Header Ads



"மினாராக்களை நிறுவி இலங்கை ஓர் முஸ்லிம் நாடு என, சர்­வ­தே­சத்­துக்கு அடை­யா­ளப்­ப­டுத்த திட்­ட­ம்"

-விடிவெள்ளி ARA.Fareel-

முஸ்­லிம்கள் இலங்­கையில் பள்­ளி­வா­சல்­களின் கோபு­ரங்­களை (மினாரா) உய­ர­மாக நிறுவி இலங்கை ஓர் முஸ்லிம் நாடு என சர்­வ­தே­சத்­துக்கு அடை­யா­ளப்­ப­டுத்த திட்­ட­மிட்டு செயற்­ப­டு­கி­றார்கள்.

கண்டி லைன் பள்­ளி­வா­சலின் கோபுர நிர்­மாணம் இதற்கு உதா­ர­ண­மாகும் என சிங்­ஹலே அமைப்பு தெரி­வித்­துள்­ளது.

கண்டி லைன் பள்­ளி­வா­சலில் நிர்­மா­ணிக்­கப்­பட்டு வரும் மினா­ரா­வுக்கு எதிர்ப்பு தெரி­வித்து சிங்­ஹலே பொது­ப­ல­சேனா உட்­பட பல அமைப்­பு­களைச் சேர்ந்த தேரர்­களும் பொது மக்­களும் ஆர்ப்­பாட்­ட­மொன்­றினை நடாத்­தினர்.

மினாரா நிர்­மா­ணத்தை உடன் நிறுத்­தும்­படி கோஷங்கள் எழுப்­பினர். எதிர்ப்பு ஆரப்­பாட்டம் தொடர்பில் கருத்து ஊடகங்களுக்கு வெளி­யி­டு­கை­யிலே சிங்­ஹலே அமைப்பின் செய­லாளர் மெதில்லே பஞ்­சா­லோக தேரர் இவ்­வாறு தெரி­வித்தார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில், 

கண்டி நகரில் அமைந்­துள்ள தலதா மாளி­காவ உலக மர­பு­ரிமைச் சின்­ன­மாகும். தலதா மாளி­காவின் உய­ரத்­தினை விடவும் பள்­ளி­வா­சலின் கோபுரம் உய­ர­மாக அமைப்­ப­தற்கு திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது.

இதனை ஒரு­போதும் அனு­ம­திக்க முடி­யாது. இத­னா­லேயே நாம் இதனை எதிர்க்­கிறோம். இந்தக் கோபுரம் அமைப்­ப­தற்­கான சட்­ட­ரீ­தி­யான அனு­ம­தியும் பெற்றுக் கொள்­ளப்­ப­ட­வில்லை.

மகா­நா­யக்க தேரர்­களும் மக்­களும் இதனை விரும்­ப­வில்லை. கண்டி மாநகர விசேட ஆணை­யாளர் நிர்­மா­ணப்­ப­ணி­களை நிறுத்­தி­யுள்ளார்.

என்­றாலும் சில­வேளை சிறிது கால இடை­வெ­ளியின் பின்பு மீண்டும் கோபுரம் அமைக்கும் பணிகள் ஆரம்­பிக்­கப்­ப­டலாம். அதனால் சிங்­ஹலே அமைப்பு இது­வி­ட­யத்தில் எதிர்­கா­லத்தில் அவ­தா­னத்­துடன் இருக்கும்.

இது­வி­ட­ய­மாக நாம் மகா­நா­யக்க தேரர்கள், கண்டி நகர மக்கள், வர்த்­த­கர்கள் அனை­வ­ரையும் தெளி­வு­ப­டுத்­தி­யுள்ளோம். தலதா மாளி­கை­யி­லி­ருந்தும் 200 மீற்றர் தூரத்­தி­லேயே இந்தப் பள்­ளி­வாசல் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்­ளது.

நாட்டில் பௌத்த மத தலங்­க­ளுக்கு அருகில் உய­ர­மாக பள்­ளி­வா­சல்கள் நிர்மாணிக்கப்படுவதாலே பிரச்சினைகள் எழுகின்றன.

இவ்வாறான செயற்பாடுகள் பௌத்த நாட்டை ஒரு முஸ்லிம் நாடாக சர்வதேசத்துக்கு எடுத்துக்காட்டும் முயற்சி என்றே சிங்ஹலே  கருதுகிறது என்றார்.

