ஹஜ் குழுவுக்கு எதிராக, நீதிமன்றத்தில் வழக்கு
-ARA.Fareel-
இவ்வருடத்திற்கான ஹஜ் ஏற்பாடுகளில் ஹஜ் குழு 2013 ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள ஹஜ் வழிமுறைகளை (Guide Lines) மீறியுள்ளதாகவும் இவ்வருட ஹஜ் கோட்டா பகிர்வு முறையை இரத்துச் செய்து உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள வழி முறைகளின் கீழ் கோட்டாவை மீள் பகிர உத்தரவிடுமாறும் கோரி உயர்நீதிமன்றத்தில் நேற்று மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மனுவில் பிரதிவாதிகளாக முஸ்லிம் சமய விவகார மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சர், அமைசின் செயலாளர், முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் எம்.எச். எம். ஸமீல் மற்றும் ஹஜ்குழு உறுப்பினர்கள் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
ஸ்ரீலங்கா ஹஜ் முகவர்கள் சங்கத்தின் உப தலைவரும் கரீம்லங்கா ஹஜ் முகவர் நிலைய உரிமையாளருமான எ.சி.பி.எம்.கரீம் உட்பட 9 முகவர் நிலையங்கள் இம்மனுவினைத் தாக்கல் செய்துள்ளன.
சட்டத்தரணி ருஸ்தி ஹபீப் மனுதாரர்கள் சார்பில் மனுவினைத் தாக்கல் செய்துள்ளார்.
கரீம் லங்கா ஹஜ் முகவர் நிலைய உரிமையாளர் ஏ.சி.பி.எம்.கரீமை 'விடிவெள்ளி' தொடர்பு கொண்டு இது தொடர்பில் வினவியபோது அவர் பின்வருமாறு விளக்கமளித்தார்.
'ஹஜ் ஏற்பாடுகளில் அநீதிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. ஹஜ் ஏற்பாடுகளுக்கு எதிராக 2012 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து நீதிமன்றில் மனுதாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றுள்ளன.
2013 ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம் ஹஜ் ஏற்பாடுகள் தொடர்பில் தீர்ப்பொன்று வழங்கியுள்ளது.
அந்த வழி முறைகளின் (Guide Lines) படியே ஹஜ் கோட்டா பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். ஆனால் இவ்வருடம் கோட்டா புதிய முறையில் கையாளப்பட்டுள்ளது.
தெரிவு செய்யப்பட்டுள்ள முகவர் நிலையங்களுக்கு உரிய கோட்டா விபரம் கடித மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. 31 முகவர்களுக்கு 100, 59 முகவர்களுக்கு 50, 7 முகவர்களுக்கு 25 என கோட்டா அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இம்முறை 2240 கோட்டாவே கிடைத்துள்ளது.
கோட்டா நேரடியாக முகவர்களுக்கு வழங்கப்படவில்லை.
திறந்த சந்தையில் விடப்பட்டுள்ளது.
ஹஜ் யாத்திரிகர்களே முகவர்களை தேடிச் செல்லவேண்டியுள்ளது. இதனால் எல்லா பிரதேசங்களிலும் உப முகவர்கள் செயற்பட்டு யாத்திரிகர்களின் கடவுச்சீட்டினை சேகரிக்கிறார்கள். உப முகவர்கள் தங்களுக்கு ஒரு கமிஷனை ஒதுக்கிக் கொண்டு யாத்திரிகர்களை முகவர்களிடம் ஒப்படைக்கும் நிலைமை உருவாகியுள்ளது. இதனால் முகவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
ஆனால் இதற்கு முன்னைய வருடங்களில் நேர்முகப் பரீட்சையில் முகவர் நிலையங்கள் பெற்றுக் கொள்ளும் புள்ளிகளுக்கு அமைவாகவே கோட்டா பகிரப்பட்டது. இம்முறையே சிறந்த முறையாகும். அதனாலே இந்த உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள வழிகாட்டலை பின்பற்றி கோட்டாவை முகவர்களுக்கு பகிர்ந்து வழங்குமாறு நாம் கோருகிறோம் என்றார்.
ஹஜ் யாத்திரிகர்களின் நலனில் நாம் அக்கறை கொண்டுள்ள அதேவேளை தகுதிக்கும் நேர்முகப் பரீட்சையில் பெற்றுக் கொள்ளும் புள்ளிகளுக்கும் அமைவாக கோட்டா வழங்கப்பட வேண்டும். என்கிறோம் என்றார்.
