Header Ads



கழுத்தை அறுப்பதாக தெரிவித்த மஹிந்த, 82 மில்லியன் டொலர் மோசடி - ரஞ்சன்

ஒரு டொலரையேனும் மோசடி செய்திருந்து அதனை நிரூபிக்கும் பட்சத்தில் தனது கழுத்தை அறுத்து கொள்வதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தார். ஆனால் அவர் சுனாமி உதவித் திட்டத்தில் 82 மில்லியன் டொலர்களை மோசடி செய்துள்ளார் என பிரதி அமைச்சரான ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷவின் கருத்து தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த  பிரதி அமைச்சரான ரஞ்சன் ராமநாயக்க,

சுனாமி உதவி திட்ட மோசடியில் மஹிந்த ராஜபக்ஷவுடன் முன்னாள் பிரதம நீதியரசரான மொஹான் பீரிஸ் மற்றும் மத்திய வங்கியின் ஆளுநரான அஜித் நிவாட் கப்ராலும் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த மோசடிகள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அனைவர் மீதும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இதேவேளை, மஹிந்த ராஜபக்ஷ ஜப்பானிலிருந்து பொய்யான அறிக்கைகளை வெளியிடாது தாய் நாட்டிற்கு வந்து அவரின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்களுக்கு உரிய வகையில் விளக்கமளிக்க வேண்டும்.

1 comment:

  1. குற்றம் சுமத்தல்,கைது செய்தல், விசாரணை செய்தல், ஓரிரு வாரங்கள் உள்ளே அனுப்புதல் இவை தவிர வேறேதும் நடப்பதாகத் தெரியவில்லை! Why they do not go beyond these stages?

    ReplyDelete

Powered by Blogger.