமை (இறைவனின் தூதுச் செய்தியை) விளக்கமாக எடுத்துச் சொல்வதைத் தவிர வேறில்லை. (அல்குர்ஆன் 36:17)

என்ற அல்லாஹ்வின் கட்டளையை சிரமேல் கொண்டு செயல்பட்டார்கள். இன்றைய சூழ்நிலைக்கு இது சாத்தியம், இது சாத்தியமில்லை என்று அவர்களாகச் சுயமதிப்பீடு செய்து மார்க்கப் பிரச்சாரம் செய்யவில்லை. தங்களின் அறிவு ஆற்றலைக்கொண்டு மார்க்கத்தை மக்களிடையே பரப்பிவிட முடியும் என்று தப்புக் கணக்கும் போடவில்லை. நேர்வழிக் காட்டும் முழு அதிகாரமும் அல்லாஹ்வின் கையில் மட்டுமே இருக்கிறது என்பதில் மிகத்தெளிவாக இருந்தார்கள்.

இப்படி செய்தால் மக்கள் நேர்வழிக்கு வந்து விடுவார்கள்; அப்படிச் செய்தால் மக்கள் அதிகமாகச் சத்திய வழியில் இணைந்து விடுவார்கள் என்று அவர்களாக சுயமதிப்பீடு செய்து செயல்படவில்லை. அல்லாஹ் அறிவித்தவற்றை ஒரு சின்னஞ்சிறிய விஷயத்தையும் மக்கள் மன்றத்தில் எடுத்து வைப்பதில் அவர்கள் சிறிதும் குறைவு செய்யவில்லை. அது விஷயத்தில் அல்லாஹ்வின் எச்சரிக்கைகள் மிகமிகக் கடுமையாக இருக்கின்றன. அவை வருமாறு:

يَا أَيُّهَا الرَّسُولُ بَلِّغْ مَا أُنزِلَ إِلَيْكَ مِن رَّبِّكَ وَإِن لَّمْ تَفْعَلْ فَمَا بَلَّغْتَ رِسَالَتَهُ وَاللّهُ يَعْصِمُكَ مِنَ النَّاسِ إِنَّ اللّهَ لاَ يَهْدِي الْقَوْمَ الْكَافِرِينَ

தூதரே! உம் இறைவனிடமிருந்து உம்மீது இறக்கப்பட்டதை எடுத்துக் கூறிவிடும்; (இவ்வாறு) நீர் செய்யாவிட்டால், அவனுடைய தூதை நீர் நிறைவேற்றியவராக மாட்டீர்; அல்லாஹ் உம்மை மனிதர்களி(ன் தீங்கிலி)ருந்து காப்பாற்றுவான்; நிச்சயமாக நிராகரிக்கும் கூட்டத்தாரை நேர்வழியில் செலுத்தமாட்டான்.

وَإِن كَادُواْ لَيَفْتِنُونَكَ عَنِ الَّذِي أَوْحَيْنَا إِلَيْكَ لِتفْتَرِيَ عَلَيْنَا غَيْرَهُ وَإِذًا لاَّتَّخَذُوكَ خَلِيلاً وَلَوْلاَ أَن ثَبَّتْنَاكَ لَقَدْ كِدتَّ تَرْكَنُ إِلَيْهِمْ شَيْئً

قَلِيلاً إِذاً لَّأَذَقْنَاكَ ضِعْفَ الْحَيَاةِ وَضِعْفَ الْمَمَاتِ ثُمَّ لاَ تَجِدُ لَكَ عَلَيْنَا نَصِيرًا

(நபியே!) இன்னும் நாம் உமக்கு வஹீ மூலம் அறிவித்தோமே அதை விட்டும், அதல்லாததை நம்மீது நீர் இட்டுக்கட்டி கூறும்படி உம்மைத் திருப்பிவிடவே அவர்கள் முனைந்தார்கள்; (அவ்வாறு நீர் செய்திருந்தால்) உம்மை தம் உற்ற நண்பராகவும் அப்போது எடுத்துக் கொண்டிருப்பார்கள்.

