ஆண்டுக்கு 13 மாதம், மாதத்திற்கு 28 நாள் - பொலிவியாவில் புதிய காலண்டர்
தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் ஆண்டு காலண்டரை மாற்ற அந்நாட்டு அதிபர் யுவோ மோரல்ஸ் முடிவு செய்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
நாங்கள் தற்போது நடைமுறையில் உள்ள கிரிகோரியின் காலண்டரில் ( ஆங்கில காலண்டர்) இருந்து வேறுபட்டு நிற்கிறோம். எங்கள் நாட்டு மக்கள், 5 ஆயிரத்து 524 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்துள்ளனர். எனவே நாங்கள் பழங்கால காலண்டரை பின்பற்ற விரும்புகிறோம்.
524 ஆண்டுக்கு முன் இந்த அமெரிக்காவை கொலம்பஸ் கண்டுபிடிப்பிற்கு முன்னதாகவே எங்கள் பகுதியில் மக்கள் வாழ்ந்துள்ளனர். எனவே எங்கள் ஆண்டு 2016 அல்ல; 5524. மேலும் இப்போது நடைமுறைக்கு வரும் இந்த பழங்கால காலண்டரில் 13 மாதங்களும், மாதத்திற்கு 28 நாட்களும் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Post a Comment