Header Ads



முபாரக் மௌலவியின் அறிவித்தல்

நோன்பு ம‌ற்றும் பெருநாள் போன்ற‌ விட‌ய‌ங்க‌ளில் ந‌பிய‌வ‌ர்க‌ள் உல‌க‌ளாவிய‌ முஸ்லிம்க‌ளை நோக்கி பிறை க‌ண்டு பிடியுங்க‌ள் பிறை க‌ண்டு விடுங்க‌ள் என‌ தெளிவாக‌ சொல்லியிருப்ப‌த‌ன் கார‌ண‌மாக‌வும்  உல‌க‌ முஸ்லிம்க‌ளின் த‌லைந‌க‌ர‌மாக‌ புனித‌ ம‌க்கா இருப்ப‌தாலும் ம‌க்கா பிறையை வைத்து நோன்பு ம‌ற்றும் பெருநாளை எடுக்க‌ வேண்டும் என்ப‌தே உல‌மா க‌ட்சியின் தெளிவான‌ நிலைப்பாடாகும் என‌ அக்க‌ட்சியின் த‌லைவ‌ர் க‌லாநிதி முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்தார். 

க‌ட்சி த‌லைமைய‌க‌த்தில் ந‌டைபெற்ற‌ க‌ல‌ந்துரையாட‌லின் போது அவ‌ர் மேலும் கூறிய‌தாவ‌து,

2005ம் ஆண்டு உல‌மா க‌ட்சி ஆர‌ம்பிக்க‌ப்ப‌ட்ட‌து முத‌ல் இக்க‌ருத்தை நாம் சொல்வ‌துட‌ன் இக்க‌ருத்து அன்றைய‌ சூழ‌லில் இல‌ங்கை முஸ்லிம்க‌ள் ப‌ல‌ரிட‌ம் செல்லாத‌ நிலை இருந்த‌தால் ம‌க்கா பிறையை வைத்தே நோன்பு பிடிக்க‌ வேண்டும் என்றும் த‌ற்போதைக்கு வீண் பிர‌ச்சினைக‌ளை த‌விர்க்குமுக‌மாக‌ இல‌ங்கை உல‌மா ச‌பையின் அறிவித்த‌ல் பிர‌கார‌ம் நோன்பு பிடிக்க‌லாம் என‌ சொல்லி வ‌ந்தோம். 
த‌ற்போது பிறை ப‌ற்றிய‌ வாத‌ பிர‌திவாத‌ங்க‌ள்  அனைத்து முஸ்லிம்க‌ளிட‌மும் சென்றுள்ள‌தாலும் பிறை பார்க்கும் விட‌ய‌த்தில் உல‌மா ச‌பை விட்ட‌ த‌வறின்  கார‌ண‌மாக‌ ம‌க்க‌ள் ம‌த்தியில் பாரிய‌ குழ‌ப்ப‌ங்க‌ள் ஏற்ப‌ட்ட‌தாலும் இனியும் இத‌னை இப்ப‌டியே விட்டு விடாம‌ல் இல‌ங்கை முஸ்லிம்க‌ளின‌தும் உல‌க‌ளாவிய‌ முஸ்லிம்க‌ளின‌தும் ஒற்றுமையை க‌ருத்திற்கொண்டு எம‌து நிலைப்பாட்டை நாம் ப‌கிர‌ங்க‌மாக‌ சொல்வ‌து எம‌து க‌ட‌மையாகும்.

அந்த‌ வ‌கையில் உல‌மா க‌ட்சி என்ப‌து வெறும‌னே அர‌சிய‌லை ம‌ட்டும் செய்வ‌த‌ல்ல‌ என்ப‌தாலும் இஸ்லாமிய‌ வ‌ழிகாட்ட‌லையும் உண்மையையும் சொல்லும் க‌ட்சி என்ப‌தாலும் முஸ்லிம்க‌ள் ம‌க்கா பிறை க‌ண்ட‌ த‌க‌வ‌லை ஏற்று த‌ம‌து நோன்பு ம‌ற்றும் பெருநாட்க‌ளை எடுத்து பிர‌ச்சினைக‌ளை த‌விர்த்துக்கொள்ளும்ப‌டி கேட்டுக்கொள்கிறோம்.

14 comments:

  1. இதில்் தான்் கருத்்து வேறுபாடு. ஓரு பக்்க சார்்பாக எந்்த பத்்வாவும்் தேவையில்்லை.

    ReplyDelete
  2. How it is possble to follow cresect of macca? Do you mean all of the muslim in the world must follow cresent of macca?

