பசிலின் வெளிநாட்டு நாய்களை பராமரிக்க, 6 இராணுவ வீரர்கள்
பசில் ராஜபக்ஸ பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக பதவி வகித்த கடந்த கால ஆட்சியின் போது, அவரது விலை மதிப்பான நாய்கள் இரண்டை பராமரிக்கும் பொறுப்பானது 6 இராணுவ சிப்பாய்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இராணுவ சிப்பாய்கள் பசிலின் நாய்களை பராமரித்தல், உணவுகளை வழங்குதல், மருந்து கொடுத்தல் சொல்லும் கட்டளைகளுக்கு கீழ் பணிய வைத்தல் போன்ற பயிற்சிகளை வழங்கி வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த இராணுவ சிப்பாய்கள் 'நாய் அணி' என்றும் அழைக்கப்பட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பசில் ராஜபக்ஸ கோல்டன் ரிட்ரிவர் எனும் இனத்திலான நாயை அமெரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்டதாகவும் இதன் பெறுமதி 7 இலட்சம் ரூபா என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் மற்றுமொரு நாய் இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளதோடு, இதன்பெறுமதி 2 இலட்சம் ரூபா என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இரண்டு நாய்களை பராமரிப்பதற்கே குறித்த இராணுவ அணியினர் பயன்படுத்தப்பட்டதாகவும், இந்த நாய்கள் குளிருக்கு மாத்திரமே பழக்கப்பட்டதால் பசிலின் வீட்டில் ஏசி அறையிலேயே நாய்கள் வளர்க்கப்பட்டு வந்ததாகவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை, இலங்கையில் அதிக விலையுடனான நாய்கள் இருப்பது பொலிஸ் திணைக்களத்திடமும், இராணுவத்தினரிடமும் மட்டுமேயாகும்.
எனினும் அவற்றை விடபெறுமதியான நாய்களையே பசில் ராஜபக்ஸ வளர்க்கின்றமை குறிப்பிடத்தக்கது.

What is the use of publishing this article.
ReplyDelete