முஸ்லிம் சமயவிவகார மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீமைத் தொடர்பு கொண்டு இது தொடர்பில் வினவியபோது பின்வருமாறு பதிலளித்தார்.
நீதிமன்றத்திலிருந்து எவ்வித அறிவித்தலும் எமக்குக் கிடைக்கவில்லை. இவ்வருடத்துக்கான ஹஜ் ஏற்பாடுகள் திட்டமிட்டு அனைவரும் நன்மை பெறும் வகையிலே வடிவமைக்கப்பட்டன. 2013 ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் வழங்கிய ஹஜ் வழிமுறை முழுமையாகக் கையாளப்பட்டுள்ளது. நீதிமன்றம் வழங்கியுள்ள வழி முறை ஒரு போதும் மீறப்படவில்லை.
தகுதியான சுயாதீன குழுவொன்றே ஹஜ் முகவர்களுக்கான நேர்முகப் பரீட்சையை நடத்தியது.
ஹஜ் குழுவிலும் திறமையான தகுதியானவர்களே பதவி வகிக்கின்றனர். ஹஜ் ஏற்பாடுகளில் முன்னைய காலங்களில் போன்று அரசியல் சலுகைகள் வழங்கப்படவில்லை.
ஹஜ் யாத்திரிகர்கள் தமக்கு விருப்பமான முகவர்களைத் தெரிவுசெய்துகொள்வதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. முகவர்களின் கட்டண விபரமும் யாத்திரிகர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால் இவ்வருடம் ஹஜ் கட்டணத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. சிறந்த சேவையினை வழங்கக்கூடிய முகவர் நிலையங்களையே யாத்திரிகர்கள் தேடிச் செல்கின்றனர்.
முகவர்கள் ஹஜ் யாத்திரிகர்களுக்கு சிறந்த சேவை வழஙக வேண்டுமென்பதே எனது குறிக்கோளாகும். சில முகவர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொழிலிலும் இரத்தினக்கல் வியாபாரம், மின்சார உபகரணங்கள், வர்த்தகம் போன்றவற்றிலும் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறான முகவர்களை யாத்திரிகர்கள் நிராகரிக்கின்றனர்.
கடந்த காலங்களின் ஹஜ் ஏற்பாடுகள் சிறந்ததா இவ்வருட ஹஜ் ஏற்பாடுகள் சிறந்ததா என்று மக்கள் தீர்மானிப்பார்கள். மக்களின் தீர்ப்பே முக்கியமானதாகும் என்றார்.

Better way is individually perform the haj. If it goes to agents it will be always like a municipal council or fish market. Fighting or courts order. As our agents r only for money.
ReplyDeleteif the court order to stop all hajj cotta of this year what will do the agent therefor there should be some contrition we are in non Muslim country if we cant take good solution for this how we can solve other problem any ageists if there aim is only money it better to leave this job because all agents are answerable day after tomorrow front of almighty alla
ReplyDeleteThey are doing business on religious matters particularly on Hajj. Don't be so greedy. Don't take community matters to courts always. This type of practices are continuing every year. What a low tactics they are carrying out. Fear Allah!
ReplyDeleteஏன் ஹஜ்கோட்டாவுக்கு இவ்வளவு பிரச்சினை?இவர்கள் வழக்குதாக்கல் செய்து பணம் செலவு செய்வது மக்களுக்காகவா!?
ReplyDeleteஇல்லை! எனவே வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படுவது சகஜம் வேறுவழியில் பிழைக்கலாம்.
ஹஜ் முகவர் தொழில் என்பது மார்க்க அடிப்படையில் ஆகுமாக்கப்பட்டது என்றாலும் அவர்களில் பெரும்பான்மையானோர் கெள்ளை லாபம் ஈட்டுவதிலேயே குறியாக இருக்கிறார்கள். எல்லா முகவர்களும் ஒரே சேவையை ஹாஜிகளுக்கு கொடுப்பதில்லை..மற்றைய முகவர்களது சேவை அதற்கான கட்டணம் என்பவற்றை ஒப்பீடு செய்யும் போது தான் அவர்களது பேராசை புலப்படும்.