8 comments:

  1. முஸ்லிம்களை காட்டி காட்டித்தான் அரபு நாடுகளில் பிச்சை எடுப்பது இதை முஸ்லிம்பாராளுமன்ற உறுப்பினர்கள் அரபு நாடுகளின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் இன்னும் இன்னும் கூனிக்குறுகி கும்பிடு போடாமல் தலை நிமிர்ந்து அரச, தலைவர்களிடம் உறப்பாக பேச வேண்டும் நல்லாட்சி என்று சொல்லி இந்த நாட்டில் நல்லது நடந்ததாக தெரியவில்லை

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்! ஒன்றும் தேவையில்லை அரபு நாடுகளில உள்ள இலங்கையர்களை திருப்பி அனுப்பினாலே போதும்.
      நம் அரசியல்வாதிகள் நாய்கள் இறைச்சி முல்லுக்கு அழைவது போல் அரசியல் கதிரைக்காக எதையும் செய்வார்கள்.

      Delete
  2. மினாரா கூடுமா? கூடாதா? என்று நமது சகோதரர்கள் பேசிக் கொள்கிறார்கள். ஆனால் தலதா மாளிகையைவிட பள்ளிவாயல் உயர்ந்துவிடும் என்பதுதான் எதிர்ப்பாளர்களின் பிரச்சனை. எங்கேயாவது குழப்ப அவர்கள் சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு சிறிய விடயம் சாதகமாகிவிட்டால் அதைவைத்து ஊதிவிடுவார்கள். இப்போது அவர்களுக்கு கிடைத்திருப்பது கண்டி பள்ளிவாயலின் மினாரா. மினாரா இஸ்லாமிய அடையாளச் சின்னங்களில் ஒன்று. இதைக் கட்டாமல் ஆக்கிவிட்டால் அவர்களுக்கு ஒரு புதுத்தெம்பு ஏற்பட்டுவிடும். அதேவேளை பிரச்சனையும் வரக்கூடாது. ஆனால் உயரத்தில் குறைவாக மினாராவை நிர்மானிப்பது என கண்டி பள்ளிவாயல் சம்மேளனம் தீர்மானித்திருக்கிறது. இவ்வாறு குறைவாகக் கட்டுவதால் எதிர்ப்பாளர்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் ஒரேயடியாக அதைக் கட்டாமல் தடுத்துவிட்டால் அவர்கள் வெற்றி பெற்றதாக நினைத்துக் கொள்வார்கள். அந்த வெற்றியுடன் மேலும்பல விடயங்களைத் தடுக்க முயற்சி செய்வார்கள். எனவே நோன்பு முடியும் வரை எந்தப் பிரச்சனையும் போடாமல் நோன்பு முடிந்த பின்னர் தலதா மாளிகையைவிட உயரம் குறைவாகக் கட்ட முயற்சி எடுக்கலாம்.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. Hehe உலகத்தில் உள்ள மற்றவர்கள் இந்த " மோட சினஹலே" யைப்போல் மடையர்கள் என நினைத்துவிட்டார்களா??
    மினாரா கட்டிவிட்டால் இலங்கை முஸ்லிம் நாடு என நம்புவதற்கு அவர்கள் கேனக்கிறுக்கிறர்லல்ல.

    ReplyDelete
  5. Thangalai kinattuth thavalaikal enru meendum nirupiththullarkal.Kavi udaiyum moddanththalaium avarkalin adavadiththanaththukku kavasam.Singala inaththin kavalarkal ivarkal alla alla. Maraka Singala inaththai thalai kuniya vaipavarkal. Ivarkalai sariyana idaththil vaiththa thesaththalaivar maraintha Sir.Jhon.Kottalawala.Avarukku emathu salute.

    ReplyDelete
  6. Yaaro oru koottam ivanugalukku thittam pottu ideas cudukkuranga !!! Iwargal eppadi sayalpada !! ??

    ReplyDelete
  7. Sinhaleta berivechchadeya maa reka le Kerala thiyana ithihasaya amathaka karanna epaa.

    Do not forget the history of the Muslim lady who sacrificed her life to save a king in Sri Lanka.

    Singaththin reththame, nee singala mannanaik kaaththa reththathai maranthu vittayo.

    ReplyDelete

Powered by Blogger.