    ReplyDelete
  3. Moulavi, makkah nerethin padithan 5 vealeyum tholuheyey nireivetreengela? makkah nerethin pireharemthan noanbu pidithu noanbu thirepeerhela? Coz Ulehe musleemkelin thaleinagar athuthaane..

    ReplyDelete
  4. I think the message they are trying convey is- when the sighting of the moon announced in Makkah/KSA, people all around the world take it as the month of Ramadan started and look forward to start fasting in their respective regions accordingly.

    ReplyDelete
  5. thus mowlavi is unqualified to be called as a mowlavi, pls. dont give prominence for this stupid idiot. he and his party....let them fly a kite..periya mufthi mathiri pesugirar,, all oevr the world big mufthees Egypt, Saudi, Europe, USA, Malaysia, Indonesia Mufhtees have given verdict on this to adhere to local moon sighting.. this rathu thoppiya another modawansa

    ReplyDelete
  6. Here the situation is for Srilanka. the time difference between Srilanka and Saudi may be couple of hours and Saudi time is behind Srilankan. It is all right, if they find moon in Saudi, Srilankans can fast the next day. No harm.

    ReplyDelete
  7. @Jaffna Boy.. Yes let's say we Sri Lankan missed seeing the crescent on the day but in Saudi spotted it on the same day obviously that is after 3.30 hours or so we still have time to celebrate Eid with Saudi on the following day. The problem in SL is they sometimes start the fasting after two days of Saudi and Celebrate one day before them or 2 days after them. We can't have a 48 hour different since the whole world will come under 24 hour clock and the crescent should be spotted with in that time frame in all the countries...
    Now my question is this to all the Muslims who follow their jamaaths.

    1. இலங்கையில் பிறை சரியாக கண்ட ஆதாரபூர்மான சாட்சிகள் இருந்தும் , சமாதானம் கருதி பெருநாளை பிற்படுத்திய சந்தர்ப்பங்களை அவதானித்துள்ளோம். அவர்களுக்கு பெருநாள் தினத்தன்று நோன்பு நோட்பது ஹராமாகும் என்று தெரிந்திருந்தும் இவ்வ்வாறான ஒரு அறிக்கை விடுவதன் நோக்கம் என்ன???
    2. நோன்பு காலங்களில் நோன்பு முஸ்லிம்கள் அதிகமாவதால் ஜமாத்களை பின்பற்றுபவர்களிடையே சண்டைகள் வருவது சற்று அதிகம். அவ்வாறான சந்தர்ப்பங்களில் சம்பந்தப்பட்ட ஜமாத்களின் தலைவர்கள் முஸ்லிம்களின் நலன் கருதி குறித்த பிரச்சினைக்கான ஒரு தீர்வை ஒன்றாக சேர்ந்து எடுத்தாதவோ அல்லது ஒன்றாக சேர்ந்து
    ஒரு அறிக்கைவிட்டதாகவோ ஏதாவது சரித்திரம் இருக்கின்றதா ??
    அந்த தலைவர்களே அவர்களுக்கிடையே, சமுதாயத்தின் நலன் கருதி எந்த ஒரு இணக்கப்பாட்டுக்கும் வராமல் இருக்கும் போது அவர்கள் எப்படி உங்களை வழி நடத்தப்போகிறார்கள் ?
    அல்லாஹ்வுக்காக இதை செய்கிறோம் அதை செய்கிறோம் வாய் கிழிய ஒவ்வொரு கூட்டத்திலும் கத்துவார்கள் ஆனால் அதே அல்லாஹ்வுக்காக , அதே அல்லாஹ்வின் அடியார்களின் ஒற்றுமை கருதி(குர்ஆன் சுன்னாவுக்கு மாற்றமில்லாமல் ) , தமக்குள் இருக்கின்ற தாழ்வுச்சிக்கள்களை மறந்து ஒன்றாக அறிக்கைவிடுக்கலாமல்லவா?
    இலங்கையில் இயக்கங்களை பின்பற்றுகிறவர்கள்தான் அதிகம் இஸ்லாத்தை பின்பற்றிகிறவர்கள் குறைவு.
    இனிமேலும் தலைவர்களை பின்பற்றாமல் இஸ்லாம் என்ன சொலகிறது என்பதை தேடிப்பார்தது அதை செய்ய நாம் அனைவரும் முயற்சிப்போம்.
    குறிப்பு . நான் மேலே சொன்னது நாம் அனைவருக்கும் ஒரு குறிப்பிட்ட ஜமாத்துக்கு மாத்திரமல்ல. மேலும் நான் எந்த ஜமாத்தை சார்ந்தவனுமல்ல. எதிரிகளின் கண்கள் முஸ்லிம்களை குறிவைத்துள்ள இந்த நேரத்தில் நமக்குள் இருக்கும் சிறு வேறுபாடுகளை மறந்து முடிந்தவரை சண்டைவராமல் குர்ஆன் சுன்னாவை பின்பற்றுவோம்...