மேலும், நாம் உம்மை உறுதிப்படுத்தி வைத்திருக்கவில்லையெனின் நீர் கொஞ்சம் அவர்கள் பக்கம் சாய்ந்து போயிருத்தல்கூடும்.
(அவ்வாறு நீர் சாய்ந்திருந்தால்) நீர் இவ்வாழ்நாளில் இரு மடங்கு (வேதனையும்) மரணத்தில் இரு மடங்கு (வேதனையும்) நுகருமாறு நம் செய்திருப்போம்; பின்பு, நமக்கு எதிராக உமக்கு உதவியாளர் எவரையும் நீர் காணமாட்டீர். (17:73,74,75)

وَلَوْ تَقَوَّلَ عَلَيْنَا بَعْضَ الْأَقَاوِيلِ لَأَخَذْنَا مِنْهُ بِالْيَمِينِ ثُمَّ لَقَطَعْنَا مِنْهُ الْوَتِينَ فَمَا مِنكُم مِّنْ أَحَدٍ عَنْهُ حَاجِزِينَ

அன்றியும், நம்மீது சொற்களில் சிலவற்றை இட்டுக்கட்டி கூறியிருப்பாரானல் அவருடைய வலக்கையை நாம் பற்றிப் பிடித்துக்கொண்டு பின்னர், அவருடைய நாடி நரம்பை நாம் தரித்திருப்போம் அன்றியும், உங்களில் எவரும் அதைத் தடுப்பவர்களில்லை. (அல்குர்ஆன் 69:44-47)

அல்லாஹ்வின் இறுதித் தூதருக்கே இந்த எச்சரிக்கைகள்; எங்களுக்கில்லை; எனவே நாங்கள் எங்களது சுய விருப்பப்படி கூட்டிக் குறைத்து மார்க்கம் பிரச்சாரம் செய்யலாம்; அதற்கு தடை இல்லை என்றும் இந்த மார்க்க அறிஞர்கள் கூற முடியாது. அது குறித்து குர்ஆனின் எச்சரிக்கைகள் வறுமாறு:

لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ لِّمَن كَانَ يَرْجُو اللَّهَ وَالْيَوْمَ الْآخِرَ وَذَكَرَ اللَّهَ كَثِيراً

அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது.(அல்குர்ஆன் 33:21)

قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللّهُ غَفُورٌ رَّحِيمٌ

(நபியே!) நீர் கூறும்; "நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னை பின்பற்றுங்கள்; அல்லாஹ் உங்களை நேசிப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான்; மேலும், அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருனை உடையவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 3:31)

وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَلَا مُؤْمِنَةٍ إِذَا قَضَى اللَّهُ وَرَسُولُهُ أَمْرًا أَن يَكُونَ لَهُمُ الْخِيَرَةُ مِنْ أَمْرِهِمْ وَمَن يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ ضَلَّ ضَلَالًا مُّبِينًا

மேலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப் பற்றி கட்டளையிட்டு விட்டால், அவர்களுடை அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை; ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள். (அல்குர்ஆன் 33:36)

يَوْمَ تُقَلَّبُ وُجُوهُهُمْ فِي النَّارِ يَقُولُونَ يَا لَيْتَنَا أَطَعْنَا اللَّهَ وَأَطَعْنَا الرَّسُولَا وَقَالُوا رَبَّنَا إِنَّا أَطَعْنَا سَادَتَنَا وَكُبَرَاءنَا فَأَضَلُّونَا السَّبِيلَا رَبَّنَا آتِهِمْ ضِعْفَيْنِ مِنَ الْعَذَابِ وَالْعَنْهُمْ لَعْنًا كَبِيرًا

நெருப்பில் அவர்களுடைய முகங்கள் புரட்டப்படும் அந்நாளில், "ஆ கை சேதமே! அல்லாஹ்வுக்கு நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே; இத்தூதருக்கும் நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே!" என்று கூறுவார்கள்.

"எங்கள் இறைவா! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியவர்களுக்கும் வழிப்பட்டோம்; அவர்கள் எங்களை வழி கெடுத்து விட்டார்கள்" என்றும் அவர்கள் கூறுவார்கள்.

