Header Ads



டொனால்டு டிரம்ப் ஏமாற்றுப் பேர்வழி - ஹிலாரி கிளின்டன் சாடல்

அமெரிக்க அதிபர் பதவி வேட்பாளர் டெனால்டு டிரம்ப் மோசடி பேர்வழி என்றும் அமெரிக்கர்களை ஏமாற்ற முயற்சித்து வருகிறார் என்றும் ஜனநாயக  கட்சியின் அதிபர் பதவி வேட்பாளரான ஹிலாரி கிளின்டன் கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 8ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி  அதிபர்  வேட்பாளரை தேர்வு செய்ய ஆளும் ஜனநாயக கட்சி, குடியரசு கட்சியில் உட்கட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. குடியரசு கட்சியில் 16 மூத்த தலைவர்கள்  களத்தில் இருந்தனர். இவர்களைவிட அதிக பிரதிநிதி வாக்குகள் பெற்றுள்ள ரியல் எஸ்டேட் தொழிலதிபரான டொனால்டு டிரம்ப் அதிகாரபூர்வ அதிபர் வேட்பாளராக  அறிவிக்கப்படவுள்ளார். இதே போன்று  ஜனநாயகக் கட்சியின் சார்பில் ஹிலாரி கிளின்டன் அதிகாரப்பூர்வ அதிபர் வேட்பாளராக விரைவில் அறிவிக்கப்படவுள்ளார்.  இதனிடையே, டிரம்ப் தொடங்கிய பல்கலைக்கழகம் மீது வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. 

அதில் பணியாற்றிய ஊழியர்களுக்கு சம்பள நிலுவை உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த பல்கலைக்கழகம் இப்போது செயல்படவில்லை. இந்நிலையில் தேர்தல்  பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், வார்த்தை போரில் இவர்கள் இருவரும் இறங்கியுள்ளனர். நியூஜெர்சி பிரசாரத்தில் ஹிலாரி பேசியதாவது: 

பல்கலைக்கழகத்தை  போன்று அமெரிக்க  மக்களையும் டெனால்டு டிரம்ப ஏமாற்றப் பார்க்கிறார். அவர் என்ன செய்துள்ளார் என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். நியூயார்க்  அட்டர்னி ஜெனரல் மோசடி குற்றச்சாட்டை டிரம்ப் மீது சுமத்தி வழக்கு தொடர்ந்துள்ளார்.

டிரம்ப், தனது ஊழியர்களையும் அமெரிக்கர்களையும் நன்கு ஏமாற்றியுள்ளார். கிரெடிட் கார்டை வாங்க கட்டாயப்படுத்தி, ஊழியர்களின் ஓய்வூதியங்களை  கரைத்துள்ளார். அவர்களின் எதிர்காலத்தை பாழடித்துள்ளார். டிரம்ப் ஒரு ஏமாற்று பேர்வழி. இதை அமெரிக்கர்கள் உணர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.  இதற்கு பதிலடியாக சாக்ரமென்டோவில் நடந்த பிரசாரத்தில் உரையாற்றிய டிரம்ப், ‘‘68 வயதான ஹிலாரிக்கு அதிபர் ஆவதற்கான எந்த தகுதியும், திறமையும்  கிடையாது. நேர்மையாக கூறினால் ஹிலாரி அதிபர் பதவி வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்க கூடாது. நமது நாட்டின் சட்டத்துக்கு இழைக்கப்பட்ட அவமதிப்பு இது’’  என்றார்.s

No comments

Powered by Blogger.