Header Ads



மலசலக்கூடம் செல்லாதவர்களே, ஆளுங்கட்சியுடன் இணைவார்கள் - விதுர

அமைச்சுப் பதவி இல்லாமல் நித்திரை கொள்ளாத, மலசலக்கூடம் செல்லாதவர்களே ஆளுங்கட்சியுடன் இணைந்துக்கொள்ள முனைவதாக பாராளுமன்ற உறுப்பினர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் ஒப்பந்தங்களின் சொர்க்கப்புரியாக பாராளுமன்றம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தான் நினைக்கவில்லை ஒன்றிணைந்த எதிர்கட்சியில் உள்ள அனைவரும்ஒன்றிணைந்த எதிர்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பதவிகளுக்காகவும், பணத்துக்காகவுமே பலர் இவ்வாறு கட்சி விட்டு கட்சி தாவ எத்தனிப்பதாகவும் தெரிவித்துள்ள அவர் ஒன்றிணைந்த எதிர்கட்சியின் மூத்த உறுப்பினர்கள் அவ்வாறு செய்யமாட்டார்கள் என எண்ணுவதாகவும், ஆளுங்கட்சி பக்கம்செல்ல இருப்பவர்களைப் பற்றி தான் கவலைப்படவில்லை என்றும் விதுர விக்கிரமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் பலருக்கு அமைச்சுப் பதவி இல்லாமல் நித்திரையும் வராது, மலசலகூடம் செல்லாத பலரே பாராளுமன்றில் அங்கம் வகிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2 comments:

  1. IVARUKU OVARA POUTHU INYA MAATARU ARASIL

    ReplyDelete
  2. if mps dont go to bathroom want to be ministers. mr. vidura you with rakapakse went to bathroom too much

    ReplyDelete

Powered by Blogger.