"எங்கள் இறைவா! அவர்களுக்கு இரு மடங்கு வேதனையைத் தருவாயாக; அவர்களைப் பெருஞ் சாபத்தைக் கொண்டு சபிப்பாயாக" (என்பர்) (அல்குர்ஆன் 33:66,67,68)

اتَّبِعُواْ مَا أُنزِلَ إِلَيْكُم مِّن رَّبِّكُمْ وَلاَ تَتَّبِعُواْ مِن دُونِهِ أَوْلِيَاء قَلِيلاً مَّا تَذَكَّرُونَ

(மனிதர்களே!) உங்கள் இறைவனிடமிருந்து, இறக்கப்பட்டதைப் பின்பற்றுங்கள்; அவனையன்றி (வேறெவரையும்) பாதுகாவலர்(களாக்கிக் கொண்டு அவர்)களை பின்பற்றாதீர்கள்; நீங்கள் சொற்பமாகவே நல்லுணர்வு பெறுகிறீர்கள். (அல்குர்ஆன் 7:3)
இவ்வளவு தெளிவான, கடுமையான எச்சரிக்கைகள் உள்ளங்கை நெல்லிக்கனிபோல், குன்றி விட்ட தீபம்போல் இருந்தும் இன்றைய மார்க்க அறிஞர்கள் எந்த மயக்கத்தில் மத்ஹபுகளையும், தரீக்காக்களையும், தர்காக்களையும் ஆதரிக்கிறார்கள்?

பெரும்பான்மையான முஸ்லிம்கள் இந்த மத்ஹபு, தரீக்கா, தர்கா மோகத்தில் சிக்கி இருக்கிறார்கள்; அவற்றை எதிர்த்து சத்தியத்தைச் சொன்னால் பெரும் மேதகளாக நம்மை மதித்துக் கொண்டிருக்கும் அவர்கள் நம்மைத் தூக்கி எறிந்து விடுவார்கள் என்ற அச்சத்தால் அறிந்துள்ள சத்தியத்தை மறைக்கிறார்களா?

الَّذِينَ آتَيْنَاهُمُ الْكِتَابَ يَعْرِفُونَهُ كَمَا يَعْرِفُونَ أَبْنَاءهُمْ وَإِنَّ فَرِيقاً مِّنْهُمْ لَيَكْتُمُونَ الْحَقَّ وَهُمْ يَعْلَمُونَ

எவர்களுக்கு நாம் வேதங்களைக் கொடுத்தோமோ அவர்கள் தம் (சொந்த) மக்களை அறிவதைப் போல் (இந்த உண்மையை) அறிவார்கள்; ஆனால் அவர்களில் ஒரு பிரிவினர், நிச்சயமாக அறிந்துகொண்டே உண்மையை மறைக்கின்றனர். (அல்குர்ஆன் 2:146)

என்று அல்லாஹ் வேதத்துடைய அறிஞர்களை அடையாளம் காட்டுவது மத்ஹபுகளையும், தரீக்காகளையும், தர்ஹாக்களையும் சரிகண்டு நியாயப்படுத்தும் முஸ்லிம் அறிஞர்களுக்கும் ஏன் பொருந்தாது? மார்க்க அறிஞர்களே! இறைத்தூதர்கள் அல்லாஹ்வுக்கு எவ்வாறு அஞ்சி உண்மையை மறைக்காமல் மக்களிடம் அல்லாஹ்வின் கட்டளையை எடுத்துரைத்தார்களோ அவ்வாறு உண்மை மார்க்கத்தை மார்க்க அறிஞர்கள் சத்தியத்தை எடுத்துரைக்க முன்வரவேண்டும்.

16 comments:

  1. தலைப்பு அழகாகத்தான் இருக்கின்றது. அல்லாஹ்விற்குச் சொந்தமான மார்க்கத்தில் மனித தலையீட்டிற்கு அறவே இடமில்லை என்றால், ஹதீஸ் தொகுப்பு, உசூல் ஹதீஸ், இல்முல் ரிஜால் இவையெல்லாம் எப்படி வந்தன?

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்காவது தெரியுமா?

      Delete
  2. Dear Rishvin,
    Let me first of all submit my humble apologies to you and all readers for being unable to type in Tamil.
    The Hadees etc are not interpolations but interpretations.
    The article speaks about interpolation.

    ReplyDelete
  3. Mr ismath உங்களுடைய கேலவி பொர்த்தமற்றது! குர்ஆனும் ஆதாரபூர்வமான ஹதீஸும் தான் அல்லாஹ்வுடைய மார்க்கம்

    ReplyDelete
  4. Muslimgal kulappum thalaippu "kuraanum hadeesum mattum"endra alagaana thalaippu thaan !!
    Madhhab pinpatrawargal kulamba willai , maaraga inda thalaippai pinpatruwargal kulappattil ullaargal !!! iwargal thaanum kulambi muslimgalayum kulappa wali seigiraargal. salfussaliheengalin wali kaatuzal 1000 warudangalukku melaga urudiyaga pazukaappaga ner wali adithalam amaindu wittazu ! izil yarum wiral ida mudiyazu !!

