பத்ர் யுத்தமும், அது கற்றுத்தரும் பாடங்களும்..!!
-ஆக்கம் அபூ உமர் அன்வாரி-
இஸ்லாம் ஆயுதப்பலத்தால் இன்றி.தன்னகத்தே தனித்துவமாக கொண்டமைந்த மானிட சமூகத்துக்கே தனித்து உரித்தான உயர் பண்புகளான நற்பண்டு, அன்பு, கருனை, தியாகம் ஆகியவற்றினால் இதன் கிளைகள் வானை தொட்டுக்கொண்டி ருக்கின்றன.என்றால் அது மிகையாகாது.இதன் தூதுவர் ஒரு குருடரை விட்டு முகத்தை திருப்பியதற்காக அவரை தராதரம் பார்க்காது அல்லாஹ் அவரின் செயற்பாடு பிழை என அவரை கண்டித்து குர்ஆன் வசனத்தை இறக்குகின்றான். இன்னும் தன்னை அடித்து தும்புறுத்தி இரத்தமோட்டியவர்களை அழிக்க வானவர்கள் அனுமதி கேட்க, கருனையின் வெளிப்பாட்டினை வார்த்தைகளால், “இல்லை வேண்டாம், இவர்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் இவர்களின் சந்த்தியினர் இஸ்லாத்தினை ஏற்றுக்கொள்வர் என”.உலகத்திற்கு அன்பின் தேவையை உணரத்துகின்றார்.அல்லாஹ் இவர்களைப்பற்றி குறிப்பிடும் போது. “அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக (கனிவாக) நடந்து கொள்கிறீர்; (சொல்லில்) நீர் கடுகடுப்பானவராகவும், கடின சித்தமுடையவராகவும் இருந்திருப்பீரானால், அவர்கள் உம் சமூகத்தை விட்டும் ஓடிப்போயிருப்பார்கள்; எனவே அவர்களின் (பிழைகளை) அலட்சியப்படுத்தி விடுவீராக; அவ்வாறே அவர்களுக்காக மன்னிப்புத் தேடுவீராக; தவிர, சகல காரியங்களிலும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்யும்; பின்னர் (அவை பற்றி) நீர் முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வின் மீதே பொறுப்பேற்படுத்துவீராக! - நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப் பேற்படுத்துவோரை நேசிக்கின்றான்” (3:159).மேலும் உத்தமத்துதூதரை வர்ணிக்கும் போது “(முஃமின்களே!) நிச்சயமாக உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார்;நீங்கள் துன்பத்திற்குள்ளாகி விட்டால், அது அவருக்கு மிக்க வருத்தத்தைக் கொடுக்கின்றது; அன்றி, உங்(கள் நன்மை)களையே அவர் பெரிதும் விரும்புகிறார்; இன்னும் முஃமின்கள் மீது மிக்க கருணையும் கிருபையும் உடையவராக இருக்கின்றார்” (9:128). யுகமுடிவின் ஒரு முக்கிய கட்டத்தில் ஒவ்வொரு ஆத்மாவும் தனக்காக உழைக்கும் வேளை “எனது சமூகமே” “எனது சமூகமே” என அல்லாஹ்விடத்தில் இறைஞ்சுவார்கள் இவ்வுலகிலும் மறுவுலகிலும் தனது சமூகத்திற்காக பாடுபடும் உத்தம தியாகியும், கருணையும் கொண்ட அல்லாஹ்வின் தூதர், மனிதர்களை வாளால் வெட்டி அவர்களை பயமுறுத்தி அதிகாரத்தால் இஸ்லாத்தில் நுழைத்து அதிகாரம் செலுத்த முற்படவில்லை.என்பது மிகத்தெளிவான உண்மை.இத்தைய செயற்பாடு அவருக்கும் அவரை துயர்ந்தவர்களுக்கும் தடுக்கப்பட்டதாகவே இருக்கின்றது.அல்லாஹ் குறிப்பிடும் போது “(இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை; வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது; ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் - அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும் இருக்கின்றான்”. (2:256).
இஸ்லாம் தனக்கு தெறிந்தவற்றை பிறருக்கு பயனுடையதாக அமைத்துக் கொள்ளுமாறு தூண்டுகிறது. கட்டளையிடுகிறது. இதன் அடிப்படையில் ஒரு விசுவாசி அறிந்தவற்றில் பாரியதும் மிகப்பயனுள்ளதும் இஸ்லாம் அதை ஏனையவர்கள் மீது கொண்டுள்ள அன்பின் வெளிப்பாடாக அதை எத்திவைக்கின்றனர் மாறாக எவர்மீதும் இஸ்லாத்தை தினிக்க எவருக்கும் இஸ்லாம் அனுமத்கிக்கவில்லை.இது இவ்வாறு இருக்க இஸ்லாமிய யுத்தங்களில் பத்ர் யுத்தம் மிக முக்கியத்துவம் பெறுகின்றது. மானிட சமூகத்தின் அடிப்படை சொத்தான இஸ்லாத்தினை அழித்து அதன் மூலம் குளிர்காய முற்பட்ட விரோதிகளுக்கும். அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்ட தியாக உத்தமர்களின் தியாகமும் இதன் போது வெளிப்படுகின்றன.