ReplyDeleteமேலும், கடந்த 4 வருடங்களாக நீதி மன்றம் செல்லும் இந்த ஹஜ் விடயத்தை சற்று ஆராய்ந்து பார்க்கும் போது , மனுதார ர்களான முகவர்களே வெற்றியும் ஈட்டுயுள்ளனர்.. ஆகவே இதில் புலப்படுவது யாதெனில், ஹஜ் அமைச்சினதும் , ஹஜ் கமிட்டியினதும் பக்கச்சார்பான, மற்றும் தமது அபிமானிகளுக்கு முகவர் அந்தஸ்த்தை முறைகேடாக பெற்றுக் கொடுத்தல் போன்ற அரசியற் போக்கும் காரணமாய் அமையலாம் என எண்ணத் தோன்றுகிறது. (இவ் வருட புதிய முகவர்கள் பட்டியலை அவானித்தால் உண்மை புரியலாம்)...
இங்கு அமைச்சரின் சேவையாக கட்டணக் குறைப்பை பாராட்டும் நாம் , அதனால் ஹஜ் செய்யப் போகும் எமது யாத்திரிகர்கள் எதிர் நோக்கப் போகும் சேவை ரீதியான குறைகளை கண்டு கொளவதில்லை..
LESS PRICE + standard PROFIT= LESS QUALITY IF service
எல்லா முகவர்கள் நிலையங்களும் இந்த வியாபாரத்தை குறிப்பிட்ட இலாபத்தை நிறுவிக் கொண்டே தமது கட்டணத்தை அறவிடுகின்றன.
இங்கு விலை குறைக்கப்படும் போது சேவையின் தரம் குறையும் என்பதில் எயம் ஏதுமில்லை.. இந்த சேவை குறைப்பு பற்றி , ஹஜ் முடிந்த பிற்பாடு , திணைக்களத்தில் முறையிட்டாலும் பலனளிக்கப் போவதுமில்லை.. ஏன் ,, சென்ற வருடம் பிரசித்தி பெற்ற முகவர்கள் இருவர் அடங்கலாக 10 பேரின் மேல் அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் அவர்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை யாது?? அவர்களுக்கும் இம்முறை 100 கோட்டா....
சுருக்கமாக ஹஜ்ஜுக்கு பொறுப்பான வரும் எல்லா அமைச்சர்களும் மற்றும் ஹஜ் கமிட்டியும் அரசியல் லாபத்திற்காகவும் , காழ்ப்புணர்ச்சிகளோடும் ஹஜ் விடயத்தை அணுகுகின்றனர் என்றால் ,, முகவர்கள் இலாபத்தையும் தாண்டி கொள் ளை லாபம் நோக்கியே தம்மை நகர்த்திக் கொண்டிருக்கின்றனர்..
மக்களுக்கு உணவளித்தல், யாத்திரிகர்களுக்கு வழிகாட்டல், ஹஜ் கிரியைகளை இலகுவாக்குவதில் பங்களிப்பு செய்தல், பயண ஏற்பாடுகளை செய்தல், போன்ற பல்துறை தொழில்களை ஒருங்கிணைக்கும் வியாபாரமான இந்த முகவர்த் தொழிலை கண்ணியமானவர்களுக்கும் கல்வித்தேர்ச்சி பெற்ற தலைமைத்துவ ஆளுமை மிக்கவர்களுக்கும் வழங்க வேண்டும் எனபதோடு எந்தவொரு வியாபாரத்தையும் மன சாட்சியுடன் நிறைவேற்றினால் வாழ்க்கையில் "நிஃமத்தையும் தாண்டி " றஹ்மத்தை அடைய முடியும்..
This comment has been removed by the author.
ReplyDeleteWhat actually is the problem in performing Hajj individually as in the good old days?
ReplyDeleteIt has become a corrupted business and the so called agents fighting like dogs for bones.
எல்லா கொள்ளையர்களும் படைத்தவன் அல்லாஹ்வைப் பயந்து கொள்ளட்டும்.
ReplyDeleteAfter lot of hardwork lenghty study several discussions with ds concern parties pilgrims n agencies Hon.Min.Haleem n his privat secretary Mr.Fahimalong with haj board members found a workabal solution to haj matters.Any solution cannot b 100% correct.There may b shotcomings but this looks a best solution for both parties.So v forget our egos n pray make dua for our minister n his private sec.Mr.Fahim n for da board members for their dedicated services.
ReplyDeleteVery sad, one of the Islamic ibadha is a business item for some people and some ulama . This must be changed and Muslim come forward to help each other in doing Ibadha. First mavlavi's need to change first this is my opinion.
ReplyDelete