    ReplyDelete
  5. Rishvin Ismath
    தலைப்பை மட்டும் பார்க்காதீர்கள். கட்டுறையையும் வாசித்துப் பாருங்கள்.

    ReplyDelete
  6. அல்குர்ஆன் தொகுப்பையும் கேள்வியில் சேர்திடுங்கள Rishwin Ismath

    ReplyDelete
  7. பாமர்ர்களை விடவும் இஸ்லாத்தைப்பற்றி நன்கு படித்த அறிஞ்ஞர்களால்தான இஸ்லாம் பிழையாக மக்களிடம் காண்பிக்கப்படுகிறது என்றால் மிகையாகாது

    அதாவது இஸ்லாமிய சட்ட்திட்டங்களுக்கு முரணாண செயல்பாடுகளை செய்வதும் ஊக்குவிப்பதும் அதறக்கு நியாயம் கற்பிப்பதும் இவர்களாகவே அன்றுமின்றும் இருக்கின்றனர்

    ReplyDelete
  8. Good article. we should follow only Quran & Sunnah, if we got to know a single message from them we should share with other Muslims. Insha Allaah we wont misguided

    ReplyDelete
  9. அல்குர்ஆன் மற்றும் குர்ஆனுக்கு முரண்படாத ஸஹீஹான ஹதீஸ்கள் இவை இரண்டு மட்டுமே மார்க்கம்.இதில் தெளிவாக இருந்தால் பிரச்சினையே இல்லை.

    ReplyDelete
  10. Sameem, அல்குர்ஆனுக்கு முரண்படாத ஹதீஸ் என்பதை யார் தீர்மானிப்பது? குர்ஆனுக்கே பல விதமான தர்ஜுமாக்கள் (மொழிபெயர்ப்புகள்), அது போக பல வித்தியாசமான கருத்துக்களில் அமைந்த தப்சீர்கள் (விளக்கவுரைகள்). இப்படி இருக்க இவற்றில் எதனை வைத்து ஹதீஸ் முரண்படுகின்றதா இல்லையா என்பதை தீர்மானிப்பது?

    1400 வருடங்களுக்கு மேலாகியும், இவைதான் குரானுக்கு முரண்படாத ஹதீஸ்கள் என்று முழுமையாக முடிவெடுத்து விட்டீர்களா என்றால் இல்லவே இல்லை, இனியும் முடியாது.

    1997 வரை குரானுக்கு உடன்பாடாக இருந்த (புகாரியில் உள்ளவை உட்பட) பல ஹதீஸ்கள் 2000 மாம் ஆண்டுக்குப் பின்னர் படிப்படியாக குரானுக்கு முரணான ஹதீஸ்களாக மாறிப்போன அற்புதத்தை அண்மைக்காலத்தில் நிதர்சனமாகக் கண்டோம், அதிலேயே பல பிளவுகள்.

    இஸ்லாத்தின் மூலாதாரங்கள் குரானும், ஹதீஸும் என்றால், இஸ்லாம் இறைவனின் இறுதி மதம் என்றால், இறைவனின் இறுதி மதத்தின் மூலாதாரங்களில் ஒன்றான ஹதீஸ்களை தீர்மானிப்பது இறைவனா, இல்லை காலத்திற்குக் காலம் புதுப்புது அர்த்தங்கள் கண்டுபிடிக்கும் மனித மூளைகளா?

    இதன் படி பார்க்கும் பொழுது இஸ்லாத்தின் மூலாதாரங்களை தீர்மானிப்பதில், வரையறுப்பதில், பாதுகாப்பதில் இறைவனின் தீர்க்கமான் வகிபாகம் என்ன? அப்படி ஒன்று உண்டா?

    ReplyDelete
  11. Sameem
    அல் குர்ஆனுக்கு ஸஹீஹான ஹதீஸூம் முரண்படுமா? இது யாருடைய கொள்கை? அவர்களுக்கு முரண்படுவது போல விளங்கினால் எந்த ஸஹீஹான ஹதீஸையும் நிராகரித்து விடுவார்கள்.

    ReplyDelete
  12. This article is all about "Beating the old dead thing". Can somebody clarify in this discussion WHERE IN ISLAM AAH OR HIS RASOOL SAID TO FOLLOW SAHEEH HADEES ?