    ReplyDelete
  8. எப்படி ஒரே பகல் ஒரே இரவு என்பது உலகில் சாத்தியப்படாதோ, அது போல் சர்வதேச பிறை என்பதும் சாத்தியப்படாது. பல சஹீகான நபிமொழிகள் பிறை கண்டு நோன்பு பிடிக்கவும் பிறை கண்டு பெருநாள் எடுக்கவும் ஆதாரமாக அமைந்துள்ளன.
    கால நேர அளவீடுகளில் குர்ஆனும் ஹதீதும் பொதுத்தன்மைகளையே அடிப்படையாகக் கொண்டுள்ளன. وَكُلُواْ وَاشْرَبُواْ حَتَّى يَتَبَيَّنَ لَكُمُ الْخَيْطُ الأَبْيَضُ مِنَ الْخَيْطِ الأَسْوَدِ مِنَ الْفَجْرِ
    حَدَّثَنَا عَبَّاسٌ ، نا مُحَمَّدُ بْنُ يُوسُفَ ، قَالَ : حَدَّثَنِي عِيسَى بْنُ عُمَرَ ، عَنِ السُّدِّيِّ ، عَنْ أَبِيهِ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " صُومُوا لِرُؤْيَتِهِ ، وَأَفْطِرُوا لِرُؤْيَتِهِ ، فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَأَكْمِلُوا الْعِدَّةَ ثَلاثِينَ "
    இவை நோன்புடன் தொடர்புடையவை, அது போன்றே தொழுகையின் நேரத்தைக் குறிப்பிடும் போதும் கூறப்படுகிறது. இது இப்படி இருக்க கீழைத்தேச நமக்கு மக்காவை மையமாகக்கொண்டு நோன்பையும் பெரு நாளையும் செயற்படுத்த வேண்டும் என்று நினைக்கின்றோம். அப்படியானால் மேலைநாட்டு நாட்டு முஸ்லிம்களின் நிலை என்ன? சிந்திப்போமா?

    ReplyDelete
  9. சூரியன் உதிப்பது Saudi முன் இலங்கையில்... அவ்வாறுதான் பிறைதென்படுவதும்.... So Saudi இல் தென்பட்டுவிட்டால். இலங்கையில் நாம் பிறையை காணவில்லை என்றுதான் பொருள். ஆகவே இலங்கையை பொருத்தவரை Saudi பிறையை கண்டிருந்தால் அடுத்த நாள் நோம்பு/பெருநாள் ஆகிவிடும்.

    ReplyDelete
  10. உலகளாவியரீதியில் பிறையைகண்டுபிடிக்க மட்டுமா நபிகளார் சொன்னாங்க மௌலவி

    ReplyDelete
  11. நபியவர்கள் பிறையை மட்டும்தான் கண்டுபிடித்து பின்பற்றச் சொன்னாங்களா? மௌலவி அவர்களே

    ReplyDelete
  12. இவருக்கு அடிக்கடி இப்படி நெட்டு ஒன்று லூசாவது பிறகு அதை இறுக்கமாக பூட்டுவது திரும்ப லூசாவது போன்ற பிரச்சினை நீண்ட காலமாக இருக்கிறது

    ReplyDelete
  13. அனைவரும் அழகான முறையில் மொழியைப் பிரயோகிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.நாங்கள் மதத்தால் இஸ்லாமியராயினும் மொழியால் தமிழர்.நீ வேறு நீங்கள் வேறாக பகுத்துக் காட்டும் மரியாதைப் பண்புடன் கூடிய மொழி.ஒருவரை விமர்சிக்கும்போது அதன் பண்புகளுடன் பிரயோகிக்கும்படி அனைவரையும் தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறேன்.நன்றி நன்பர்களே.

    ReplyDelete
  14. Let's analyze this with some example:
    If Ramadhan moon is sighted in Saudi at around 9pm, then in SL=1130pm. So, still can fast the next day. In US, as it is 11am,the next day, they can fast. In Australia, it is 4am next day; so still can start fasting that day.
    The same thing applies to Shawwal- So, people can stop fasting and celebrate Eid the following day. Simple.

    ReplyDelete

Powered by Blogger.