Header Ads



சிறை வாழ்க்கை, நன்றாகத்தான் உள்ளது - உதய கம்மன்பில

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் பிவித்துரு ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கடந்த புதன் கிழமை நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.

கம்மன்பில சிறைச்சாலை பஸ்ஸை விட்டு இறங்கியதும் கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரைவில் அவரை சூழ்ந்துக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்ற உறுப்பினர் வீரகுமார திசாநாயக்க, நீங்கள் தங்கியிருக்கும் புதிய உறைவிடம் எப்படி என கம்மன்பிலவிடம் கேட்டதாகவும், அதற்கு கம்மன்பில மோசமாக ஒன்றும் இல்லை நன்றாகத் தான் உள்ளது என பதிலளித்துள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து உரையாற்றுகையில்,நான் சிறைச்சாலைக்கு சென்ற போது கைதிகள் என்னை வரவழைத்தார்கள் என்றும் எனக்கு வழங்கிய இலக்கம் 4643 என்றும் கம்மன்பில கூறியுள்ளார்.

மேலும், தன்னுடன் முகமட் முஸமிலும் தங்கியிருந்ததாக கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

தற்போது முகமட் முஸமிலுடன் அரசியல் விவாதங்களை மேற்கொண்டுவருவதாகவும் பிவித்துரு ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

4 comments:

  1. Gnanasara irunthirunthaal innum nanraaga irunthirukkum !

    ReplyDelete
  2. Ulagaththil siriththukkondey Sirai selfavargal
    Srilankavilthaan irukkiraargal ! Vaalkkai nanraaga irukkirazu
    enraal eyn pinaiyil viduvikkumaaru manraadugireer ?

    ReplyDelete
  3. Nallaattan irukkum...Mattavanda kaasula sory thinda....
    Neyum punnaakku mu+zam+ilum arasiyal vivaathangala...illa mattavan koliya epdi pudikkalam enra...?
    Sri Lankan political anthalavu kevalamagittu...!

    ReplyDelete
  4. Then stay there forever

    ReplyDelete

Powered by Blogger.