    ReplyDelete
  13. இக் கட்டுரையில் பதிந்த விடயங்கள் அனைத்தும் அள்ளாஹ்வின் கட்டளைக்கு மட்டுமே அடிபணிதல் என்பதையும் தனிமனித ஆய்வு தான் மார்க்கம் அல்ல என்பதையும் விளக்கி நிற்கிறது. 

    சரியான கருத்தே. இதனை தான் நபி வழி நடந்த ஸஹாபாக்கள் உட்பட தாபிஇன்கள், தபுஅ தாபிஊன்கள், இறுதிநாள் வரையும் உள்ள நேர்வழி பெற்றவர்கள் கருத்தும். இதனை யாரும் மறுப்பதற்கில்லை.

    எவருக்கு ஒன்றில் தெளிவில்லையோ அதைப்பற்றி விமர்சிப்பதனால் தான் குழப்பங்கள் உண்டாகின்றன. 

    எங்கள் பெரியவர்களுக்கும், தலைவர்களுக்கும் வழிப்பட்டோம். அவர்கள் எங்களை வழிகெடுத்து விட்டார்கள் என்ற ஹதீஸை யாருக்கு பிரயோகிக்க வேண்டும் என்பதில் முதல் தெளிவு தேவை.

    இருபது ரக்அத்தை வழி நடாத்தியதற்காக உமர் (ரலி) அவர்களுக்கும், ஜும்ஆவிற்கு இரண்டு பாங்கிற்காக உஸ்மான் (ரலி) அவர்களுக்கும் மத்ஹப் என்ற பிக்ஹ் இற்காக இமாம் மாலிக், ஷாஃபி, ஹனீபா, ஹன்பல் (ரஹ்) அவர்களுக்கும் மேலுள்ள ஹதீஸை பிரயோகிப்பது முட்டாள் தனமும், அறியாமையும் ஆகும். 

    அந்த ஹதீஸ் நேர்வழியை விட்டு விலகிச் சென்ற தலைவர்களுக்கும், இஸ்லாத்தை விட்டு தூரமாகிய பெரியவர்களுக்கும் பின்னால் சென்ற மக்களின் மன வெளிப்பாடு. அது அன்றைய அறியாமை காலத்தில் உள்ளவர்களுக்கும் பொருந்தும். இந்த ஹதீஸை பாமர மக்களின் முன்னாள் இட்டு சஹாபாக்களினதும் நேர்வழி பெற்ற ஸலபுஸ் ஸாலிஹீன்களினதும் மீதிருந்த மதிப்பை குறைத்து அவர்களின் மீதான சந்தேகங்களை உண்டு பண்ணி விட்டார்கள் இந்த அரைகுறைகள். கண்ணியத்திற்குரிய ஸஹாபாக்கள், அதிலும் உலகிலேயே சுவர்க்கத்திற்கு நன்மாராயம் கூறப்பட்ட ஸஹாபிகள் எடுக்கும் முடிவுகள் அல்லாஹ் ரஸூலின் கட்டளைக்கு உட்பட்டதே..
    அவர்களை பித் அத் வாதிகளாக சித்தரிப்பவர்கள் ரசூல் ஸல் அவர்கள் சொர்க்கத்திற்கு 10 ஸஹாபிகளுக்கு கூறப்பட்ட நன்மாராயத்தின் ஹதீதை மறுக்கிறார்களா..? அவர்கள் பித் அத் வாதிகளென்றால் அவர்களுக்கு எப்படி சொர்க்கம்..? இல்லை அவர்கள் சொர்க்கவாதிகள் தான் என்றால்.., அவர்கள் பித் அத் செய்வார்களா..? (நஊதுபில்லாஹ்) 

    முன்னோர்களை பின்பற்ற வேண்டாம் என்ற ஹதீஸை விளக்கம் தெரியாமல் சொல்லிக்கொண்டிருப்பவர்களே.. ஏன் சில விடயங்களை மறைக்கிறீர்கள்..?

    நம்மை அள்ளாஹ் ஐவேளை தொழுகைகளில் ஓதச் சொல்லும் அல்ஹம்து சூரத்தில் நாம் என்ன ஓதுகிறோம் என்பது நினைவில் இல்லையா..?
    " என்னை நேரான பாதையில் செலுத்து.. அது நீ எவருக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி"

    அதில் தெளிவாக வந்துள்ளது.. "நீ இவருக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி" என்பது நபி ஸல் கட்டளைகளை உலக முடிவுவரை யாரெல்லாம் பின்பற்றினார்களோ அவர்களின் வழி.. 

