பிச்சை எடுப்பதற்காக, பேரனை கடத்திய தாத்தா
அனுராதபுரம் பிரதேசத்தில் பிச்சை எடுப்பதற்காக தன் பேரப்பிள்ளையை கடத்திச்சென்ற தாத்தாவை அனுராதபுரம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொசன் போயா தினத்தை முன்னிட்டு பிச்சை எடுப்பதற்காகவே குறித்த சிறுவனைதாத்தா கடத்திச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவனை பிச்சை எடுக்க அழைத்துச் செல்வதற்காக பல முறை சிறுவனின் தந்தையிடம்கூறியுள்ளார்.
ஆனால் சிறுவனின் தந்தை இதற்கு மறுத்ததன் காரணமாகவே யாரும் இல்லாதநேரமாக பார்த்து கடத்திச் சென்றுள்ளதாகபொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சிறுவனின் பெற்றோர் பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டிற்கு அமையவே சிறுவனைஇனங்கண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபரை நீதிமன்றம் முன்னிலையில் இன்று ஆஜர்ப்படுத்த இருப்பதாக பொலிஸார்கூறியுள்ளனர்.

Post a Comment