பத்ர் யுத்தம் ஹிஜ்ரி 02/09/02 அதாவது கி.பி 624/03/13. பத்ர் எனும் இடத்தில் இடம்பெற்றது.இஸ்லாத்தில் முதல் யுத்தமும் இதுவாகும்.இது பல பாடங்களை கற்றுத்தருகின்றது.மனித சமூகத்தின் அடிப்படை உரிமைக்கான போரும், இவ்வுரிமையை அழிக்க நினைத்த அக்கிரமக்காரர்களுக்கும் எதிரான யுத்தம், மாறாக இஸ்லாத்தை வாளால் பறப்ப முற்பட்ட ஒரு போராட்டமல்ல.இதில் முஸ்லிம்கள் சுமார் முன்னூறு நபர்களாகவும் எதிரிகள் ஆயிரம் நபர்களும் அவர்கள் தயார் நிலையிலிருந்த போர் வீரர்களுமாவர்.இதன் போது அல்லாஹ்விடத்தில் நம்பிக்கை இழக்காது அவன் பக்கம் மீண்டனர்.இறுதியாக இப்போர் முஸ்லிம்களுக்கு தற்காப்பாகவும் காபிர்கள் தமது பெறுமையை வெளிப்படுத்துவதாகவும் அமைந்தது. இறுதியாக அல்லாஹ்வின் வெற்றி உண்மையின் பக்கம் சாய்ந்தது. அல்லாஹ் குர் ஆனில் குறிப்பிடும் போது. ”நீங்களும் அவர்களும் (போரில்) சந்தித்தபோது அவன் உங்களுடைய பார்வையில் அவர்களுடைய எண்ணிக்கையைக் குறைவாகக் காண்பித்தான்; இன்னும் உங்கள் (தொகையை) அவர்களுடைய பார்வையில் குறைவாகக் காண்பித்தான் - இவ்வாறு அவன் செய்தது, அவன் விதித்த ஒரு காரியத்தை அவன் நிறைவேற்று வதற்காகவேயாகும் - அல்லாஹ்விடமே எல்லாக் காரியங்களும் சென்று முடிவடைகின்றன. (8:44). இதன் போது நபித்தோழர்களின் தியாகம் அளப்பரியது. அவர்கள் நபிகளாருக்கு பக்க பலமாக இருந்தனர். அவர்களின் கூற்றுக்கள் அழியாதவை.அது “அல்லாஹ்வின் தூதரே நீரும் உமதிறைவனும் முதலில் போர் செய்யுங்கள் உங்களுக்கு பின்னால் நாமும் வருகின்றோம்”,மாறாக மூஸா (அலை) அவர்களின் “சமூகம் நீரும் உமதிறைவனும் போர் புரியுங்கள் நாம் அமர்ந்து இருக்கின்றோம்” என நாம் சொல்ல மாட்டோம். அல்லாஹ் இதை குறிப்பிடும் போது குறிப்பிடும் போது அவர்கள்- “மூஸாவே! அவர்கள் அதற்குள் இருக்கும் வரை நாங்கள் ஒரு போதும் அதில் நுழையவே மாட்டோம்; நீரும், உம்முடைய இறைவனும் இருவருமே சென்று போர் செய்யுங்கள். நிச்சயமாக நாங்கள் இங்கேயே உட்கார்ந்து கொண்டிருக்கிறோம்” என்று கூறினார்கள்.( 5:24).முஹம்மத் (ஸல்) அவர்களது சமூகத்தின்.இத்தியாகத்தின் வெளிப்பாடு அழியாப் புகழ்பெற்றது.தியாகம் என்பது ஒரு முஸ்லிமின் அழியாச்சொத்து.ஒரு நன்மையை செய்யவும் தீயதை விடவும் தியாகம் பொறுமை கட்டாயம்.ஒரு விசுவாசியிடம் மாத்திரம் தான் காணப்படும். பொறுமையும் அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் கட்டுப்படல் வெற்றிகளுக்கு வழிவக்குக்கும். அல்லாஹ் குறிப்பிடும் போது. “இன்னும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் - நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள்; (அவ்வாறு கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள்; உங்கள் பலம் குன்றிவிடும்; (துன்பங்களைச் சகித்துக் கொண்டு) நீங்கள் பொறுமையாக இருங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பொறுமை யுடையவர்களுடன் இருக்கின்றான்” (8:46).இதில் அல்லாஹ் மகத்தான வெற்றியை அளித்தான்.