    ReplyDelete
  14. முன்னோர்களை பின்பற்ற வேண்டாம் என்று சொல்பவர்களே.. நபி(ஸல்) அறிவித்த ஹதீதை என் மறைக்கிறீர்கள்..? 

    என்னுடையதும் என்னுடைய குலபாயே ராஷிதூன்களின் சுன்னாக்களையும் இறுக பற்றிப்பிடித்துக்கொள்ளுங்கள் என்ற ஹதீத் உங்களுக்கு தெரியாதா.? அப்படியென்றால் சுண்ணக்கல் என்பது நபி ஸல் மட்டுமல்ல. அவர்களின் பிரதிநிதிகள் எனப்படும் கலீபாக்களின் கட்டளைகளும் நபி (ஸல்) வழிமுறைதான்.. 

    நபி(ஸல்) சொல்கிறார்கள்.. 

    கடைசி காலத்தில் மகா பொய்யர்கள் உருவாகுவார்கள். உங்களிடம் புதிய புதிய விடயங்களை மார்க்கம் என்று சொல்வார்கள். உங்களுக்கு முன்னாலுள்ள மூதாதையர்களிடமிருந்து நீங்கள் அதனை செவிமடுத்திருக்க மாட்டீர்கள். நான் உங்களையும் அந்த மூதாதையர்களை எச்சரிக்கின்றேன். இந்தக் கூட்டம் உங்களை வழிகெடுக்காமல் இருக்கட்டும். - முஸ்லிம்- 

    நபி (ஸல்) சொன்னார்கள். 
    எனக்குப்பின்னால் உஙக்ளில் ஜீவித்திருப்பவர்கள் அதிகப்படியான குழப்பங்களை காண்பீர்கள். அந்நேரத்தில்  என் சுன்னத்தையும் நேர்வழி பெற்ற என் கலீபாக்களின் சுன்னத்தையும் பற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள். மேலும் அவற்றின் மீது உங்கள் கடைவாய்ப் பற்களை வைத்து கடித்துப்பிடித்துக் கொள்ளுங்கள். (திர்மிதி) 

    மத்ஹபுகள் என்பது அந்த அந்த காலப்பிரச்சினைகளுக்கு குர் ஆன் ஹதீஸ் , ஸஹாபாக்களின் வழிகாட்டலில் உருவாக்கிய மார்க்கத்தீர்ப்புகள். இதனை தான் 1200 வருடங்களாக உம்மத் பின்பற்றியது. அதற்குள் வாழ்ந்த பெரும் பெரும் முஹத்திஸீன்கள் எல்லாமே அந்த மத்ஹபுகள் இஸ்லாமிய வட்டத்திற்குள் உள்ள தீர்ப்புக்கள் என்பதை அறிந்து வைத்திருந்தனர்.

    இந்த கடைசி இருநூறு வருடங்களுக்குள் நபி (ஸல்) எதை பித்தனாவுடைய காலம் என சொன்னார்களோ அந்த காலமான தற்பொழுது தான் இவர்கள் ஆய்வு என்ற பெயரில் தான் சுய புத்தியை போட்டு இதுவரை வந்த நல்லோர்களின் பாதையை விட்டும் விலகி நிற்கிறார்கள். 

    ஆரம்பத்தில் உலமாக்களோடு முரண்பட்டார்கள், பின்பு ழஈபான ஹதீஸ்களெல்லாம் பின்பற்ற முடியாது என்கிறார்கள் ( ஆனால் நெஞ்சில் தக்பீர் கட்ட ஒரு ஸஹீஹான ஆதாரமும் கிடையாது- என்றாலும் அதைச்செய்வார்கள்) , பின்பு ஸஹீஹான ஹதீதுகளை மறுத்தார்கள், இப்போது ஸஹாபாக்களை விளக்கம், ஆய்வு என்ற பெயரில் தூற்றுகிறார்கள், இனிமேல் நபி ஸல் அவர்களின் சில முஹஜிஸாத்துக்களை மறுப்பார்கள்.. அது இனிமேல் நடக்கும். (நஊதுபில்லாஹ்) 

    ReplyDelete
  15. well said bro abdur rahman abdul.

    ReplyDelete

Powered by Blogger.