ஜனாதிபதி முன் றிசாத் - விக்கினேஸ்வரன் மோதல்
வவுனியாவில் பொருளாதார மத்திய நிலையம் அமைப்பது தொடர்பில் அமைச்சர்களான றிசாட், ஹரிசன் ஆகியோர் தெரிவித்த கருத்துக்களுக்கு முதலமைச்சர் ஆவேசமாக பதிலளித்துள்ளார்.
கபினட் அமைச்சரவைக் கூட்டம் இன்று -21- ஜனாதிபதி மற்றும் பிரதமர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அவர்களும் கலந்து கொண்டார்.
இதன்போது வவுனியா பொருளாதார நிலையம் அமைப்பதற்கு பொருத்தமான காணி வழங்கப்படாமையால் திட்டத்தை மதவாச்சிக்கு மாற்ற அனுமதி வழங்குமாறு கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் ஹரிசன் அமைச்சரவையிடம் கோரியுள்ளார்.
இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர், இத்திட்டத்திற்கு பொருத்தமான காணிகள் எம்மால் வழங்கப்பட்டன. ஆனால் அக் காணிகள் தொடர்பில் ஏதோதோ காரணங்களைக் கூறி தட்டிக் கழிக்கப்பார்கிறீர்கள்.
முதலில் இவ்வாறான திட்டங்களை வடக்கில் அமைக்க அமைச்சருக்கு விருப்பம் இருக்கா என தெரிந்து கொள்ள விரும்புகின்றேன். அமைச்சரால் கோராப்பட்ட தாண்டிக்குளம் காணி பொருத்தமில்லை என துறைசார் நிபுணர்கள் கூறுகிறார்கள்.
இதனால் மாற்றுக் காணியை வழங்கியுள்ளோம். நகரில் கூட ஒரு காணியை வழங்கியுள்ளோம் என முதலமைச்சர் தெரிவித்த போது அமைச்சர் ஹரிசன் நகரில் தந்த மற்றைய காணி நீண்டகால குத்தகையில் வழங்கப்பட்டுள்ளது. அதனை பெற முடியாது எனத் தெரிவித்தார்.
இதற்கு தொடர்ந்து பதிலளித்த முதலமைச்சர், அந்தக் காணி குத்தகைக்கு வழங்கப்படவில்லை. அந்த காணி தொடர்பாக பரிசீலித்து பார்த்தேன். அது தற்போதும் அரச காணியாகவே உள்ளது என பதிலளித்தார்.
இதன்போது குறுக்கிட்ட அமைச்சர் ரிசாட், இத் திட்டத்தை தாண்டிக்குளத்தில் அமைக்க வடமாகாண சபை முடிவெடுத்து விட்டது. முதலமைச்சர் தான் இதை குழப்புகிறார் எனத் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த முதலமைச்சர், வவுனியாவில் இடம்பெறும் குழப்பங்களுக்கு எல்லாம் காரணம் ரிசாட் அமைச்சர் தான். அதை நான் இங்கு விபரமாக குறிப்பிட விரும்பவில்லை. ஆனால் நாம் பொருத்தமான காணியை வழங்கியுள்ளோம் எனத் தெரிவித்தார்.
இக்குழப்பத்தை பார்த்த ஜனாதிபதி, இவ்விடயம் தொடர்பில் முதலமைச்சரையும் பிரதமரையும் கலந்துரையாடி ஒரு வாரத்திற்குள் சாதகமான முடிவெடுக்குமாறு தெரிவித்துள்ளார்.

Chief.minister.c.v.nermaianavar.neethiyakaththan.natappar.avarukku.avaraipatti.evanukkum.arukathai.ellai
ReplyDeleteArguing is a common thing in the all departments and offices even in the class room also, Any of them admitted in the hospital because of this fight. There is nothing to take this news as serious. When this news come on the election period some of the politicians get votes very easily from the people who has only five sense instead of six sense
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteAll politicians are public servants.Not their king or Queen.so anyone can criticise any politician.
ReplyDeleteWhy are these back-door ministers putting their nose into NPC affairs?
ReplyDelete