அல்லாஹ் குறிப்பிடும் போது “பத்ரு” போரில் நீங்கள் மிகவும் சக்தி குறைந்தவர்களாக இருந்த போது, அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிந்தான்; ஆகவே நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள் (3:123)அல்லாஹவுக்கு அஞ்சிவாழ்வதுஅவனுக்கு நன்றி செலுத்துவதில் உள்ள ஒரு விடயமாகும். மனிதனின் அறிவானது பலவீனமானது அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.மனிதன் நல்லது என கருதும் அம்சம் அவனுக்கு தீமையாக அமையும் தநக்கு தீமை என காண்பது துன்பமாக அமையும்.இதில் இச்சிறு கூட்டத்தினர் யுத்தம் புரிவதை அவர்கள் எதிரப்பார்த்தும் இருக்கவில்லை மாறாக அல்லாஹ்வின் நாட்டம் யுத்தம் புரிவதாக இருந்தது.இருந்த போதிலும் அவர்கள் அல்லாஹ்வின் தீர்ப்பை உள்ளத்தால் பொறுந்தி கொண்டார்கள்.இதன் விளைவு பாரிய விடிவாகவும் வெற்றியாகவும் அமைந்தது.அல்லாஹ் குறிப்பிடும் போது “ போர் செய்தல் - அது உங்களுக்கு வெறுப்பாக இருப்பினும் - (உங்கள் நலன் கருதி) உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது; நீங்கள் ஒரு பொருளை வெறுக்கலாம்; ஆனால் அது உங்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கும்; ஒரு பொருளை நீங்கள் விரும்பலாம், ஆனால் அது உங்களுக்குத் தீமை பயப்பதாக இருக்கும். (இவற்றையெல்லாம்) அல்லாஹ் அறிவான், நீங்கள் அறியமாட்டீர்கள் (2:216).இந்த யுத்தமானது உலகில் இஸ்லாம் பயங்கரவாதம், ஆயுதப்பலம் இன்றி தன்னகத்தே கொண்ட தனித்துவத்தை கொண்டு பரந்து வியாபித்தது என்பதற்கு மிகப்பெரிய சான்று.ஆயுதப்பலத்தால் பரவியிருப்பின் அன்றைய காபிர்களின் கைமேலோங்கியிருக்கும்.பலம் அவர்களிடம் இருந்தது இருப்பினும் அவர்களின் அடிப்படை போலியானதாக இருந்த்து.போலியானது எத்தகைய பொலிவுடன் காணப்பட்டாலும் பொலிவிழந்து விடும்.இதுவே யதார்த்தம்.
யுத்தம் முடிவுற்ற பின் எவருக்கும் தீங்கிழைக்கப்படவில்லை.மாறாக மிக உன்னத மனிதர்களாக மதிக்கப்பட்டு மனிதாபிமானத்துடன் நடத்தப்பட்டனர்.இத்தகைய மனிதாபிமானம் மனிதாபிமானம் என்றால் என்ன என்பதை படம்பிடித்து காட்டுகிறது. இதை இன்றைய உலகு கட்டாயம் பார்க்க வேண்டிய தேவையுள்ளது.இதன் பின் இடம் பெற்ற உஹத் போரில் இவ்வாறு மனிதாபிமானம்,மனித உரிமை அனைத்தையும் பேணிய உயர்மனிதர்களை மரணித்த பின்னும் சித்தரவதைப்படுத்தி, சின்னாப் பின்னப்படுத்திய அம்சம்.முஸ்லிம்களின் எதிரிகளின் வரலற்றின் கரையாகும். இருப்பினும் இஸ்லாமிய வரலாற்றில் முஸ்லிம்கள் எத்தகைய எதிரியையும் சித்திரவதைப்படுத்திய வரலாறு இல்லாது தனித்து பெறுமை கொண்டாடுகிறது.இது முஸ்லிம்களுக்கு மாத்திரமல்ல உலக்கித்திற்கே உரிய ஒரு பெறுமை என்றால் அது மிகையாகாது.
இதன் மூலம் தியாகம்,கட்டுப்படல்,ஒற்றுமை,அல்லாஹ்வின் தீரப்பை மனமாற ஏற்றுக்கொள்ளல் போன்ற பல பாடங்கள் என பட்டியல் நீண்டு செல்கின்றது.இப்பாடங்கள் படிக்கப்பட்டு வாழ்வில் வடிவம் கொடுக்கும் போது பல அழிவுகள் சீர்செய்யப்படும்.

Post a Comment