Header Ads



சுவிஸ் வாழ் இலங்கை, முஸ்லிம்களின் நல்லிணக்க இப்தார் - பௌத்த, இந்து குருமார் நெகிழ்ச்சி (படங்கள்)


சுவிஸ் வாழ் இலங்கை, இஸ்லாமியர்கள் நடத்திய நல்லிணக்க இப்தார் நேற்று 24 ஆம் திகதி, வெள்ளிக்கிழமை சிலீரன் - மஸ்ஜித்துல் ரவ்ளா பள்ளிவாசலில் நடைபெற்றது.

ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் நிலைய தலைவரும், மஸ்ஜித்துல் ரவ்ளா பள்ளிவாசல் தலைவருமான அல்ஹாஜ் ஹனீப் மொஹமட் தலைமையில் நடைபெற்ற  நிகழ்வு மஹ்ரிப் தொழுகையுடன் ஆரம்பமானது.

இதன்போது வரவேற்புரை நிகழ்த்திய ஹனீப்,

இவ்வாறான ஒரு முயற்சி நல்லிணக்கத்திற்கு வழிகோலும். நாங்கள் நாடு விட்டுவந்து சுவிஸ் நாட்டில் வசித்துவரும் நிலையில் இந்த இப்தார் நிகழ்வு எங்களுக்கிடையிலான ஒற்றுமைக்கு அடித்தளம் அமைக்கும்.

சுவிஸ் நாட்டில் வாழ்ந்துவரும் நாம் எமது பிள்ளைகளுக்கு, எமது சமய கல்வியை வழங்கும் நோக்குடன் திட்டங்களை வகுத்து செயற்பட்டுவருகிறோம்.

இந்த புனித ரமழான் மாதத்தில் நோன்பு என்றால் என்ன..? முஸ்லிம்களின் வணக்க வழிபாடுகள் குறித்து அறிந்துகொள்ளக்கூடிய அரிய வாய்ப்பு இங்கு வருகைதந்துள்ள பௌத்த பிக்குகளுக்கும், இந்து மதகுருமாருக்கும் கிடைத்துள்ளது. அவர்களை சுவிஸ் வாழ் இலங்கை முஸ்லிம்கள் பெருமனதுமடன் வரவேற்கிறார்கள் என்றார்.

இப்தார் நிகழ்வுக்கு முன்னதாக (நோன்பு திறக்கமுன்) பள்ளிவாசலுக்கு வருகைதந்த பௌத்த, இந்து குருமார் முஸ்லிம்கள் நோன்பு திறப்பதை அவதானித்தனர். கூடவே மஹ்ரிப் , இஷா தொழுகையையும் அவதானித்தனர்.

மேலும் இலங்கை முஸ்லிம்களும், பௌத்த இந்து குருமாருடன் பரஸ்பரம் கைலாகு செய்து தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனனர்.

இந்த நல்லிணக்க நிகழ்வில் பங்கேற்ற பௌத்த, இந்த மதருகுருமார் முஸ்லிம்களின் நோன்பு, பழக்கவழக்கங்கள், உபசரிப்பு உள்ளிட்டவைகளை பாராட்டியதுடன், இப்தார் நிகழ்வில் பங்கேற்றமை தமக்கு மகிழ்ச்சியை அளிப்பதாகவும், முஸ்லிம்களின் நிகழ்வொன்றில் இவ்வாறு பங்குகொள்கின்றமை முதல்தடவையெனவும் கூறி நெகிழ்ந்தனர்.




No comments

Powered by Blogger.